Antim Panghal: இந்திய மல்யுத்த வீராங்கனை வெளியேற உத்தரவு.. ஒலிம்பிக் கமிட்டி அதிரடி! ஏன் தெரியுமா..?
Paris Olympics 2024: இளம் மல்யுத்த வீராங்கனை அண்டிம் பங்கல் செய்த காரியத்தால் இந்தியா தற்போது ஒரு மோசமான நிகழ்வை சந்தித்துள்ளது. பங்கலின் இந்த செயலை கருத்தில் கொண்டு, ஒலிம்பிக் கமிட்டி கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து பங்கல் மற்றும் அவரது பயிற்சியாளர் குழுவை உடனடியாக இந்தியாவுக்கு திரும்ப ஒலிம்பிக் கமிட்டி உத்தரவிட்டுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து இந்தியா சார்பில் 50 கிலோ எடை பிரிவில் இறுதிப்போட்டி வரை தகுதி பெற்றிருந்த வினேஷ் போகத் நேற்று 100 கிராம் எடை அதிகம் இருந்த காரணத்தினால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த அதிர்ச்சியான செய்தி மறைவதற்குள், இப்போது மற்றொரு பெண் மல்யுத்த வீராங்கனை இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். அது என்னவென்றால், இளம் மல்யுத்த வீராங்கனை அண்டிம் பங்கல் செய்த காரியத்தால் இந்தியா தற்போது ஒரு மோசமான நிகழ்வை சந்தித்துள்ளது. பங்கலின் இந்த செயலை கருத்தில் கொண்டு, ஒலிம்பிக் கமிட்டி கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து பங்கல் மற்றும் அவரது பயிற்சியாளர் குழுவை உடனடியாக இந்தியாவுக்கு திரும்ப ஒலிம்பிக் கமிட்டி உத்தரவிட்டுள்ளது.
ALSO READ : Vinesh Phogat : வெள்ளி பதக்கம் கோரி வினேஷ் போகத் மேல்முறையீடு.. இன்று தீர்ப்பு!
அப்படி என்ன நடந்தது..?
ஒலிம்பிக்கின் 12ம் நாளான நேற்று 53 கிலோ எடை பிரிவில் அண்டிம் பங்கல் தனது முதல் போட்டியில் களமிறங்கி தோல்வியடைந்தார். இதன்மூலம், அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் அண்டிம் பங்கலுக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அண்டிம் பங்கல் தனது தனிப்பட்ட பயிற்சியாளர் பகத் சிங் மற்றும் அவரது உதவி பயிற்சியாளர் விகாஸை காண, அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது, அண்டிம் பங்கல் தனது தங்கையை அழைத்து, தான் தனது பயிற்சியாளர்களை சந்திக்க செல்வதாகவும், நீ அதற்கு ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீராங்கனை தங்கியிருக்கும் எனது அறைக்கு சென்று தனது பொருட்களை எடுத்து வரும்படி கூறி தனது அதிகாரப்பூர்வ அங்கீகார அட்டையையும் கொடுத்துள்ளார்.
Paris Olympics 2024: The Indian Olympic Association has decided to fly wrestler Antim Panghal and her support staff back after a disciplinary breach was brought to the IOA’s notice by the French authorities: Indian Olympic Association (IOA)
— ANI (@ANI) August 7, 2024
இதையடுத்து, அண்டிம் பங்கலுக்கு மட்டுமே அனுமதி உள்ள அங்கீகார அட்டையை தன் சகோதரியிடம் கொடுத்து ஒலிம்பிக் கிராமத்திற்குள் அனுப்பியபோது, அண்டிம் பங்கலின் தங்கையை காவல் துறையினர் சட்டவிரோதமாக உள்ளே நுழைந்த காரணத்திற்காக பிடித்து வைத்துள்ளனர். அதன்பிறகு தவலறிந்த அண்டிம் பங்கல், தனது தங்கையான நிஷா பங்கலை காப்பாற்றும்படி இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையடுத்து, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலையீட்டை தொடர்ந்து அண்டிம் பங்கல் மற்றும் அவரது தங்கை நிஷா பங்கல் பாரிஸ் காவல்துறையினரால் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, அண்டிம் பங்கல் மற்றும் அவரது பயிற்சியாளர்கள் அடங்கிய குழுக்களுக்கு அங்கீகாரத்தை ரத்து செய்த சர்வதேச ஒலிம்பி சங்கம், அவர்கள் அனைவரும் உடனடியாக இந்தியா திரும்பும்படி உத்தரவிட்டது.