Paris Olympics 2024: ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தில் தங்கம் உள்ளதா? இதை அதிகமுறை வென்றவர் யார்..?

Olympics Gold Medals: அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் ஒலிம்பிக்கில் அதிக தங்கப் பதக்கங்களை வென்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவர் தனது ஒலிம்பிக் வாழ்க்கையில் இதுவரை 23 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இது தவிர 3 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 28 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார்.

Paris Olympics 2024: ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தில் தங்கம் உள்ளதா? இதை அதிகமுறை வென்றவர் யார்..?

olympic gold medal

Updated On: 

26 Jul 2024 12:49 PM

ஒலிம்பிக் தங்கப் பதக்கம்: ஒலிம்பிக் 2024க்கான போட்டிகள் வருகின்ற ஜூலை 26ம் தேதி முதல் பாரிஸில் பிரமாண்டமாக தொடங்கவுள்ளது. இந்த விளையாட்டு மகாசங்கமத்தில் கலந்துகொள்வதற்காக பல்வேறு நாட்டை சேர்த்த 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பாரிஸ் நகரத்திற்கு சென்று, பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, கடந்த 2020ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார். அதேபோல், இந்தமுறையும் பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்க பதக்கத்தை நீரஜ் சோப்ரா தட்டிதூக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது ஒவ்வொரு விளையாட்டு வீரரின் கனவு. அந்தவகையில், வெற்றிபெறும் வீரர்களுக்கு வழங்கப்படும் தங்கப் பதக்கம் முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்டதா..? என்பதை இங்கே பார்க்கலாம்.

Also read: Olympic Logo: ஒலிம்பிக்கில் 5 வளையங்கள் மட்டும் ஏன்? அவற்றின் அர்த்தம் என்ன?

ஒலிம்பிக் தங்கப் பதக்கம்:

ஒலிம்பிக்கில் வெற்றி பெறும் வீரர்களுக்கு வழங்கப்படும் தங்கப் பதக்கம் முற்றிலும் தங்கத்தால் செய்யப்பட்டது கிடையாது. தங்கப் பதக்கத்தில் பெருமளவில் வெள்ளியே இடம்பெற்றிருக்கும். கடைசியாக 1912ம் ஆண்டு ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகள்வரை மட்டுமே, வெற்றி பெற்ற வீரர்களுக்கு முழுமையான தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. இதற்குப் பிறகு, தங்க பாலிஷ் செய்யப்பட்ட பதக்கங்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இருப்பினும், ஒலிம்பிக்கில் இந்த தங்கப் பதக்கத்தை வெல்வர்களுக்கு மட்டுமே, தனி மரியாதை கிடைக்கின்றன. அதற்காகவே, வீரர்கள் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

ஏன் தங்கப் பதக்கத்தில் குறைந்த அளவு தங்கம்..?

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அனைத்து பதக்கங்களுக்கும் குறிப்பிட்ட விதிகளை வகுத்துள்ளது. ஒலிம்பிக் குழுவின் விதிகளின்படி, தங்கப் பதக்கத்தில் குறைந்தது 6 கிராம் தங்கம் இருக்க வேண்டும். மீதமுள்ள 92 சதவீதத்திற்கும் அதிகமாக வெள்ளி உள்ளது. இது தவிர, பதக்கத்தின் விட்டம் குறைந்தது 60 மி.மீட்டரும், தடிமன் 3 மி.மீட்டரும் இருக்க வேண்டும். மேலும், தங்கப் பதக்கத்தின் எடை சுமார் அரை கிலோ இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தின் விலை $ 758 ஆகும். இது, இந்திய ரூபாயில் சுமார் 67,000 ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஒலிம்பிக்கில் முதன்முதலில் எப்போது தங்கப் பதக்கம் அறிமுகம் செய்யப்பட்டது..?

1904 ஆம் ஆண்டு அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின்போது ஒலிம்பிக்கில் முதல் இடம் பிடித்த வெற்றியாளருக்கு முதல் முறையாக தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதற்கு முன், தங்கம் மிகவும் விலை உயர்ந்ததாக கருதப்பட்டதால் வழங்கப்படவில்லை. இந்த ஒலிம்பிக்கின் முந்தைய பதிப்புகள் வரை ஒலிம்பிக் போட்டியில் முதல் இடம் பிடிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு வெள்ளிப் பதக்கத்தையும், இரண்டாம் இடத்தைப் பிடித்தவர் வெண்கலத்தையும் பெற்றனர், அதே சமயம் மூன்றாம் இடத்திற்கு எந்தப் பதக்கமும் கொடுக்கப்படவில்லை.

ஒலிம்பிக்கில் அதிக தங்கப் பதக்கத்தை வென்றவர் யார்..?

அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் ஒலிம்பிக்கில் அதிக தங்கப் பதக்கங்களை வென்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவர் தனது ஒலிம்பிக் வாழ்க்கையில் இதுவரை 23 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இது தவிர 3 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 28 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார்.

Also read: Olympics History: ஒலிம்பிக்ஸ் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது? இதன் வரலாறு என்ன..?

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!