5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Olympic Football Match: அர்ஜென்டினா வீரர்களை தாக்கிய ரசிகர்கள்.. பாரிஸ் ஒலிம்பிக் தொடங்கிய உடனே பெரும் பரபரப்பு!

Argentina vs. Morocco: நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி இல்லாமல் பாரிஸ் ஒலிம்பிக்கில் விளையாடும் அர்ஜென்டினா 2 கோல்கள் அடித்து போட்டியை 2-2 என சமன் செய்தது. ஆனால் இங்கிருந்துதான் மைதானத்தில் போட்டியை காண வந்திருந்த மொராக்கோ ரசிகர்கள் செய்த சம்பவத்தால் போட்டி நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்படி அங்கு என்னதான் நடந்தது என்று இங்கே பார்க்கலாம்.

Olympic Football Match: அர்ஜென்டினா வீரர்களை தாக்கிய ரசிகர்கள்.. பாரிஸ் ஒலிம்பிக் தொடங்கிய உடனே பெரும் பரபரப்பு!
அர்ஜென்டினா vs மொராக்கோ (Image source: Lilian Chan/x)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 25 Jul 2024 13:09 PM

அர்ஜென்டினா vs மொராக்கோ: 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நேற்று கால்பந்து போட்டிகளுடன் தொடங்கியது. அர்ஜென்டினா மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியானது செயிண்ட்-எட்டியெனில் உள்ள ஜெஃப்ரி குய்ச்சார்ட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்கியது முதலே போட்டிக்கு நடுவே சலசலப்பும், சர்ச்சைகள் மட்டுமே நிரம்பி வழிந்தது. இந்த போட்டியில் அர்ஜென்டினா அணி 1-2 என்ற கோல் கணக்கில் மொராக்கோவுக்கு எதிராக தோல்வியை சந்தித்து அதிர்ச்சி அளித்தது. நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி இல்லாமல் பாரிஸ் ஒலிம்பிக்கில் விளையாடும் அர்ஜென்டினா 2 கோல்கள் அடித்து போட்டியை 2-2 என சமன் செய்தது. ஆனால் இங்கிருந்துதான் மைதானத்தில் போட்டியை காண வந்திருந்த மொராக்கோ ரசிகர்கள் செய்த சம்பவத்தால் போட்டி நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்படி அங்கு என்னதான் நடந்தது என்று இங்கே பார்க்கலாம்.

டிரா செய்த அர்ஜென்டினா:

கோபா அமெரிக்கா இறுதிப்போட்டியில் அடைந்த காயம் காரணமாக லியோனல் மெஸ்ஸி இல்லாமல் 2024ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் களமிறங்கியது அர்ஜென்டினா அணி. செயிண்ட் எட்டியெனில் உள்ள ஜெப்ரி குய்ச்சார்ட் ஸ்டேடியத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் நட்சத்திர அணியான அர்ஜென்டினா மொராக்கோவிடம் தோற்றது. போட்டி தொடங்கியது முதலே அர்ஜென்டினா அணிக்கு எதிராக மொராக்கோ அணி ஆதிக்கம் செலுத்தியது. ஒரு கட்டத்தில் மொரோக்கோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தபோது, அர்ஜென்டினா வீரர் கிறிஸ்டியன் மெடினா அபாராமாக 2 கோல் அடித்து அர்ஜெண்டினாவை 2-2 என டிரா செய்தார்.

Also read: IPL 2025: மெகா ஏலத்திற்கு முன் 3 கேப்டன்கள் விடுவிப்பு..? குட்பை சொல்லப்போகும் அணிகள்..!

மொராக்கோ ரசிகர்கள் செய்த சம்பவம்:

போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்ததையடுத்து, ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்த மொராக்கோ ரசிகர்கள் அர்ஜென்டினா வீரர்கள் மீது பாட்டில்களை வீசத் தொடங்கினர். மேலும், ஒரு சில மொராக்கோ ரசிகர்கள் கால்பந்து விளையாடும் களத்திற்குள் வந்து அர்ஜென்டினா வீரர்களை தாக்க முயற்சி மேற்கொண்டனர். ரசிகர்களின் இந்த செயல்களை தடுக்க, போலீசார் களம் இறங்கி அர்ஜென்டினா வீரர்களை பாதுகாத்தனர். ரசிகர்களின் இடையூறு காரணமாக, போட்டி உடனடியாக ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் சிறிது நிலவரம் அமைதியானதும் ரசிகர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடைபெற்றது.

ரசிகர்கள் தாக்குதலில் ஈடுபட்டபோது அர்ஜென்டினா வீரர் கிறிஸ்டியன் மெடினா இரண்டாவது கோல் அடித்ததாக கூறி, போட்டி நடுவர் ஆப் சைடு என அறிவித்தார். இதன்மூலம், மெடினா அடித்த இரண்டாவது கோல் கணக்கிடப்படாது என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மொராக்கோ அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

நடுவரின் இந்த முடிவுக்கு அர்ஜென்டினா ரசிகர்கள் மற்றும் வீரர்கள் கடும் கோபம் கொண்டு, சமூக வலைதளங்களில் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் ஜேவியர் மஷெரானோவும் போட்டிக்குப் பிறகு, இது என் வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய சர்க்கஸ், இதுபோன்ற எதையும் நான் பார்த்ததில்லை என்று கூறினார். அதேபோல், லியோனல் மெஸ்ஸியும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, நம்ப முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

Also read: Paris Olympics 2024: ஒலிம்பிக்கில் அதிக தங்கம் வென்ற நாடு இதுதான்..! இந்த லிஸ்ட்டில் இந்தியா எத்தனையாவது இடம்..?

Latest News