Arshad Nadeem: தங்கம் வென்ற நதீமுக்கு இப்படி ஒரு பரிசா..? எருமையை கொடுத்து அசத்திய மாமனார்!
Olympics 2024: தங்கப் பதக்கம் வென்றது முதலே பாகிஸ்தான் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகமும் நதீமை பாராட்டி வருகிறது. ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிப் போட்டியில் நதீம் 92.97 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றதுடன், ஒலிம்பிக் வரலாற்றில் அதிக தூரம் எறிந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்காக நதீமுக்கு பரிசுகள் குவிந்து வரும் நிலையில், அவரது மாமனாரிடமிருந்து எருமை மாட்டை பரிசாக பெற்றார் என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால், இதுதான் உண்மை.
அர்ஷத் நதீம்: 2024 ம் ஆண்டு இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் கிடைக்கும் என்ற வாய்ப்பை தட்டி பறித்தவர் பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம். இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவை வீழ்த்தி, பாரிஸ் ஒலிம்பிக்கில் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்றார். தங்கப் பதக்கம் வென்றது முதலே பாகிஸ்தான் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகமும் நதீமை பாராட்டி வருகிறது. ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிப் போட்டியில் நதீம் 92.97 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றதுடன், ஒலிம்பிக் வரலாற்றில் அதிக தூரம் எறிந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்காக நதீமுக்கு பரிசுகள் குவிந்து வரும் நிலையில், அவரது மாமனாரிடமிருந்து எருமை மாட்டை பரிசாக பெற்றார் என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால், இதுதான் உண்மை.
எருமை மாடு பரிசு:
ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றதும் அர்ஷத் நதீம் பாகிஸ்தான் சென்றுள்ளார். அப்போது அர்ஷத் நதீமின் மாமனாரான முகமது நவாஸ், நதீமுக்கு எருமை மாட்டை பரிசாக வழங்கியுள்ளார். இத்தகைய பரிசை வழங்கும்போது, பாகிஸ்தானின் கிராமப்புறங்களில் எருமை மாடு மிகவும் விலையுயர்ந்ததாக கருதப்படுவதாகவும், கிராமப்புறங்களில் இது மரியாதைக்குரிய ஒரு வழியாகும் என்று நவாஸ் கூறினார்.
முகமது நவாஸ் அர்ஷத்தின் மாமனார். இவருக்கு நான்கு மகன்கள் மற்றும் மூன்று மகள் உள்ளனர். இவரது இளைய மகள் ஆயிஷாவை நதீம், 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். நதீம் – ஆயிஷா தம்பதிக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
ரூ. 4.5 கோடி:
தற்போது பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீமுக்கு பண மழை பொழிந்து வருகிறது. தங்கப் பதக்கம் வென்றதால் ஒலிம்பிக்கில் இருந்து அர்ஷத் நதீமுக்கு 50 ஆயிரம் டாலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படும். இந்திய மதிப்பில் 50 ஆயிரம் டாலர்கள் என்பது சுமார் 42 லட்சம் ரூபாய். இதுதவிர, பாகிஸ்தான் அரசும் இவருக்கு பணம் தரப்போகிறது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு நதீமுக்கு 10 கோடி பாகிஸ்தான் ரூபாய் வழங்குவதாக ஏற்கனவே உறுதியளித்துள்ளது.
ALSO READ: Chou Tzuyu : திடீர் வைரல்.. ஒலிம்பிக் நேரத்தில் வைரலான தைவான் பாடகி.. யார் இந்த சௌ சூயூ?
தொடர்ந்து, பஞ்சாப் கவர்னர் சர்தார் சலீம் ஹைதர் கான், நதீமுக்கு தனியாக 20 லட்சம் பாகிஸ்தான் ரூயாய் வழங்க இருக்கிறார். சிந்து மாகாண முதலமைச்சரும், கராச்சி மேயரும் சேர்ந்து அவருக்கு 5 கோடி பாகிஸ்தான் ரூபாயையும், சிந்து ஆளுநர் கம்ரான் தெசோரி தனித்தனியாக ரூ.10 லட்சத்தையும் வழங்க இருக்கின்றனர்.
இது தவிர, பிரபல பாகிஸ்தான் இசைக்கலைஞர் அலி ஜாபர் நதீமுக்கு ரூ.10 லட்சம் பரிசாக வழங்கவுள்ளார். இவை அனைத்தையும் சேர்த்து நதீமுக்கு, இந்திய மதிப்பில் சுமார் ரூ. 4.5 கோடிக்கு சமமாகும்.