5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Watch Video: தந்தையின் மரணம்.. மைதானத்திற்கு நடுவே கதறி அழுத பாகிஸ்தான் கேப்டன்!

Fatima Sana: துபாயில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய நியூசிலாந்து மகளிர் அணி 6 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு பேட்டிங்கில் களமிறங்கிய பாகிஸ்தான் மகளிர் அணி 54 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தால், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும்.

Watch Video: தந்தையின் மரணம்.. மைதானத்திற்கு நடுவே கதறி அழுத பாகிஸ்தான் கேப்டன்!
பாத்திமா சனா (Image: twitter)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 15 Oct 2024 21:45 PM

2024 டி20 மகளிர் உலகக் கோப்பையில் இருந்து பாகிஸ்தான் மற்றும் இந்தியா மகளிர் அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளன. பாகிஸ்தான் அணி நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியது. இஅந்த போட்டியில் பாகிஸ்தான் அணியால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 110 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 56 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் இரண்டு புள்ளிகள் பெற்று நியூசிலாந்து அணி 6 புள்ளிகளுடன், அரையிறுதிக்கு சென்றது.

ALSO READ: Kylian Mbappe: கால்பந்து வீரர் எம்பாப்பே மீது பாலியல் வன்கொடுமை புகார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

கதறி அழுத பாகிஸ்தான் கேப்டன்:


2024 மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டி குரூப் ஏ போட்டியில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் நேற்று மோதியது. அப்போது பாகிஸ்தான் அணி வகுத்து நின்றபோது பாகிஸ்தான் நாட்டின் தேசிய கொடி ஒலித்தது. பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா கதறி அழுதார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. சனா தன் கண்ணீரை துடைத்து கொண்டே இருந்தாலும், மீண்டும் மீண்டும் அழுதார். நீண்ட நேரம் அவர் கண்களின் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது. பெரும்பாலான வீரர்கள் தங்கள் அணி தோல்வி அடைந்தபோதோ அல்லது உலகக் கோப்பை போன்ற முக்கிய போட்டிகளில் இருந்து வெளியேறும் போதுதான் அழுவார்கள். ஆனால், இந்த வீடியோவில் போட்டி தொடங்குவதற்கு முன் பாத்திமா சனா ஏன் அழுதார் என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி போய் இருந்தனர்.

ஏன் அழுதார் பாத்திமா சனா..?

சமீபத்தில்தான் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாத்திமா சனாவின் தந்தை உயிரிழந்தார். இதையடுத்து, உலகக் கோப்பை போட்டியின்போது பாத்திமா சனா பாதியிலேயே வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக, பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான குரூப் போட்டியில் பாத்திமா சனா இல்லாமல் விளையாடியது. இந்த போட்டியில், பாகிஸ்தான் மகளிர் அணி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, மீண்டும் உலகக் கோப்பைக்கு திரும்பிய பாத்திமா சனா, நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார்.

ALSO READ: Women T20 World Cup: 8 ஆண்டுகளில் முதல் முறை.. அரையிறுதிக்கு முன்னேறாமல் போன இந்திய அணி!

தந்தையின் மறைவுக்கு பிறகு, நியூசிலாந்துக்கு எதிராக பாத்திமா சனா விளையாட வந்தபோது தேசிய கீதத்தின்போது அழத் தொடங்கினார். அப்போது, தன் கண்ணீரை கட்டுப்படுத்த கடுமையாக முயற்சி செய்தார். ஆனால், மீண்டும் மீண்டும் கண்ணீர் வழிய தொடங்கியது. இதையடுத்து, சக வீராங்கனைகள் பாத்திமா சனாவுக்கு ஆறுதல் கூறினர்.

போட்டியில் நடந்தது என்ன..?

துபாயில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய நியூசிலாந்து மகளிர் அணி 6 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு பேட்டிங்கில் களமிறங்கிய பாகிஸ்தான் மகளிர் அணி 54 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தால், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும். தற்போது இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 2024 மகளிர் டி20 உலகக் கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேறியது.

நேற்றைய நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா 2 ஓவர்களில் 17 ரன்கள் கொடுத்து, ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை. ஒரே ஒவரில் ஒன்றன் பின் ஒன்றாக 2 கேட்சுகளை தவறவிட்டார். மேலும், நேற்று பேட்டிங்கில் களமிறங்கிய அவர், 21 ரன்களை மட்டுமே எடுத்தார்.

Latest News