Iman Khalif: தொடர்ந்து எழுந்த பாலின சர்ச்சை.. தவிடுபொடியாக்கி தங்கத்தை தூக்கிய இமானே காலீஃப்!
Paris Olympics 2024: அரையிறுதியில் அபார வெற்றியைப் பதிவு செய்த இமானே காலீஃப், இறுதிப் போட்டியில் சீனாவின் யாங் லியுவை எதிர்கொண்டார். இந்த போட்டியிலும் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்த தொடங்கிய இமானே காலீஃப், சீனாவை சேர்ந்த யாங் லியுவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை தனதாக்கினார். இதன்மூலம், லிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளைச் சேர்ந்த முதல் பெண்மணி என்ற வரலாற்றை இமானே காலீஃப் படைத்தார்.
இமானே காலீஃப்: ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் 66 கிலோ எடைப் பிரிவு மகளிர் குத்துச்சண்டையில் அல்ஜீரியா நாட்டை சேர்ந்த இமானே காலீஃப், சீனக் குடியரசின் யாங் லியுவை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார். ஒரு வருடத்திற்கு முன்பு பாலின சர்ச்சையால் உலக சாம்பியன்ஷிப்பில் இருந்து இமானே காலீஃப் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று தன் மீது இருந்த சர்ச்சைக்கு பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக, இத்தாலி குத்துச்சண்டை வீராங்கனை ஏஞ்சலா கரினியை எதிர்த்து 16வது சுற்று ஆட்டத்தில் இமான் காலீஃப் களமிறங்கினார். இத்தாலிய குத்துச்சண்டை வீராங்கனை ஏஞ்சலா கரினி, இமானே காலீஃப் உடனான போட்டியை சில நொடிகளில் கைவிட்டு, அழுதுகொண்டே வெளியேறினார்.
தொடர்ந்து, ஒரு ஆண் குத்துச்சண்டை வீரருடன் என்னை மோத விடுகிறார்கள் என ஏஞ்சலா கரினி குற்றம் சாட்டினார். இதை தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண் குத்துச்சண்டை வீரர்கள் இமானேவுக்கு எதிராகக் குரல் எழுப்பியிருந்தனர். மறுபுறம் இதை எதையும் தன்னை பாதிக்காத வகையில் பார்த்துகொண்டு மற்ற போட்டிகளில் களமிறங்கி இமானே காலீஃப், அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தினார்.
Imane Khelif wins the gold medal for Algeria! 🥇🇩🇿
–
Imane Khelif remporte la médaille d’or pour l’Algérie ! 🥇🇩🇿 #Paris2024 pic.twitter.com/XLhc9iEBXA— Paris 2024 (@Paris2024) August 9, 2024
மற்ற போட்டிகளில் எப்படி வெற்றி பெற்றார்..?
காலிறுதியில் இமானே கலீஃப், ஹங்கேரியின் லூகா அன்னா ஹமாரியை எதிர்கொண்டார். இப்போட்டியில் இமானே காலீஃப் 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். பின்னர் அரையிறுதியில் அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை தாய்லாந்தின் ஜான்ஜெம் சுவானாபெங்கை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
இறுதிப்போட்டியில் என்ன நடந்தது..?
அரையிறுதியில் அபார வெற்றியைப் பதிவு செய்த இமானே காலீஃப், இறுதிப் போட்டியில் சீனாவின் யாங் லியுவை எதிர்கொண்டார். இந்த போட்டியிலும் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்த தொடங்கிய இமானே காலீஃப், சீனாவை சேர்ந்த யாங் லியுவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை தனதாக்கினார். இதன்மூலம், லிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளைச் சேர்ந்த முதல் பெண்மணி என்ற வரலாற்றை இமானே காலீஃப் படைத்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் அறிமுகம்:
ஒலிம்பிக்கில் அல்ஜீரியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் பெண் குத்துச்சண்டை வீரராக டோக்கியோ 2020ல் களமிறங்கிய காலீஃப், பின்னர் 2022 மத்திய தரைக்கடல் விளையாட்டு மற்றும் 2023 அரபு விளையாட்டுகளில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.