PAK vs ZIM: வரட்டா மாமே.. ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய ஜிம்பாப்வே!
ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவதாக ஒரு நாள் போட்டி நடந்து வருகிறது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி அதிர்ச்சி தோல்வியடைந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவதாக ஒரு நாள் போட்டி நடந்து வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி நேற்று குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் தொடக்க வீரர்களாக ஜாய்லார்ட் கும்பி மற்றும் மருமணி ஆகிய இருவரும் களமிறங்கினர். இவர்களில் கும்பி 15 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் மறுபுறம் நன்றாக ஆடிக் கொண்டிருந்த மருமணி 29 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். இதனால் ஜிம்பாப்வே அணியை எளிதாக சுருட்டி விடலாம் என பாகிஸ்தான் ரசிகர்கள் கணித்தனர்.
Also Read: IPL Auction 2025: மீண்டும் அணியில் அஸ்வின்.. இதுவரை சிஎஸ்கே எடுத்துள்ள வீரர்கள் பட்டியல்!
ஆனால் அதன்பின்னர் களம் இறங்கிய சிக்கந்தர் ராசா 39 ரன்களும், சீன் வில்லியம்ஸ் 23 ரன்களும், பிரையன் பென்னெட் 20 ரன்களும், ரிச்செர்ட் கப்பல் 48 ரன்களும் விளாசினர். இதனால் 40 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் பைசல் அக்ரம் மற்றும் சல்மான் அலி ஆகா ஆகிய இருவரும் தலா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். மேலும் அமீர் ஜமால், முகமது ஹஸ்னைன், ஹரிஸ் ரவூப் ஆகியோரும் ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Zimbabwe stun Pakistan to take a 1-0 lead in the ODI series 🙌
📝 #ZIMvPAK: https://t.co/lBM2jgBTBj pic.twitter.com/CuKFfXSf4j
— ICC (@ICC) November 24, 2024
காத்திருந்த அதிர்ச்சி
206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் கண்டது. இந்த ஸ்கோர் எல்லாம் எங்களுக்கு ரொம்ப சுலபம் என்று ரசிகர்கள் மட்டுமல்ல பாகிஸ்தான் அணியினர் கூட நம்பி இருப்பார்கள். ஆனால் ஜிம்பாப்வே அணிக்கு உள்ளூர் மைதானம் என்பதால் ரொம்ப வசதியாக போய் விட்டது. பந்து வீச்சில் பாகிஸ்தானை சிதறடித்தது. அந்த அணியில் தொடக்க வீரராக களம் கண்ட சைம் அயூப் 11 ரன்களும், அப்துல்லா ஷபிக் 1 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து கம்ரான் குலாம் 17 ரன்களும், சல்மான் அலி ஆஹா 4 ரன்களும், ஹசிபுல்லா கான் ரன் எதுவும் எடுக்காமலும், இர்ஃபான் கான் நியாசி 7 ரன்களும் எடுத்தனர். மொத்தம் 21 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 60 ரன்கள் மட்டுமே பாகிஸ்தான் எடுத்து திணறியது. இதனால் ஜிம்பாப்வே அணி வெற்றி உறுதியானது. இதற்கிடையில் கடும் நெருக்கடிக்கு ஆளான பாகிஸ்தான் அணிக்கு அதிர்ஷ்டவசமாக மழை குறிப்பிட்டது. இதனால் சிறிது நேரம் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது கேப்டன் ரிஸ்வான் 19 ரன்களுடனும், அமீர் ஜமால் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
Also Read: Mallika Sagar: ஐபிஎல் 2025 மெகா ஏலம்.. முதல் பெண் ஏலத்தாரர்.. யார் இந்த மல்லிகா சாகர்..?
மழை நின்றவுடன் ஆட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோற்றாலும் ஓரளவு கௌரமான ஸ்கோரை பாகிஸ்தான் எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து மழைப்பொழிவு இருந்ததால் ஆட்டத்தை மீண்டும் தொடர முடியாத சூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து டக்வொர்க் லூயிஸ் முறைப்படி ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஜிம்பாப்வே அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர ஜிம்பாப்வே அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வைக்கிறது. முதல் ஒருநாள் போட்டியின் ஆட்ட நாயகனாக சிக்கந்தர் ராசா தேர்வு செய்யப்பட்டார். ஜிம்பாப்வே அணிதரப்பில் முசரபாணி ஆசீர்வாதம், சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர்ராசா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ஜிம்பாப்வே – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி நாளை (நவம்பர் 26) நடைபெறுகிறது.