5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Paris Olympics Day 4 Highlights: ஒலிம்பிக்கின் 4வது நாளில் என்ன நடந்தது..? இந்தியாவுக்கு 2வது பதக்கம்.. மிரட்டிய வீரர்கள்..!

Paris Olympics 2024: இந்திய ஹாக்கி அணி நேற்றைய போட்டியிலும் வெற்றி கண்டு அசத்தியது. பேட்மிண்டனில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோதி தங்கள் குழுவில் பிரிவில் முதலிடம் பிடித்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குத்துச்சண்டையில் இந்திய வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். இந்தநிலையில், ஒலிம்பிக்கின் 4வது நாளான நேற்று இந்திய வீரர்கள், வீராங்கனைகளின் செயல்திறன்கள் எப்படி இருந்தது என்பதை எங்கே பார்க்கலாம்.

Paris Olympics Day 4 Highlights: ஒலிம்பிக்கின் 4வது நாளில் என்ன நடந்தது..? இந்தியாவுக்கு 2வது பதக்கம்.. மிரட்டிய வீரர்கள்..!
கோப்பு புகைப்படம்
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 31 Jul 2024 10:41 AM

பாரிஸ் ஒலிம்பிக் 2024: பாரிஸ் ஒலிம்பிக் 2024 தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சுதந்திரத்துக்கு பிறகு ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றை இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான மனு பாக்கர் நேற்று படைத்தார். அதாவது சரப்ஜோத் சிங்குடன் இணைந்து பாரீஸ் விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு இரண்டாவது வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்தார். இந்திய ஹாக்கி அணி நேற்றைய போட்டியிலும் வெற்றி கண்டு அசத்தியது. பேட்மிண்டனில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோதி தங்கள் குழுவில் பிரிவில் முதலிடம் பிடித்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குத்துச்சண்டையில் இந்திய வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். இந்தநிலையில், ஒலிம்பிக்கின் 4வது நாளான நேற்று இந்திய வீரர்கள், வீராங்கனைகளின் செயல்திறன்கள் எப்படி இருந்தது என்பதை எங்கே பார்க்கலாம்.

ALSO READ: Paris Olympics 2024: ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம்.. கெத்துகாட்டிய மனு – சரப்ஜோத் ஜோடி!

துப்பாக்கி சுடுதல்:

10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு பிரிவில் கொரியாவின் லீ வோன்ஹோ மற்றும் ஓ யே ஜின் ஜோதியை வீழ்த்தி இந்தியாவை சேர்ந்த மனு பாக்கர் – சரப்ஜோத் சிங் ஜோடி இந்தியாவிற்கு இரண்டாவது பதக்கத்தை வென்று தந்தது. ஒலிம்பிக் போட்டியின் இரண்டாவது நாளில் வெண்கலம் வென்ற மனு பாக்கர், நேற்றும் வெண்கலம் வென்று அசத்தினார். டோக்கியோ ஒலிம்பிக்கில், மனு பாக்கர் தனது கைத்துப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை. மனு பாக்கர் அடுத்ததாக வருகின்ற ஆகஸ்ட் 2ம் தேதி 25 மீட்டர் மகளிர் பிஸ்டர் தகுதி போட்டியில் விளையாடுவார். அங்கு தனது மூன்றாவது பதக்கத்தை வெல்லவும் மனு பாக்கருக்கு வாய்ப்புள்ளது.

ட்ராப் ஷூட்டிங்கில் இந்தியாவின் பிருத்விராஜ் தொண்டைமான் தகுதிப் போட்டியில் 21வது இடத்தைப் பிடித்தார். மகளிர் பிரிவில் ராஜேஸ்வரி குமாரி மற்றும் ஸ்ரேயாசி சிங் முதல் நாளில் மூன்று சுற்று தகுதிச் சுற்றின் முறையே 21 மற்றும் 22வது இடத்தை பிடித்தனர். இருவரும் வருகின்ற புதன்கிழமை மேலும் இரண்டு சுற்று தகுதிச் சுற்றில் விளையாட இருக்கிறார்கள்.

இந்திய ஹாக்கி அணியின் வெற்றி பயணம்:

இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் மற்றும் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷின் சிறப்பான ஆட்டத்தின் உதவியால், இந்திய ஆடவர் ஹாக்கி அணி 2-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தியது. கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 11வது நிமிடத்தில் பெனால்டி ஸ்ட்ரோக்கிலும், 19வது நிமிடத்தில் பெனால்டி கார்னரிலும் இரண்டாவது கோலை அடித்தார். இதன்மூலம், இந்திய அணி, விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றி, 1 டிராவை பெற்றுள்ளது. இந்தநிலையில், இந்திய ஹாக்கி அணி அடுத்ததாக வருகின்ற ஆகஸ்ட் 2ம் தேதி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

பேட்மிண்டன்:

பேட்மிண்டனில் ராங்கிரெட்டி-சிராக் ஜோடி, பாரிஸ் ஒலிம்பிக்கின் ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்தோனேசிய ஜோடியான முஹம்மது ரியான் அர்டியான்டோ மற்றும் ஃபஜர் அல்பியன் ஜோடியை வீழ்த்தி முதலிடத்தை பிடித்தனர். குழு சியில் இந்திய ஜோடி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது.

மகளிர் இரட்டையர் பிரிவில் பொன்னப்பா மற்றும் தனிஷா க்ராஸ்டோ ஜோடி தொடர்ந்து மூன்றாவது தோல்வியுடன் ஒலிம்பிக் தகுதி சுற்றில் இருந்து வெளியேறியது. உலகின் 18வது ரேங்க் ஜோடியான அஷ்வினி மற்றும் தனிஷா ஜோடி, உலகின் 26வது ரேங்க் ஜோடியான மபூசா மற்றும் யூ ஜோடிக்கு எதிராக 38 நிமிடங்களில் 15-21, 10-21 என்ற கணக்கில் தோல்வியை சந்திக்க நேரிட்டது.

வில்வித்தை:

இந்திய வில்வித்தை வீராங்கனை பஜன் கவுர், ஒலிம்பிக்கின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்தின் வைலெட்டா மைஸரை 6-0 என்ற கணக்கில் வென்று 16 வது இடத்தை பிடித்தார், அதேபோல், போலந்தைச் சேர்ந்த வீராங்கனையிடம் 64 ஸ்டேஜ் ஆட்டத்தில் அங்கிதா 6-4 என்ற கணக்கில் தோற்றார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்திய வில்வித்தை வீரரான தீரஜ் பொம்மதேவரா, கனடாவின் எரிக் பீட்டர்ஸுக்கு எதிரான கடைசி 32 ஸ்டேஜில் தோல்வியை சந்தித்தார்.

ALSO READ: Paris Olympics Day 3 Highlights: ஒலிம்பிக்கில் மீண்டும் மனு பாக்கர் முத்திரை.. கால் இறுதியில் பேட்மிண்டன் இந்திய ஜோடி.. 3ம் நாள் ஹைலைட்ஸ் இதோ!

பாய்மர பயணம்:

பாரிஸ் ஒலிம்பிக்கில் பாய்மர போட்டியில் இந்தியாவில் இருந்து பங்கேற்ற இரே வீரரான கிலாடி பால்ராஜ், ஆடவர் ஒற்றையர் ஸ்கல்லில் தனது ஹீட் ரேஸில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். இவர் அடுத்ததாக 13 முதல் 24வது இடங்களுக்கான போட்டியில் விளையாட இருக்கிறார்.

குத்துச்சண்டை:

அனுபவம் வாய்ந்த குத்துச்சண்டை வீரர் அமித் பங்கால் 51 கிலோ பிரிவில் 16-வது பிரிவில் ஆப்பிரிக்க விளையாட்டு சாம்பியனும் மூன்றாம் நிலை வீரருமான ஜாம்பியாவின் பேட்ரிக் சின்யெம்பாவிடம் 1-4 என்ற கணக்கில் தோற்று வெளியேறினார்.

Latest News