Pakistan vs Bangladesh: வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர் இழப்பு.. பாகிஸ்தான் தோல்விக்கு யார் காரணம்?
Pakistan: 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 56 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அப்ரார் அகமதுவின் பந்தில் ஷகிப் அல் ஹசன் வெற்றி பவுண்டரி அடித்தவுடன், வங்கதேச அணி வீரர்கள் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினர். இந்தநிலையில், பாகிஸ்தான் அணி வங்கதேச அணியின் தோற்றதற்கு யார் யார் காரணங்கள் என்று இங்கே தெரிந்து கொள்வோம்.
பாகிஸ்தான் அணி: பாகிஸ்தான் சொந்த மண்ணில் வங்கதேசம் அணி, பலம் மிக்க அணியாக கருதப்படும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி புதிய வரலாறு படைத்தது. இதன் மூலம், ராவல் பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வங்கதேச அணி கிளீன் ஸ்வீப் செய்து வரலாறு படைத்துள்ளது. மேலும், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணியை வங்கதேச அணி டெஸ்ட் தொடரை வென்று அசத்தியது. 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 56 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அப்ரார் அகமதுவின் பந்தில் ஷகிப் அல் ஹசன் வெற்றி பவுண்டரி அடித்தவுடன், வங்கதேச அணி வீரர்கள் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினர். இந்தநிலையில், பாகிஸ்தான் அணி வங்கதேச அணியின் தோற்றதற்கு யார் யார் காரணங்கள் என்று இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: IPL 2025: ஐபிஎல் 2025ல் இம்பேக்ட் பிளேயர் விதி இல்லையா? பிசிசிஐ தீவிர ஆலோசனை!
ஷான் மசூத்:
பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் கேப்டன் ஷான் மசூத், வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர் முழுவதும் சிறப்பாக எதுவும் செய்யவில்லை. இந்த தொடரில் இவரது அதிகபட்ச ரன் 57 ரன்கள் மட்டுமே. முழு தொடரிலும் மொத்தமாக 105 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். சொந்த மண்ணில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்விக்கு, இவரது பேட்டிங் மட்டுமின்றி இவரது கேப்டன்சியும் காரணம் என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், ஷான் மசூத் பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
பாபர் அசாம்:
பாகிஸ்தான் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் கடந்த சில மாதங்களாகவே மோசமான பார்மில் திணறி வருகிறார். வங்கதேசத்திற்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் 4 இன்னிங்ஸ்களில் வெறும் 64 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். மேலும், கடந்த 16 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் பாபர் அசாம் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பாபர் அசாமின் கடைசி டெஸ்ட் சதம் கடந்த 2022 டிசம்பர் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிரான வந்தது. பாபர் அசாம் இதே நிலைமையில் நீடித்தால், விரைவில் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அப்ரார் அகமது:
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்த அப்ரார் அகமது, ஒரு வலது கை சுழற்பந்து வீச்சாளர். ஒருபுறம், ஷகிப் அல் ஹசன் மற்றும் மெஹ்தி ஹசன் ஆகியோர் வங்கதேச அணியில் சுழற்பந்து வீச்சாளராக களமிறங்கி அசத்த, மறுபுறம் அப்ரார் அகமது விக்கெட்களை வீழ்த்த திணறி கொண்டு இருந்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவரால் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்த முடிந்தது. இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் 39 விக்கெட்களை அப்ரார் அகமது வீழ்த்தி இருந்தாலும், கடந்த 2 டெஸ்ட் தொடர் மோசமானதாகவே அமைந்தது.
அப்துல்லா ஷபிக்:
கடந்த 2021ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமான அப்துல்லா ஷபிக், டெஸ்ட் அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருந்து வருகிறார். வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக 10.50 சராசரியில் 42 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவர் தனது கடைசி ஏழு டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 46 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில், மூன்று முறை டக் அவுட் என்பது குறிப்பிடத்தக்கது. அப்துல்லா ஷபிக்கின் மோசமான பார்மும் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
ALSO READ: WTC Final 2025: லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்.. தேதியை அறிவித்த ஐசிசி!
முகமது அலி:
பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருந்த முகமது அலி ஒரு வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இவர் கடந்த 2022ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இதுவரை முகமது அலி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 6 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதில் அவர் 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுக்க முடிந்தது. இதுவரை கிடைத்த வாய்ப்புகளை அலியால் சரியான பயன்படுத்த முடியவில்லை. எனவே பாகிஸ்தான் அணியில் இவரது இடமும் கேள்விகுறியாக உள்ளது.