Pakistan Captain: பாகிஸ்தான் அணியில் அதிரடி மாற்றம்.. புதிய கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமனம்! - Tamil News | pakistan cricket team announced Mohammad Rizwan As New Pakistan Captain for odi and t20 formats | TV9 Tamil

Pakistan Captain: பாகிஸ்தான் அணியில் அதிரடி மாற்றம்.. புதிய கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமனம்!

Published: 

27 Oct 2024 21:35 PM

Mohammad Rizwan: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடர்களில் இருந்து முகமது ரிஸ்வான் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பதவியேற்பார். முகமது ரிஸ்வான் உள்நாட்டு கிரிக்கெட்டில் கேப்டன் பதவியில் நிறைய அனுபவம் பெற்றவர் என்றாலும், சர்வதேச போட்டிகளில் எப்படி செயல்படுவார் என்பதை பொறுந்திருந்து பார்க்க வேண்டும்.

1 / 6பாகிஸ்தான்

பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக இருந்த பாபர் அசாம் பதவி விலகிய நிலையில், முகமது ரிஸ்வான் வரையறுக்கப்பட்ட ஓவர்களின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மிக முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

2 / 6

கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதன்காரணமாக, கேப்டனாக இருந்த பாபர் அசாம் தவறை ஏற்ற் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். தொடர்ந்து, இந்தாண்டு தொடக்கத்தில் மீண்டும் பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக பாபர் அசாம் நியமிக்கப்பட்டார்.

3 / 6

சமீபத்தில், பாபர் அசாம் தனது பேட்டிங்கில் கவனம் செலுத்த போவதால் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, பாகிஸ்தான் அணியின் கேப்டனாக யார் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முகமது ரிஸ்வான் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

4 / 6

பாகிஸ்தான் அணியில் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ஷஹீன் அப்ரிடிக்கு அனுபவம் வாய்ந்த வீரர் முகமது ரிஸ்வான்தான். முன்னதாக, பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் மற்றும் ஷஹீன் அப்ரிடி கேப்டனாக செயல்பட்டனர். ஆனால், அப்போது பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படவில்லை.

5 / 6

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் முக்கிய பேட்ஸ்மேன்களில் முகமது ரிஸ்வானும் ஒருவர். பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 74 ஒருநாள் போட்டிகளில் 13 அரை சதங்கள், 3 சதங்கள் உள்பட 2088 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், 102 டி20 போட்டிகளில் விளையாடி 1 சதம், 29 அரை சதங்கள் உள்பட 3,313 ரன்கள் எடுத்துள்ளார்.

6 / 6

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடர்களில் இருந்து முகமது ரிஸ்வான் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பதவியேற்பார். முகமது ரிஸ்வான் உள்நாட்டு கிரிக்கெட்டில் கேப்டன் பதவியில் நிறைய அனுபவம் பெற்றவர் என்றாலும், சர்வதேச போட்டிகளில் எப்படி செயல்படுவார் என்பதை பொறுந்திருந்து பார்க்க வேண்டும்.

அதிகாலையில் சைக்கிளிங் செய்வதால் கிடைக்கும் பலன்கள்!
இந்த பிரச்சனைகள் இருந்தால் நிச்சயம் ஆப்பிள் பழம் சாப்பிடக்கூடாது..
வேர்க்கடலை குறித்து ஆய்வுகள் கூறும் தகவல்கள்!
சர்க்கரை நோயாளிகள் எந்த 4 பழங்களை சாப்பிடக்கூடாது?