Manu Bhaker: நிகழ்ச்சிக்கு ஏன் ஒலிம்பிக் பதக்கம்..? நெட்டிசன்கள் ட்ரோல்.. மனு பாக்கர் பதிலடி!
Olympic medalist Manu Bhaker: பாரிஸ் ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்ற பிறகு, மனு 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தனது மூன்றாவது பதக்கத்தை வெல்ல வாய்ப்பு இருந்து தவறவிட்டார். அந்த போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்து மனு பாக்கர் ஏமாற்றம் அளித்தார். இருப்பினும், இரண்டு பதக்கங்களை வென்று துப்பாக்கி சுடுதல் விளையாட்டின் மூலம் நாட்டிற்கு தொடர்ந்து பெருமை சேர்த்த மனு பாக்கர், எதிர்காலத்திலும் நிச்சயம் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மனு பார்க்கர் ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கலப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்தார். பாரிஸில் கடந்த மாதம் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மற்றும் கலப்பு குழு போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை மனு பாக்கர் வென்றார். இந்த பதக்கங்களின் மூலம் ஒலிம்பிக் போட்டியின் ஒரே பதிப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற 6 பதக்கங்களில், இரண்டு மனு பாக்கரால் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பாரிஸ் ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்ற பிறகு, மனு 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தனது மூன்றாவது பதக்கத்தை வெல்ல வாய்ப்பு இருந்து தவறவிட்டார். அந்த போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்து மனு பாக்கர் ஏமாற்றம் அளித்தார். இருப்பினும், இரண்டு பதக்கங்களை வென்று துப்பாக்கி சுடுதல் விளையாட்டின் மூலம் நாட்டிற்கு தொடர்ந்து பெருமை சேர்த்த மனு பாக்கர், எதிர்காலத்திலும் நிச்சயம் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில், மனு பாக்கர் சமீபத்தில் கலந்துகொண்ட பல நிகழ்ச்சிகளில் தான் வென்ற பாரிஸ் ஒலிம்பிக் பதக்கங்களை அணிந்து சென்றுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் மனு பாக்கரை அதிகளவில் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இதற்கு மனு பாக்கர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
ALSO READ: IND vs BAN 2nd Test: 3 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச போட்டி.. கான்பூரில் இந்திய அணி இதுவரை எப்படி..?
எதனால் ட்ரோல் செய்யப்பட்டார் மனு பாக்கர்..?
சமீபத்தில் மனு பாக்கர் அதிகளவில் ட்ரோல் செய்யப்பட்டது குறித்து அவரிடம் டைம்ஸ் ஆஃப் இந்தியா கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த மனு பாக்கர், “செய்வேன், ஆம்! நான் ஏன் நிகழ்ச்சிக்கு பதக்கங்களை கொண்டு செல்லக்கூடாது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தன்னிடம் அவற்றை கொண்டு வருமாறு கேட்கிறார்கள். எல்லோரும் பதக்கங்களை பார்க்க விரும்புகிறார்கள். அதனால் நான் அவற்றை என்னுடன் எடுத்து செல்கிறேன். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தயவுசெய்து உங்கள் பதக்கங்களை கொண்டு வாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறார்கள். நான் அதை எடுத்து செல்லும்போது, அந்த நிகழ்ச்சிகளில் பல புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, சமூக வலைதள பக்கத்தில் ட்ரோல் குறித்து மனம் திறந்த மனு பாக்கர் தன் வாழ்நாளில் துப்பாக்கி சுடுதல் மூலம் வென்ற பதக்கங்கள் அனைத்தையும் தனது படுக்கையில் வைத்து, “ என்னை எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும், இந்தப் பதக்கத்தைக் காட்டச் சொன்னால், அதை பெருமையாகக் காட்டுவேன். எனது அழகான பயணத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான எனது வழி இதுதான்.
நான் துப்பாக்கி சுடுதல் பயணத்தை தொடங்கும் போது எனக்கு 14 வயது. இவ்வளவு தூரம் வருவேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. நீங்கள் ஒன்றைத் தொடங்கினால், அது எவ்வளவு கடினமாக இருந்தாலும், உங்கள் கனவுகளை இடைவிடாமல் துரத்த முடிந்த அனைத்தையும் செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கவனத்துடன் இருங்கள், உந்துதல் பெறுங்கள், உங்கள் ஆர்வத்தை உங்கள் பயணத்திற்கு எரியூட்டட்டும். முன்னோக்கி செல்லும் ஒவ்வொரு சிறிய அடியும் உங்களை மகத்துவத்திற்கு நெருக்கமாகக் கொண்டுவருகிறது. தொடருங்கள், நீங்கள் கற்பனை செய்வதை விட அதிக திறன் கொண்டவராக இருப்பீர்கள்.
ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு, இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டு, உலக சாம்பியன்ஷிப், உலக கோப்பை கோப்பை, உலக பல்கலைக்கழக விளையாட்டு ஆகிய போட்டிகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளேன். இருப்பினும், ஒலிம்பிக்கில் இந்திய நாட்டுக்காக தங்கப் பதக்கம் வெல்லும் கனவு இன்னும் தொடர்கிறது.” என்று பதிவிட்டுள்ளார்.
மனு பாக்கருக்கு புதிய கௌரவம்:
ஹரியானா சட்டபேரவை தேர்தல் பிரச்சாரம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கல பதக்கங்களை வென்ற மனு பாக்கர் ஹரியானா சட்டபேரவை தேர்தலுக்கான பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, ஹரியானா தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மனு பாக்கர் வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் மனு பாக்கர், “ஜஜ்ஜார் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு என்பதே நம்முடைய இலக்கு. வருகின்ற அக்டோபர் 5ம் தேதி சொந்த மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு நானே வந்து வாக்களிக்க உள்ளேன்” என்று தெரிவித்திருந்தார்.