5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Paris Olympics 2024 Day 14 Highlights: ஒலிம்பிக்கின் 14ம் நாளில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்.. அசத்திய அமன் செஹ்ராவத்!

Paris Olympics 2024: ஆண்களுக்கான 57 கிலோ எடை பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் அமன் செஹ்ராவத் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இது இந்தியாவின் ஆறாவது பதக்கம் (ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலம்) ஆகும். இதற்கிடையில், வினேஷ் போகத்தின் விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை முடிந்தது. இறுதி தீர்ப்பில் வினேஷ் போகத்துக்கு வெள்ளி பதக்கம் வழங்க தீர்ப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் ஒலிம்பிக்கின் 14வது நாளான நேற்று இந்திய வீரர்கள் எப்படி செயல்பட்டனர் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Paris Olympics 2024 Day 14 Highlights: ஒலிம்பிக்கின் 14ம் நாளில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்.. அசத்திய அமன் செஹ்ராவத்!
அமன் – பி.ஆர்.ஸ்ரீஜேஷ்
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 10 Aug 2024 10:57 AM

பாரிஸ் ஒலிம்பிக் 2024: பாரிஸ் ஒலிம்பிக்கின் நேற்றைய 14வது நாளில் நடைபெற்ற ஆண்களுக்கான 57 கிலோ எடை பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் அமன் செஹ்ராவத் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன்மூலம், 21 வயது 24 நாட்களில் இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இளம் வீரர் என்ற சாதனையை அமன் செஹ்ராவத் படைத்தார். நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இது இந்தியாவின் ஆறாவது பதக்கம் (ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலம்) ஆகும். இதற்கிடையில், வினேஷ் போகத்தின் விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை முடிந்தது. இறுதி தீர்ப்பில் வினேஷ் போகத்துக்கு வெள்ளி பதக்கம் வழங்க தீர்ப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் ஒலிம்பிக்கின் 14வது நாளான நேற்று இந்திய வீரர்கள் எப்படி செயல்பட்டனர் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ALSO READ: Gold Price August 10 2024 : தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

வெண்கல பதக்கம் வென்ற அமன்:

இந்திய மல்யுத்த வீரர் அமன் செஹ்ராவத் 14வது நாளில் இந்தியாவிற்காக வெண்கலப் பதக்கத்தை வென்றார். கடந்த வியாழன் அன்று நடந்த ஆடவர் 57 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​பிரிவின் அரையிறுதியில் ஜப்பானின் முதல் நிலை வீரரான ரெய் ஹிகுச்சியிடம் அமன் தோல்வியை சந்தித்தார். இதையடுத்து, 7 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் அவர் 13-5 என்ற புள்ளிகளில் போர்ட்டோ ரிக்கோவின் டேரியன் டோய் குரூஸை தோற்கடித்தார். இதன் மூலம் தங்கப் பதக்கம் வெல்லும் அவரது கனவு கலைந்தாலும், வெண்கலப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார். முன்னதாக இவர் 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கம் வென்றிருந்தார்.

ரிலே அணி:

ஹீட் 2 போட்டியின் 1வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி 3:00:58 என்ற நேரத்துடன் 5வது இடத்தைப் பிடித்தது. இதன்மூலம் அமோல் ஜேக்கப், ராஜேஷ் ரமேஷ், சந்தோஷ் குமார், முஹம்மது அஜ்மல், முஹம்மது அனஸ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறத் தவறியது.

இந்திய பெண்கள் அணி 3:32:51 என்ற நேரத்தில் 16 அணிகளில் 15வது இடத்தைப் பிடித்தது. இதன் காரணமாக 4X400 மீ தொடர் ஓட்டத்தின் இறுதிப் போட்டிக்கு இந்திய பெண்கள் அணி தகுதிபெறத் தவறிவிட்டது. இதில் இந்தியா தரப்பில் சுபா, பூவம்மா, ஜோதிகா, விந்தியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ALSO READ: Relationship Tips: திருமணத்திற்கு பிறகு தம்பதி செய்யக்கூடாத சில விஷயங்கள்.. பெரிய ஆபத்தை தந்துவிடும்!

வினேஷ் போகத்திற்கு வெள்ளி பதக்கமா..?

வினேஷ் போகத், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்குமாறு CAS (விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம்)-யிடம் முறையிட்டார். ஒலிம்பிக் போட்டிகள் முடிவதற்குள் CAS தனது முடிவை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

கோல் கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷுக்கு கௌரவம்:

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வெல்ல முக்கியப் பங்காற்றிய நட்சத்திர கோல் கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷுக்கு தற்போது சிறப்பான கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு விழா ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதில், பி.ஆர்.ஸ்ரீஜேஷ் இந்திய அணியின் கொடியை ஏந்தி செல்வார் என இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. இதையடுத்து, 2 வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கருடன், ஸ்ரீஜேஷும் கொடி ஏந்தி செல்ல இருக்கிறார்.

Latest News