Paris Olympics 2024: ஒலிம்பிக்கில் 2 குளியலறை மட்டுமே.. 10 பேர் பயன்படுத்தும் அவலம்.. வெளியேறிய வீராங்கனைகள்..!
Olympic Village: பாரிஸ் ஒலிம்பிக் தொடங்கப்பட்ட முதல் நாளிலிருந்து சரிவர வசதிகள் செய்து தரப்படவில்லை என வீரர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். விளையாட்டு வீரர்கள் தங்கி இருக்கும் இடத்தில் இருந்து ஸ்டேடியத்திற்கு செல்ல வீரர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் ஏசி இல்லை, ஸ்டேடியத்திற்கு செல்ல 45 நிமிடங்கள் ஆகிறது. அதற்குள் உடல் சோர்வு அடைந்துவிடுகிறது என புகார்கள் எழுந்தது. தற்போது மற்றொரு விஷயமும் பூதாகரமாக வெடித்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் 2024: கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காக 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் பயிற்சியாளர்களும் ஒலிம்பிக் நடைபெறும் பாரிஸில் உள்ள ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியுள்ளனர். பாரிஸ் ஒலிம்பிக் தொடங்கப்பட்ட முதல் நாளிலிருந்து சரிவர வசதிகள் செய்து தரப்படவில்லை என வீரர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். விளையாட்டு வீரர்கள் தங்கி இருக்கும் இடத்தில் இருந்து ஸ்டேடியத்திற்கு செல்ல வீரர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் ஏசி இல்லை, ஸ்டேடியத்திற்கு செல்ல 45 நிமிடங்கள் ஆகிறது. அதற்குள் உடல் சோர்வு அடைந்துவிடுகிறது என புகார்கள் எழுந்தது. தற்போது மற்றொரு விஷயமும் பூதாகரமாக வெடித்துள்ளது.
என்ன பிரச்சனை..?
அமெரிக்க வீராங்கனைகள் பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள வந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் போதிய வசதிகள் இல்லையென அங்கிருந்து வெளியேறி தற்போது ஹோட்டலில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. சில விளையாட்டு வீரர்கள் பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள அறைகள் மிகவும் சிறியதாக இருப்பதாக கூறி, ஹோட்டலுக்கு மாறியுள்ளனர். அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் கோகோ கஃப் டிக்டாக் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த 7 வினாடி வீடியோவில், கோகோ தங்கியிருந்த அறையை காட்டுகிறார். அந்த அறை மிகவும் சிறியதாக இருந்த நிலையில், இங்கு என்னுடன் 10 வீராங்கனைகள் இருந்ததாகவும், 2 குளியலறைகள் மட்டும் இருந்ததாகவும் தெரிவித்தார். அந்த வீடியோவில் அவர், “என்னைத் தவிர அனைத்து டென்னிஸ் பெண்களும் ஒரு ஹோட்டலுக்கு மாறினர். எனவே இப்போது இரண்டு குளியலறைகளில் ஐந்து பெண்கள் மட்டுமே பயன்படுத்துகிறோம்” என தெரிவித்தார்.
மேலும் சில பிரச்சனைகள்..
- பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்தில் 3,500 இருக்கைகள் கொண்ட அமரும் இடத்தில் கிட்டதட்ட 15,000 பேர் உணவருந்த வேண்டிய சூழல் உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
- ஜப்பான் நாட்டை சேர்ந்த ரக்பி செவன்ஸ் வீரர் ஒருவர், ஒலிம்பிக் விளையாட்டு கிராமத்தில் உள்ள அவரது அறையில் திருமண மோதிரம், நெக்லஸ் மற்றும் பணம் வைத்திருந்தபோது, யாரோ அதை திருடி சென்றனர். இதையடுத்து அவர் காவல்துறையில் புகார் அளித்தார். இந்திய மதிப்பில் அதன் விலை சுமார் ரூ. 2 லட்சத்து 70 ஆயிரம் என்று கூறப்படுகிறது.
- ஆஸ்திரேலிய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் ஒருவர் கிரெடிட் கார்டு திருடப்பட்டதாக காவல்துறையில் புகார் அளித்தார்.
- முன்னதாக, ஒலிம்பிக் கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் குறித்து அர்ஜென்டினா வீரர்கள் புகார் தெரிவித்தனர்.
- இந்தியாவின் முதல் நிலை ஒற்றையர் டென்னிஸ் வீரர் சுமித் நாகல், ”தூங்குவது முதல் பேருந்து, உணவு என யாருக்கும் போதிய அசதி செய்து தரவில்லை. வீரர்கள் அனைவரும் அதிருப்தியில் உள்ளனர்” என தெரிவித்தார்.