Paris Olympic Day 11 Highlights: ஒலிம்பிக்கில் ஃபைனலுக்கு முன்னேற தவறிய இந்திய ஹாக்கி அணி.. நீரஜ், போகத் அசத்தல்..!

Olympic games: அரையிறுதியில் இந்திய ஹாக்கி அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா ஸ்பெயினை எதிர்கொள்கிறது. மறுபுறம், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்தநிலையில், ஒலிம்பிக்கில் 11ம் நாளான நேற்று இந்திய வீரர்கள் எப்படி செயல்பட்டனர் என்ற விவரத்தை முழுமையாக பார்க்கலாம்.

Paris Olympic Day 11 Highlights: ஒலிம்பிக்கில் ஃபைனலுக்கு முன்னேற தவறிய இந்திய ஹாக்கி அணி.. நீரஜ், போகத் அசத்தல்..!

கோப்பு புகைப்படம்

Updated On: 

07 Aug 2024 10:59 AM

பாரிஸ் ஒலிம்பிக்: பாரிஸ் ஒலிம்பிக்கின் 11வது நாளான நேற்று நட்சத்திர மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், 50 கிலோ பிரிவு அரையிறுதியில் கியூபா வீராங்கனையை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்து, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று புதிய வரலாறு படைத்தார். இதன்மூலம், ஒலிம்பிக்கில் மல்யுத்த இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியப் பெண் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்தமுறையும் அரையிறுதியில் இந்திய ஹாக்கி அணி தோல்வியை சந்தித்தது. அரையிறுதியில் இந்திய ஹாக்கி அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா ஸ்பெயினை எதிர்கொள்கிறது. மறுபுறம், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்தநிலையில், ஒலிம்பிக்கில் 11ம் நாளான நேற்று இந்திய வீரர்கள் எப்படி செயல்பட்டனர் என்ற விவரத்தை முழுமையாக பார்க்கலாம்.

ALSO READ: Olympic 2024 : வெற்றியை நெருங்கிய வினேஷ் போகத்.. கடைசி 10 நொடியில் செய்த மாஸ் சம்பவம்!

வரலாறு படைத்த வினேஷ் போகட்:

ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் பெண் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். மல்யுத்தத்தில் பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் கியூபாவின் லோபஸ் குஸ்மானை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்தார். காயம் காரணமாக கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகி, பின்னர் டோக்கியோ ஒலிம்பிக்கில் 16வது சுற்றில் வினேஷ் போகத் வெளியேறினார். தற்போது நடைபெற்றுவரும் பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகத் தனது முதல் ஆட்டத்தில் அதாவது காலிறுதிக்கு முந்தைய போட்டியில் நான்கு முறை உலக சாம்பியனும் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவருமான சுகாசிகை 3-2 என்ற கணக்கில் வென்றார். காலிறுதியில் ஒக்ஸானாவை 7-5 என்றும், அரையிறுதியில் 5-0 என்ற கணக்கிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று அதாவது ஆகஸ்ட் 7ம் தேதி தங்கப் பதக்கத்திற்காக போட்டியிடுவார்.

இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா:

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் நடப்பு சாம்பியனான நீரஜ் சோப்ரா நேற்று தனது முதல் முயற்சியிலேயே 89.34 மீட்டர் தூடம் எறிந்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, இந்தாண்டு மீண்டும் தங்கப் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

400 மீட்டர் தடகளப் போட்டி:

பெண்களுக்கான 400 மீட்டர் தடகளப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த கிரண் பஹல் அரையிறுதிக்கு போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை தவறவிட்டார். 6 வீரர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் 52.59 வினாடிகளில் போட்டி இலக்கை அடைந்து கடைசி இடமான ஆறாவது இடத்தை பிடித்தார். பெண்களுக்கான 400 மீட்டர் தடகளப் போட்டியில் நைஜீரியாவின் எல்லா ஒனோஜுவ்வெமோ 50. 59 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். இந்த தடகளப் போட்டியில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தை பிடித்த வீராங்கனைகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

ஆடவர் டேபிள் டென்னிஸ் போட்டி:

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய ஆடவர் டேபிள் டென்னிஸ் அணி, முதலிடத்தில் உள்ள சீனாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்து வெளியேறியது.

ALSO READ: Olympic 2024 : முதல் வாய்ப்பிலேயே 89.34 மீ-க்கு ஈட்டியை வீசி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நீரஜ் சோப்ரா!

ஏமாற்றம் அளித்த இந்திய ஹாக்கி அணி:

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய ஆடவர் ஹாக்கி அணியை வீழ்த்தி ஜெர்மனி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் ஜெர்மனி அணி இந்தியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. மற்றொரு அரையிறுதியில் ஸ்பெயினை வீழ்த்தி நெதர்லாந்து போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற தவறினாலும், ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கி அணிக்கு வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பு உள்ளது. இதன்மூலம், தங்கப் பதக்கம் வெல்ல இந்தியாவின் 44 ஆண்டுகால காத்திருப்பு தொடர்கிறது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!