Paris Olympics 2024: காதல் முறிவுக்கு பிறகு தங்கம் வென்ற செக் குடியரசு ஜோடி.. ஒலிம்பிக்கில் முத்தமிட்டு கொண்ட அழகிய தருணம்!
Olympic Games: ஒவ்வொரு நாட்டிலிருந்தும் விளையாட்டு வீரர்கள் தங்கள் நாட்டுக்காக ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்வதற்கு ஈடு இணையற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் நான்கு வருட கடின உழைப்புக்குப் பிறகு இங்கு வந்து பதக்கத்தை வெல்வதற்கு அருகில் உள்ளனர். இந்தநிலையில், பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, பிரேக் அப் செய்துகொண்ட ஜோடி ஒன்று, நடப்பு ஒலிம்பிக்கில் தங்கம் வென்று அசத்தியுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் 2024: 2024 ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பாரிஸ் ஒலிம்பிக் 2024 முடிய இன்னும் ஏழு நாட்களே உள்ளன. இதில் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் விளையாட்டு வீரர்கள் தங்கள் நாட்டுக்காக பதக்கங்களை வெல்வதற்கு ஈடு இணையற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் நான்கு வருட கடின உழைப்புக்குப் பிறகு இங்கு வந்து பதக்கத்தை வெல்வதற்கு அருகில் உள்ளனர். இந்தநிலையில், பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, பிரேக் அப் செய்துகொண்ட ஜோடி ஒன்று, நடப்பு ஒலிம்பிக்கில் தங்கம் வென்று அசத்தியுள்ளது.
யார் அந்த ஜோடி..?
2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பு செக் குடியரசு நாட்டை சேர்ந்த கலப்பு டென்னிஸ் வீரர்களான கேத்தரினா மற்றும் தாமஸ் மச்சாக் பிரேக் அப் செய்து கொண்டனர். இவர்கள் உறவு முறையில் பிரேக் அப் செய்திருந்தாலும் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கள் நாட்டுக்காக விளையாட இருவரும் சம்மதித்தனர். தங்கம் வென்றதும் கேத்தரினா மற்றும் தாமஸ் மச்சாக் ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தமிட்டு கொண்டனர். தற்போது இந்த காட்சிகள் இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.
Teammate chemistry ✅
Olympic Gold medals ✅
Congrats to Tomas Machac and Katerina Siniakova for winning the mixed doubles championship at the Paris Olympics! pic.twitter.com/oaf66r24e0
— Cincinnati Open (@CincyTennis) August 2, 2024
இதையடுத்து ஸ்டேடியத்திற்கு வெளியே பிரிந்த ஜோடிகள் சில வாரங்களுக்கு பிறகு தங்கள் நாட்டிற்காக ஒலிம்பிக் தங்கத்தை வென்ற கதையை படமாக எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் சீனாவின் ஜாங் ஜிசென் மற்றும் வாங் சின்யு ஜோடிக்கு எதிராக செக் குடியரசை சேர்ந்த கேத்தரினா மற்றும் தாமஸ் மச்சாக் ஜோடி கடந்த வெள்ளிக்கிழமை இறுதிப்போட்டியில் களமிறங்கியது. இந்த போட்டியில் இந்த ஜோடி 6-2, 5-7, 10-8 என்ற செட் கணக்கில் சீனாவின் ஜாங் ஜிசென் மற்றும் வாங் சின்யு ஜோடியை தோற்கடித்து தங்கம் வென்று அசத்தியது.
I’m not crying you’re crying: Truly beautiful moment when Kateřina Siniaková breaks down in tears during the Czech national anthem. 🇨🇿🥲
— Ian Willoughby (@Ian_Willoughby) August 3, 2024
தங்கம் வென்றதற்கு பிறகு செய்தியாளர் ஒருவர் இந்த ஜோடியிடம், “ நீங்கள் இன்னும் ஒன்றாக இருக்கிறீர்களா..? என்று கேள்வி எழுப்பினார். அப்போது இதற்கு பதிலளித்த மச்சாக், “ இது எங்கள் தனிப்பட்ட வாழ்க்கை. எனவே, நீங்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. இது மிகவும் ரகசியமானது” என்றார்.
தங்கம் வென்றபோது இவர்கள் தேசிய கீதம் இசைக்கப்படும்போது ஒன்றாக நின்றனர் அப்போது ஒருவரையொருவர் கட்டியணைத்து, முத்தமிட்டு கொண்டனர்.