5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Indian Hockey Olympic Medals: ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணியின் தங்கப் பதக்க வரலாறு.. இதுவரை எத்தனை பதக்கங்களை வென்றுள்ளது தெரியுமா..?

Hockey India at the Olympics: 1960ல் ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெள்ளிப் பதக்கம் என்றது. தங்கப் பதக்கத்திற்கு பிறகு அதிகபட்சமாக இந்திய ஹாக்கி அணி மெக்சிகோ 1968, முனிச் 1972 மற்றும் டோக்கியோ 2020 ஆகிய ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

Indian Hockey Olympic Medals: ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணியின் தங்கப் பதக்க வரலாறு.. இதுவரை எத்தனை பதக்கங்களை வென்றுள்ளது தெரியுமா..?
கோப்பு புகைப்படம்
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 26 Jul 2024 12:52 PM

இந்திய ஹாக்கி அணி: வருகின்ற ஜூலை 26ம் தேதி முதல் பாரிஸ் நகரத்தில் ஒலிம்பிக் போட்டிகள் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. எப்போதும் தொடங்கப்படும் என்ற ஆவலுடன் அனைத்து நாட்டை சேர்ந்த விளையாட்டு ரசிகர்களும் காத்திருக்கின்றனர். முதல் நவீன ஒலிம்பிக் போட்டியானது 1896ம் ஆண்டு கிரேக்கத்தில் தொடங்கப்பட்டாலும், 1908ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் முதலே ஹாக்கி போட்டிகள் நடைபெற்றது. இருப்பினும், இந்திய ஹாக்கி அணி 1928ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக்கில் முதல் முறையாக விளையாடியது. களமிறங்கிய முதல் ஒலிம்பிக் போட்டிகளிலேயே இந்திய தங்க பதக்கத்தை வென்று கெத்து கட்டியது. இதுவே இந்தியாவிற்கு முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் ஆகும். இதற்குப் பிறகு, இந்திய ஹாக்கி தொடர்ந்து ஆறு ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கங்களை வென்றது. இன்றைய காலகட்டத்தில், ஒலிம்பிக் ஹாக்கி விளையாட்டில் இந்தியா அதிக தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. இந்தநிலையில், ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி எத்தனை பதக்கங்களை வென்றுள்ளது. அது எந்த ஆண்டு என்பதை முழுமையாக இங்கு பார்க்கலாம்.

ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வென்ற பதக்க பட்டியல்:

ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி இதுவரை 12 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் அதிகபட்சமாக 8 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்கள் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது.

  • 1928 ஆம்ஸ்டர்டாம்: இது இந்தியாவின் முதல் ஒலிம்பிக் ஹாக்கி தங்கப் பதக்கம் ஆகும். இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்காத வரை தியான் சந்த் பெரியளவில் பிரபலமாகவில்லை. இந்த ஒலிம்பிக்கில் 14 கோல்களை அடித்ததன் மூலம் போட்டியில் அதிக கோல் அடித்தவர் என்ற சாதனைய படைத்தார். மேலும், இந்தியா ஐந்து போட்டிகளில் 29 கோல்களை அடித்து அசத்திருந்தது. இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்து தனது முதல் தங்கத்தை வென்றது தியான் சந்த் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி.
  • 1932 லாஸ் ஏஞ்சல்ஸ்: இந்த ஒலிம்பிக்கிலும் இந்தியாவின் கையே ஓங்கி இருந்தது. தியான் சந்தின் சகோதரர் ரூப் சிங் முதல் ஆட்டத்திலேயே 10 கோல்கள் அடித்து சாதனை படைத்தார். முதல் போட்டியில் இந்திய ஹாக்கி அணி 24-1 என்ற கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது. அதன்பிறகு, தொடர்ச்சியாக வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் ஜப்பானை 11-1 என்ற கணக்கில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது தங்கம் வென்றது.
  • 1936 பெர்லின்: ஜெர்மனியில் நடைபெற்ற ஒலிம்பிக்கிலும் இந்திய ஹாக்கி அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கம் வென்றது. இந்தப் போட்டிக்குப் பிறகு தியான் சந்த் ஓய்வு பெற்றார். இறுதிப் போட்டியில் ஜெர்மனியை 8-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தொடர்ந்து மூன்று தங்கப் பதக்கத்தை இந்தியா வென்றது.
  • 1948 லண்டன்: இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா சுதந்திரம் வென்று முதல் தங்கத்தை வென்றது. பல்பீர் சிங் அனுபவத்தால் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
  • 1952 ஹெல்சிங்கி மற்றும் 1956 மெல்போர்ன்: இந்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்ந்தது. இந்த இரண்டு போட்டிகளிலும் பல்பீர் சிங் சீனியர் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றார். ஹெல்சின்கியில் நடந்த இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை 6-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தும், மெல்போர்னில் நடந்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தும் இந்தியா தங்கப் பதக்கத்தை வென்றது.
  • 1964 டோக்கியோ: 1964 டோக்கியோ ஒலிம்பில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மீண்டும் பாகிஸ்தானை எதிர்கொண்டது இந்திய ஹாக்கி அணி. இம்முறை பெனால்டி ஸ்ட்ரோக் மூலம் இந்தியா 1-0 என வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றது.
  • 1980 மாஸ்கோ: அதன்பிறகு மூன்று ஒலிம்பிக்கில் பதக்கத்தை தவறவிட்ட இந்திய ஹாக்கி அணிம் 1980ம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் மீண்டும் சிறப்பாகச் செயல்பட்டது. இறுதிப் போட்டியில் ஸ்பெயினை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா தனது எட்டாவது மற்றும் கடைசி ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றது.

தங்கப் பதக்கத்திற்காக காத்திருக்கும் இந்திய ஹாக்கி அணி:

1960ல் ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெள்ளிப் பதக்கம் என்றது. தங்கப் பதக்கத்திற்கு பிறகு அதிகபட்சமாக இந்திய ஹாக்கி அணி மெக்சிகோ 1968, முனிச் 1972 மற்றும் டோக்கியோ 2020 ஆகிய ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

Latest News