5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Paris Olympics Day 9 Highlights: ஒலிம்பிக் 9ம் நாள்! அரையிறுதியில் இந்திய ஹாக்கி அணி..! ஏமாற்றிய லக்‌ஷயா சென்!

Olympics 2024: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பேட்மிண்டன் வீரர் லக்‌ஷயா சென் அரையிறுதியில் விக்டர் ஆக்செல்சனிடம் 22–20, 21–14 என்ற கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார். குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினார். அதேபோல், பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் தடகள வீராங்கனை பருல் சவுத்ரி எட்டாவது இடத்தை பிடித்து வெளியேறினார். இந்தநிலையில், ஒலிம்பிக்கில் 9ம் நாளான நேற்று இந்தியா வீரர்கள் எப்படி செயல்பட்டனர் என்பதை இங்கே பார்க்கலாம்.

Paris Olympics Day 9 Highlights: ஒலிம்பிக் 9ம் நாள்! அரையிறுதியில் இந்திய ஹாக்கி அணி..! ஏமாற்றிய லக்‌ஷயா சென்!
கோப்பு புகைப்படம்
mukesh-kannan
Mukesh Kannan | Published: 05 Aug 2024 10:49 AM

பாரிஸ் ஒலிம்பிக்: பாரிஸ் ஒலிம்பிக்கின் ஒன்பதாவது நாள் இந்தியாவுக்கு முன்னும் பின்னுமாக இருந்தது. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது. முன்னதாக, நேற்று நடந்த காலிறுதி போட்டியில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் கிரேட் பிரிட்டனை ஷூட் அவுட்டில் வீழ்த்தியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பேட்மிண்டன் வீரர் லக்‌ஷயா சென் அரையிறுதியில் விக்டர் ஆக்செல்சனிடம் 22–20, 21–14 என்ற கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார். குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினார். அதேபோல், பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் தடகள வீராங்கனை பருல் சவுத்ரி எட்டாவது இடத்தை பிடித்து வெளியேறினார். இந்தநிலையில், ஒலிம்பிக்கில் 9ம் நாளான நேற்று இந்தியா வீரர்கள் எப்படி செயல்பட்டனர் என்பதை இங்கே பார்க்கலாம்.

ALSO READ: Neeraj Chopra: ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா எப்போது களமிறங்குகிறார்..? முழு விவரம் இதோ..!

இந்திய ஆடவர் ஹாக்கி அணி:

பெனால்டி ஷூட் அவுட்டில் கிரேட் பிரிட்டனை தோற்கடித்து தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒலிம்பிக் அரையிறுதி போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்தது இந்திய ஹாக்கி அணி. போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்து, போட்டியை டை டிரா செய்தது. நிர்ணயிக்கப்பட்ட நேரம் வரை இரு அணிகளும் முன்னிலை பெற முயற்சித்த போதிலும் வெற்றிபெற முடியவில்லை. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறையில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் பிரிட்டனை வீழ்த்தியது. அரையிறுதியில் இந்தியா வெற்றி பெற்றால், குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கமாவது நிச்சயம். இந்திய ஹாக்கி அணி அடுத்ததாக வருகின்ற 6ம் தேதி ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் களமிறங்குகிறது.

லக்‌ஷயா சென்:

ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் டென்மார்க்கின் விக்டர் ஆக்செல்சனிடம் இந்திய பேட்மிண்டன் வீரர் லக்‌ஷயா சென் தோல்வியடைந்து வெளியேறினார். அரையிறுதியில் வெற்றி பெற்றிருந்தால், லக்‌ஷயா சென் குறைந்தபட்சம் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கத்தையாவது வென்று கொடுத்திருப்பார். இந்தநிலையில், இன்று லக்‌ஷயா சென், மலேசியா வீரர் ஜியா ஜி லீயை எதிர்த்து வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் களமிறங்குகிறார். இந்த போட்டியானது இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.

லோவ்லினா:

டோக்கியோ ஒலிம்பிக் 2020ல் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன், பாரிஸ் ஒலிம்பிக்கில் கால் இறுதி போட்டிக்கு முந்தைய போட்டியில் தோற்று வெளியேறினார். பெண்களுக்கான 75 கிலோ எடைப்பிரிவில் சீனாவின் நம்பர் ஒன் வீராங்கனையான லி கியான் லோவ்லினாவை மூன்று சுற்றுகளிலும் தோற்கடித்தார். கடந்த சனிக்கிழனை நிஷாந்த் தேவ் காலிறுதியில் தோல்வியடைந்த நிலையில், குத்துச்சண்டையில் இந்தியாவின் பதக்க கனவு முடிவுக்கு வந்தது.

படகோட்டம்:

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவர் டிங்கி படகோட்டம் தொடக்கத் தொடரின் எட்டாவது பந்தயத்திற்குப் பிறகு இந்தியாவின் விஷ்ணு சரவணன் 18வது இடத்தையும், நேத்ரா குமணன் 25வது இடத்தையும் பிடித்தனர். ஆரம்பத் தொடரில் இன்னும் 9 மற்றும் 10 பந்தயங்கள் திங்கட்கிழமை நடைபெற உள்ளன. முதற்கட்டத் தொடரில் முதல் 10 இடங்களை பிடித்த வீரர்கள் (செவ்வாய்க்கிழமை) நாளை பதக்க போட்டியில் களமிறங்குவார்கள்.

துப்பாக்கி சுடுதல்:

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான ஸ்கீட் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனைகள் மகேஸ்வரி சவுகான் மற்றும் ரேசா தில்லான் ஆகியோர் முறையே 14வது மற்றும் 23வது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறத் தவறினர்.

ALSO READ: Paris Olympics 2024: காதல் முறிவுக்கு பிறகு தங்கம் வென்ற செக் குடியரசு ஜோடி.. ஒலிம்பிக்கில் முத்தமிட்டு கொண்ட அழகிய தருணம்!

பந்தய நடை பயணம்:

பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் ஹீட் பந்தயத்தில் பருல் சவுத்ரி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை. இந்தியாவின் தேசிய சாதனையாளரான பருல் ஒலிம்பிக்கில் எட்டாவது இடத்தைப் பிடித்து வெளியேறினார்.

 

Latest News