Paris Olympics 2024: ஒலிம்பிக்கில் ப்ரோபோஸ்.. தங்கம் வென்ற வீராங்கனையிடம் காதலை வெளிப்படுத்திய சக வீரர்!
Olympics Games: ஒலிம்பிக் தொடங்கியது முதலே ஒரு நாட்டு வீரரின் திருமண மோதிரம் தொலைந்தது, பிரிந்த காதல் ஜோடி தங்க பதக்கம் வென்றது, தனது காதலருடன் இரவில் வெளியே சென்ற ஒரு வீராங்கனை தகுதி நீக்கம் செய்யப்பட்டது என பல நிகழ்வுகள் நடந்தது. இப்படி இருக்க, இங்கு ஒரு ஜோடி தங்கம் வென்றதும் காதலை முன்மொழிந்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன் அழகான வீடியோவும் வைரலாகி வருகிறது. அது என்னவென்று இங்கே பார்க்கலாம்.
பாரிஸ் ஒலிம்பிக்: உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான ஒலிம்பிக் போட்டி தற்போது பாரிஸ் நகரத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 26ம் தேதி தொடங்கிய இந்த ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், பங்கேற்க 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளன. ஒலிம்பிக்கில் பங்கேற்று தனது நாட்டுக்காக தங்கப் பதக்கம் வெல்வது ஒவ்வொரு வீரரின் கனவாகும். ஒலிம்பிக் தொடங்கியது முதலே ஒரு நாட்டு வீரரின் திருமண மோதிரம் தொலைந்தது, பிரிந்த காதல் ஜோடி தங்க பதக்கம் வென்றது, தனது காதலருடன் இரவில் வெளியே சென்ற ஒரு வீராங்கனை தகுதி நீக்கம் செய்யப்பட்டது என பல நிகழ்வுகள் நடந்தது. இப்படி இருக்க, இங்கு ஒரு ஜோடி தங்கம் வென்றதும் காதலை முன்மொழிந்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன் அழகான வீடியோவும் வைரலாகி வருகிறது. அது என்னவென்று இங்கே பார்க்கலாம்.
கடந்த வெள்ளிக்கிழமை பாரிஸ் ஒலிம்பிக்கில் சீன பேட்மிண்டன் வீராங்கனை ஹுவாங், ஜெங் சி வெய் உடன் இணைந்து, கலப்பு இரட்டையர் போட்டியில் தென் கொரியாவின் கிம் வோன் ஹோ மற்றும் ஜியோங் நா யுன் ஜோடியை 21-8 21-11 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். தனது கழுத்தில் தங்கப் பதக்கத்தை அணிந்தபடி, ஹுவாங் மற்றொரு சீன பேட்மிண்டன் அணி வீரரான லி யுசெனை சந்திக்க வந்தார். அப்போது ஹுவாங் மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தார். அந்த நேரத்தில் லி தன் கையில் பூங்கொத்தை ஹுவாங்கிடம் கொடுத்தார். அதன்பிறகு, யாரும் எதிர்பார்க்காத வகையில் லி யுசென் திடீரென முட்டிபோட்டு ஹுவாங்கிடம் தன்னை திருமணம் செய்து கொள்கிறயா என்று கேள்வி எழுப்பினார். இதை பார்த்து உணர்ச்சி வசப்பட்ட ஹூவாங், சம்மதம் தெரிவித்தார். இந்த அழகிய வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
“I’ll love you forever! Will you marry me?”
“Yes! I do!”OMG!!! Romance at the Olympics!!!❤️❤️❤️
Huang Yaqiong just had her “dream come true”, winning a badminton mixed doubles gold medal🥇with her teammate Zheng Siwei
Then her boyfriend Liu Yuchen proposed! 🎉🎉🎉 pic.twitter.com/JxMIipF7ij
— Li Zexin (@XH_Lee23) August 2, 2024
தங்கம் வென்றதற்கு பிறகு பேசிய ஹூவாங் கூறுகையில், ”பாரிஸில் நிச்சயதார்த்த மோதிரத்தை எதிர்பார்க்கவில்லை. தங்க பதக்கம் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்திற்காக கடுமையாக போராடினேன். லி யுசெனின் இந்த பிளான் எனக்கு மிகவும் ஆச்சர்யத்தை அளித்தது. இப்போது நான் ஒலிம்பிக் சாம்பியன், நான் எதிர்பார்க்காத திருமண முன்மொழிவும் எனக்கு கிடைத்தது. இப்போது நான் அனுபவிக்கும் உணர்ச்சிகளை என்னால் வெளிப்படுத்த முடியாது, ஏனென்றால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் சரி என்று சொன்னபோது லியுசெனும் உணர்ச்சி வசப்பட்டார். தங்கப் பதக்கம் வெல்வது எங்கள் பயணத்தில் கிடைத்த பெருமை. திருமண முன்மொழிவை நான் எதிர்பார்க்கவே இல்லை. தங்கம் வென்றதை நானும், அவரும் இப்படி கொண்டாடுவோம் என்று ஒருபோதும் யோசிக்கவில்லை” என்று தெரிவித்தார்.
ஹுவாங் மற்றும் ஜெங் சி வெய் ஆகியோர் பாரிஸ் விளையாட்டுப் போட்டியில் பாட்மிண்டனில் முதல் தங்கப் பதக்கத்தை வென்றனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற யுச்சென் மற்றும் ஜுவான், பாரிஸ் ஒலிம்பிக்கில் குரூப் ஸ்டேஜில் இருந்து வெளியேறினர்.
ஜெங் சி வெய்யுக்கு இது கடைசி ஒலிம்பிக்:
ஹூவாங்குடன் இணைந்து பேட்மிண்டனில் தங்கம் வென்ற 27 வயதான ஜெங் சி, ஒலிம்பிக் போட்டியே தனது இறுதி ஆட்டமாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தினார். இதையடுத்து, இவரது கடைசி ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கத்துடன் பயணத்தை இனிமையாக முடித்து கொண்டார். இதுகுறித்து முன்னதாக பேசிய ஜெங் சி, “இது எனது கடைசி ஒலிம்பிக்காக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். எனது குடும்பத்தின் வருகை உண்மையில் எனக்கு மிகுந்த பலத்தை அளிக்கிறது, ஏனெனில், அவர்கள் இல்லையெனில் நான் இல்லை” என்று தெரிவித்தார்.