5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Paris Olympic 2024: கோலாகலமாக தொடங்கிய பாரிஸ் ஒலிம்பிக்.. இன்றைய போட்டி விவரங்கள்..

இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்வதற்காக உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 10,500 விளையாட்டு வீரர்கள் மொத்தம் 329 விளையாட்டு போட்டிகளில் விளையாடி பதக்கங்களுக்காக போட்டியிடுகிறார்கள். இந்தநிலையில், பாரிஸ் ஒலிம்பிக் 2024 இன் தொடக்க விழா இந்திய நேரப்படி ஜூலை 26 ஆம் தேதி இரவு 11 மணிக்கு நடைபெற்றது. ஒலிம்பிக் போட்டி தொடக்கத்தால் பாரிஸ் நகரமே விழாக்கோலம் பூண்டது. வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளை லட்சக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.

Paris Olympic 2024: கோலாகலமாக தொடங்கிய பாரிஸ் ஒலிம்பிக்.. இன்றைய போட்டி விவரங்கள்..
ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் இந்தியா அணிவகுப்பு
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 27 Jul 2024 09:02 AM

பாரிஸ் ஒலிம்பிக் 2024: உலகின் முக்கிய நகரங்களில் ஒன்றான பாரிஸில் இம்முறை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. ஜூலை 26ம் தேதி அதாவது நேற்று தொடங்கிய ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்வதற்காக உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 10,500 விளையாட்டு வீரர்கள் மொத்தம் 329 விளையாட்டு போட்டிகளில் விளையாடி பதக்கங்களுக்காக போட்டியிடுகிறார்கள். இந்தநிலையில், பாரிஸ் ஒலிம்பிக் 2024 இன் தொடக்க விழா இந்திய நேரப்படி ஜூலை 26 ஆம் தேதி இரவு 11 மணிக்கு நடைபெற்றது. ஒலிம்பிக் போட்டி தொடக்கத்தால் பாரிஸ் நகரமே விழாக்கோலம் பூண்டது. வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளை லட்சக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவின் போது பிரான்சின் ஜோதி வீரர்களான ஜூடோகா டெடி ரைனர் மற்றும் ஸ்ப்ரிண்டர் மேரி-ஜோ பெரெக் ஆகியோர் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்தனர்.


கடந்த முறை 2021 ஆம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த நிகழ்ச்சிகளை மக்கள் காண அனுமதி மறுக்கப்பட்டது. பாரிஸ் ஒலிம்பிக் 2024 இன் தொடக்க விழா நேற்று தொடங்கி இருந்தாலும், பல போட்டிகள் இரண்டு நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டன. இதில் இந்திய வீரர்கள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். இரண்டாவது நாளான இன்று 14 தங்கப்பதக்கங்களுக்கான போட்டிகள் நடைபெறுகிறது. துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர்ரைபிள் கலப்பு அணிகள் பிரிவு அமைந்துள்ளது. இதன் தகுதி சுற்று இந்திய நேரப்படி பகல் 12 30 மணிக்கும், இறுதிப்போட்டி மாலை 4.30 மணிக்கும் நடத்தப்படுகிறது. இந்தப்போட்டியில் இந்திய வீரர்களான ரமிதா- அர்ஜூன் பாபுதா, இளவேனில் -சந்தீப்சிங் ஆகிய ஜோடிகள் களம் காண்கிறது.

Also Read:  இன்று பிரமாண்டமாக தொடங்கும் ஒலிம்பிக்.. தொடக்க விழாவில் என்னென்ன நடக்கும்..? முழு விவரம்!

இந்த ஆண்டு துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், ஈட்டி எறிதல், மல்யுத்தம், பேட்மிண்டன், வில்வித்தை, ஹாக்கி, தடகளம் என 16 போட்டிகளில் இந்தியா சார்பில் 117 வீரர்கள் களம் காண்கின்றனர்.கடந்த 2021ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 7 பதக்கங்களை வென்றிருந்தது. இந்த போட்டியில் இரட்டை இலக்கத்தில் பதக்கங்களை வெல்ல இந்தியா ஆயத்தமாகி உள்ளது.

Also Read: கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் விபரீத முடிவு.. சென்னையில் பரபரப்பு!

 

Latest News