5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

AUS vs PAK: ஆஸ்திரேலியாவை ஓட விட்ட பாகிஸ்தான் அணி.. 6 ஆண்டுகளுக்குப் பின் மோசமான சாதனை!

Cricket: முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், 2 வது ஆட்டத்தில் பாகிஸ்தானும் வெற்றி பெற்றது. இதனால் தொடரானது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இதனிடையே வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இடையேயான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

AUS vs PAK: ஆஸ்திரேலியாவை ஓட விட்ட பாகிஸ்தான் அணி.. 6 ஆண்டுகளுக்குப் பின் மோசமான சாதனை!
ஒருநாள் தொடருக்கான கோப்பையுடன் பாகிஸ்தான் அணி!
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 10 Nov 2024 16:05 PM

பாகிஸ்தான் அணிக்கெதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வியின் மூலம் ஆஸ்திரேலியா அணி மோசமான சாதனைப் படைத்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், 2 வது ஆட்டத்தில் பாகிஸ்தானும் வெற்றி பெற்றது. இதனால் தொடரானது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இதனிடையே வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இடையேயான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

Also Read: தென்னாப்பிரிக்காவில் இந்திய தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதா? கடும் கோபத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்.. நடந்தது என்ன?

சுருண்ட ஆஸ்திரேலியா

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஒரு வீரர் கூட நிலைத்து நின்று விளையாடவில்லை. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்ததால் ஆஸ்திரேலியா அணியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதிகபட்சமாக சீன் அபாட் 30 ரன்கள், தொடக்க வீரர் மேட் சார்ட் 22 ரன்களும் எடுத்தனர். எக்ஸ்ட்ரா வகையில் 22 ரன்கள் கிடைக்க ஆஸ்திரேலியா அணி 31.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பந்துவீச்சை பொறுத்தவரை பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாகின் அப்ரிடி மற்றும் நசீம் ஷா ஆகியோர் தலா  3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். ஹாரிஸ் ரௌப் 2 விக்கெட்டுகளையும், முஹம்மத் ஹஸ்னைன் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் கண்டது.

Also Read: இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது போட்டி! வானிலை எப்படி..?

அதிரடி காட்டிய பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக சைம் அயூப் மற்றும் அப்துல்லா ஷபிக் ஆகிய இருவரும் விளையாடினர். இவர்களில் அயூப் 52 ரன்களும், ஷபிக் 37 ரன்களும் எடுத்து அவுட் ஆயினர். தொடர்ந்து பாபர் அசாம் 28 ரன்களும், கேப்டன் முகமது ரிஸ்வான் 30 ரன்களும் எடுத்து 26.5 ஓவர்களில் பாகிஸ்தான் அணி வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 8  விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அது மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

இந்த தோல்வியின் மூலம் தொடரை இழந்த ஆஸ்திரேலியா அணி 6 ஆண்டுகளுக்குப் பிறகு, கிட்டத்தட்ட 2,123 நாட்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் ஒரு நாள் தொடரை இழந்து மோசமான சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பாக 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற ஒரு நாள் தொடரில் இந்தியாவிடம் தோற்றது. அதேசமயம் பாகிஸ்தான் அணி 22 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது. கடைசியாக 2002 ஆம் ஆண்டு நடந்த தொடரை கைப்பற்றியிருந்தது.

பாகிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணியின் வீரர்களை அந்நாட்டு ரசிகர்கள் கடுமையாக சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News