Paris Olympics 2024: 0.005 வினாடி வித்தியாசத்தில் தங்கம்! ஜமைக்கா வீரரை முந்தி அசத்திய நோவா லைல்ஸ்..!
Noah Lyles: கடந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் லைல்ஸ் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்றார் நோவா லைல்ஸ். உசைன் போல்ட்டின் 200 மீட்டர் உலக சாதனையை முறியடிப்பேன் என கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன் அறிவித்தார். பாரிஸ் ஒலிம்பிக்கில் நோவா லைல்ஸ் தங்கம் வென்றாலும், ’மின்னல் வேக மனிதன்’ உசைன் போல்ட் சாதனையை முறியடிக்க முடியவில்லை.
தங்க பதக்கம்: அமெரிக்காவின் நோவா லைல்ஸ் பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். இதன்மூலம், ஆக்டிவ் வீரர்களில் உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் என்ற சாதனை படைத்தார். பாரிஸ் நகரில் உள்ள ஸ்டேட் டி பிரான்ஸ் ஸ்டேடியத்தில் நடந்த 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் இறுதிப் போட்டி மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. இதில் நோவா லைல்ஸ் தங்கம் பதக்கம் வென்ற நிலையில், ஜமைக்காவின் கிஷானே தாம்சன் வெள்ளிப் பதக்கமும், அமெரிக்காவின் பிரெட் கெர்லி வெண்கலப் பதக்கமும் வென்றனர். அதே நேரத்தில் டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனான இத்தாலியின் ஜேக்கப் லோமண்டே மார்செல் 5வது இடத்தை பிடித்து, ஏமாற்றம் அளித்தார்.
0.005 வினாடிகளில் தங்கத்தை தவறவிட்ட ஜமைக்கா வீரர்:
ஜஸ்டின் காட்லினுக்கு பிறகு ஆடவர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கம் வென்ற முதல் அமெரிக்க வீரர் என்ற சாதனையை நோவா லைல்ஸ் படைத்தார். கடந்த 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் ஸ்பிடிண்டில் தங்கப் பதக்கம் வென்றார் ஜஸ்டின் காட்லின். லைல்ஸ் 9. 784 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கத்தை வெல்ல, இரண்டாவது இடத்தை பிடித்த தாம்சன் 9. 789 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கினார். லைல்ஸ் மற்றும் தாம்சன் இடையே 0.005 வினாடிகள் மட்டுமே இடைவெளி இருந்தது. அதேசமயம் வெண்கலப் பதக்கம் வென்ற கெர்லி 9.810 வினாடிகளில் பந்தயத்தை முடித்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார். ரியோ மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கத்தைத் தவறவிட்ட தென்னாப்பிரிக்காவின் அகானே சிம்பைன் 4வது இடம் பிடித்தார்.
முடிவு அறிவிக்க நீண்ட நேரம்:
A lifetime of preparation and 4 years of training comes down to FIVE ONE THOUSANDTHS OF A SECOND.
0.005 seconds!!!
FIVE milliseconds.
It takes ONE HUNDRED MILLISECONDS TO BLINK! It’s incomprehensiblepic.twitter.com/DGyWyyJ9Ol
— KFC (@KFCBarstool) August 4, 2024
சில வினாடிகள் இடைவெளியில் 100 மீட்டர் பந்தயத்தை வீரர்கள் கடந்ததால் யார் வெற்றியாளர்கள் என்பதை அறிவிக்க நேரம் எடுத்தது. பந்தயத்தை கடந்த முதல் ழு தடகள வீரர்களும் ஒரு பெரிய திரையில் காட்டப்பட்டதால், முடிவுகளை அறிய தடகள வீரர்கள் வழக்கத்தை விட அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அதை தொடர்ந்து, 0.5 வினாடி வித்தியாசத்தில் நோவா லைல்ஸ் வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டார்.
சவால்விட்ட லைல்ஸ்:
கடந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் லைல்ஸ் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்றார் நோவா லைல்ஸ். உசைன் போல்ட்டின் 200 மீட்டர் உலக சாதனையை முறியடிப்பேன் என கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன் அறிவித்தார். பாரிஸ் ஒலிம்பிக்கில் நோவா லைல்ஸ் தங்கம் வென்றாலும், ’மின்னல் வேக மனிதன்’ உசைன் போல்ட் சாதனையை முறியடிக்க முடியவில்லை. லைல்ஸ் உலக சாம்பியன்ஷிப்பில் 19.52 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்த நிலையில், போல்ட்டின் சாதனை 19.19 வினாடிகளாக தற்போது வரை உள்ளது.