Neeraj Chopra: வெள்ளி பதக்கத்துடன் வீடு திரும்பும் நீரஜ் சோப்ரா.. பாகிஸ்தானின் நதீம் தங்கம் வென்று அசத்தல்..!
Silver Medal: களத்தில் 8வது போட்டியாளராக உள்ளே வந்த நீரஜ் சோப்ரா தனது முதல் த்ரோவை பவுல் ஆக வீசினார். இதனால், இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து 2வது முறையாக வீசிய நீரஜ்,89.45 மீட்டர் தூரம் எறிந்து நேரடியாக இரண்டாவது இடத்தை பிடித்தார். பாகிஸ்தானை சேர்ந்த அர்ஷத் நதீம் தனது முதல் முயற்சியில் பவுல் ஆனாலும், தனது இரண்டாவது முயற்சியில் சிறப்பாக ஈட்டி எறிந்து 92.97 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். இது ஒலிம்பிக்கில் புதிய ரெக்காட்டாக அமைந்து அர்ஷத் நதீமுக்கு தங்க பதக்கத்தை வென்று கொடுத்தது.
பாரிஸ் ஒலிம்பிக்: பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நீரஜ் சோப்ராவின் ஈட்டி எறிதல் போட்டி ஆகஸ்ட் 8ம் தேதி இரவு 11.55 மணிக்கு தொடங்கியது. களத்தில் 8வது போட்டியாளராக உள்ளே வந்த நீரஜ் சோப்ரா தனது முதல் த்ரோவை பவுல் ஆக வீசினார். இதனால், இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து 2வது முறையாக வீசிய நீரஜ், 89.45 மீட்டர் தூரம் எறிந்து நேரடியாக இரண்டாவது இடத்தை பிடித்தார். பாகிஸ்தானை சேர்ந்த அர்ஷத் நதீம் தனது முதல் முயற்சியில் பவுல் ஆனாலும், தனது இரண்டாவது முயற்சியில் சிறப்பாக ஈட்டி எறிந்து 92.97 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். இது ஒலிம்பிக்கில் புதிய ரெக்காட்டாக அமைந்தது. இதற்கு முன், இதுவரை யாருமே 92. 97 மீட்டர் தூரம் ஒலிம்பிக்கில் வீசியது இல்லை. இதன்மூலம், நார்வேயின் ஆண்ட்ரியாஸ் தோர்கில்ட்செனின் முந்தைய ஒலிம்பிக் சாதனையான 90.57 மீட்டர் சாதனையை முறியடித்தார். அதனை தொடர்ந்து, 6வது முயற்சியான கடைசி முயற்சியில் அர்ஷத் நதீம் 91.79 மீட்டர் தூரம் எறிந்து அசத்தினார். இதன்மூலம், பாகிஸ்தானுக்கு தங்க பதக்கத்தை வென்று கொடுத்தார் அர்ஷத் நதீம்.
ஆடவர் ஈட்டி எறிதலில் 90 மீட்டர் ஓட்டத்தை தாண்டிய ஒலிம்பிக் வரலாற்றில் நான்காவது தடகள வீரர் என்ற பெருமையையும் பெற்றார் நதீம்.
Arshad Nadeem set a new Olympic record in the Javelin throw!!!! 92.97m!!!! pic.twitter.com/WrngZ4DPJN
— Khurram Husain (@KhurramHusain) August 8, 2024
ஒலிம்பிக்கில் 90 மீட்டருக்கு மேல் எறிந்த வீரர்கள் பட்டியல்:
- 2000: ஜான் ஜெலெஸ்னி, செக்கியா – 90.17 மீ
- 2008: ஆண்ட்ரியாஸ் தோர்கில்ட்சன், நார்வே – 90.57 மீ
- 2016: தாமஸ் ரோஹ்லர், ஜெர்மனி – 90.30 மீ
- 2024: அர்ஷத் நதீம், பாகிஸ்தான் – 92.97 மீ
இரண்டாவது முயற்சியை தவிர மற்ற அனைத்து முயற்சிகளில் இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா பவுல் செய்தார். இதன்மூலம், இந்தியாவுக்கு வெள்ளி பதக்கத்தை மட்டுமே வென்று கொடுத்து நீரஜ் சோப்ரா அசத்தியுள்ளார்.கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (88.54 மீட்டர்) வெண்கலம் வென்றார்.
தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். நீரஜுக்கு முன், மல்யுத்த வீரர் சுஷில் குமார் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளனர்.
ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ராவின் செயல்திறன்:
- முதல் முயற்சி – பவுல்
- இரண்டாவது முயற்சி- 89.45 மீட்டர்
- மூன்றாவது முயற்சி – பவுல்
- நான்காவது முயற்சி – பவுல்
- ஐந்தாவது முயற்சி – பவுல்
- 6வது மற்றும் கடைசி முயற்சி – பவுல்
அர்ஷத் நதீம்:
அர்ஷத் நதீம் கடந்த 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் ஆவார். காயம் காரணமாக நீரஜ் சோப்ரா இந்த போட்டியில் விளையாடவில்லை. கடந்த 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார் நதீம். கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் அர்ஷத் நதீம் அதிகபட்சமாக 84.62 மீட்டர் தூரம் மட்டுமே எறிந்து ஐந்தாவது இடத்தை பிடித்தார். பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதன்மூலம், பாகிஸ்தானுக்காக தங்கம் வென்ற முதல் தடகள வீரர் என்ற சாதனை நதீம் படைத்தார்.