Paris Olympics Day 12 Highlights: ஒலிம்பிக்கின் 12ம் நாள்..! வினேஷ் தகுதி நீக்கம் முதல் மீரா பாய் தோல்வி வரை!
Olympics 2024: வினேஷ் போகத் அதிக எடை காரணமாக பெண்களுக்கான 50 கிலோ இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்திய மகளிர் டேபிள் டென்னிஸ் அணி காலிறுதியில் ஜெர்மனியிடம் தோல்வியடைந்தது. மல்யுத்த வீராங்கனை பங்கல், பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவில் துருக்கியின் யெட்கில் ஜெய்னெப்பிடம் 0-10 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தார். இந்தநிலையில், 12ம் நாளான நேற்று ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் எப்படி செயல்பட்டனர் என்பதை இங்கே பார்க்கலாம்.
பாரிஸ் ஒலிம்பிக் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024ல் 12ம் நாளான நேற்று இந்திய பளுதுக்கும் வீராங்கனை மீராபாய் சானு பளுதூக்குதலில் பதக்கத்தை தவறவிட்டார். தனது 49 கிலோ எடைப் பிரிவில் நான்காவது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார். அதை தொடர்ந்து, இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் தங்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். வினேஷ் போகத் அதிக எடை காரணமாக பெண்களுக்கான 50 கிலோ இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்திய மகளிர் டேபிள் டென்னிஸ் அணி காலிறுதியில் ஜெர்மனியிடம் தோல்வியடைந்தது. மல்யுத்த வீராங்கனை பங்கல், பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவில் துருக்கியின் யெட்கில் ஜெய்னெப்பிடம் 0-10 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தார். இந்தநிலையில், 12ம் நாளான நேற்று ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் எப்படி செயல்பட்டனர் என்பதை இங்கே பார்க்கலாம்.
ALSO READ: Olympics Wrestling: உடல் எடை.. சுற்றுகள்.. மல்யுத்தம் போட்டியில் விதிமுறை என்ன?
மீரா பாய் சானு ஏமாற்றம்:
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சானு 199 கிலோ (ஸ்னாட்ச் 88 கிலோ + க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 111 கிலோ) தூக்கினார். ஸ்னாட்ச்சில் தனது முதல் முயற்சியிலேயே 85 கிலோ எடையை தூக்கி வலுவான தொடக்கத்தை கொடுத்தார். இரண்டாவது முயற்சியில் மீராவால் 88 கிலோ தூக்க முடியவில்லை. அவர் தனது மூன்றாவது மற்றும் கடைசி முயற்சியில் 88 கிலோ எடையை வெற்றிகரமாக தூக்கி நம்பிக்கை கொடுத்தார்.
அதேசமயம், க்ளீன் அண்ட் ஜெர்க் முறையில் முதல் முயற்சியிலேயே 111 கிலோ எடையைத் தூக்கி மீராபாய் தோல்வியடைந்தார். இரண்டாவது முயற்சியில் 111 கிலோ எடையை வெற்றிகரமாக தூக்கினார். சானு தனது மூன்றாவது கிளீன் அண்ட் ஜெர்க் முயற்சியில் 114 கிலோ தூக்கி நான்காவது இடத்தைப் பிடித்தார். இந்த போட்டியில், சீனாவின் ஹூ ஜிஹுய் (206 கிலோ) தங்கப் பதக்கம் வென்றார். ருமேனியாவின் மிஹேலா காம்பே (205 கிலோ) வெள்ளிப் பதக்கம் வென்றார். தாய்லாந்தின் சுரோத்சனா கம்பாவோ (200 கிலோ) மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் கைப்பற்றினார்.
ஆண்களுக்கான 3000 மீ ஸ்டீபிள்சேஸ்:
நேற்று ஸ்டேட் டி பிரான்சில் நடைபெற்ற பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 3000மீ ஸ்டீபிள்சேஸ் இறுதிப் போட்டியில் அவினாஷ் சேபிள் பதினொன்றாவது இடத்தைப் பிடித்தார். இந்த போட்டியில் மொராக்கோவின் சோஃபியன் தங்கப் பதக்கத்தையும், அமெரிக்காவின் கென்னத் ரூக்ஸ் வெள்ளியும், கென்யாவின் ஆபிரகாம் கிபிவோட் வெண்கலமும் வென்றனர்.
வினேஷ் போகத் தகுதி நீக்கம்:
பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து வினேஷ் போகத், தனது எடைப் பிரிவை விட அதிக எடையுடன் இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால், இவரால் அமெரிக்க வீராங்கனைக்கு எதிரான 50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த இறுதிப் போட்டியில் விளையாடவில்லை.
தடகளப் போட்டி
தடகளப் போட்டியின் மாரத்தான் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியாவின் பிரியங்கா மற்றும் சூரஜ் பன்வார் இறுதிப் போட்டியிலிருந்து வெளியேறினர்.
பெண்களுக்கான ஈட்டி எறிதல்:
பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் அனு ராணியால் இறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. தகுதிச் சுற்றில் இருந்தே அவர் வெளியேற்றப்பட வேண்டியதாயிற்று. அனு 55.81 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து, 16 ஈட்டி எறிதல் வீரர்களில் 15வது இடத்தைப் பிடித்தார்.
ALSO READ: Vinesh Phogat : வெள்ளி பதக்கம் கோரி வினேஷ் போகத் மேல்முறையீடு.. இன்று தீர்ப்பு!
டேபிள் டென்னிஸ் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி ஜெர்மனி 2-0 என முன்னிலை பெற்றது.
தடகளப் போட்டியின் ஆடவர் உயரம் தாண்டுதலில் இந்தியாவை சேர்ந்த சர்வேஷ் குஷாரே 2.20 மீட்டர் தாண்டாததால் வெளியேறினார்.