5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Paris Olympics 2024: இன்றுடன் நிறைவடையும் ஒலிம்பிக்.. இதுவரை இந்தியா வென்ற பதக்கங்கள் பட்டியல் இதோ!

India Medal List: இன்றைய நிறைவு விழாவில் இந்தியாவின் துப்பாக்கி சுடும் வீரர் மனு பாக்கர் மற்றும் ஹாக்கி ஜாம்பவான் கோல்கீப்பர் பி.ஆர். ஸ்ரீஜேஷ் ஆகியோர் கொடி ஏந்தி செல்ல இருக்கின்றனர். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழா வடக்கு பாரிஸில் உள்ள ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு தொடங்கும். இந்தநிலையில், இந்தியா இந்த சீசஸில் எத்தனை பதக்கங்களை வென்றுள்ளது, யார் யார் இந்தியாவிற்காக பதக்கங்களை வென்று கொடுத்தனர் என்ற பட்டியலை இங்கே பார்க்கலாம்.

Paris Olympics 2024: இன்றுடன் நிறைவடையும் ஒலிம்பிக்.. இதுவரை இந்தியா வென்ற பதக்கங்கள் பட்டியல் இதோ!
மனு பாக்கர் – நீரஜ் சோப்ரா
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 11 Aug 2024 11:50 AM

பதக்க எண்ணிக்கை: பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டிகள் இன்றுடன் முடிவு பெறுகிறது. இம்முறை இந்தியா, 5 வெண்கலம் மற்றும் 1 வெள்ளி என மொத்தம் 6 பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது. இன்றைய நிறைவு விழாவில் இந்தியாவின் துப்பாக்கி சுடும் வீரர் மனு பாக்கர் மற்றும் ஹாக்கி ஜாம்பவான் கோல்கீப்பர் பி.ஆர். ஸ்ரீஜேஷ் ஆகியோர் கொடி ஏந்தி செல்ல இருக்கின்றனர். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழா வடக்கு பாரிஸில் உள்ள ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு தொடங்கும். இந்தநிலையில், இந்தியா இந்த சீசஸில் எத்தனை பதக்கங்களை வென்றுள்ளது, யார் யார் இந்தியாவிற்காக பதக்கங்களை வென்று கொடுத்தனர் என்ற பட்டியலை இங்கே பார்க்கலாம்.

ALSO READ: IPL 2024: ஐபிஎல் 2025ல் மீண்டும் விளையாடப்போகும் தோனி! பிசிசிஐ பக்கா பிளான்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா எந்த விளையாட்டில் பதக்கம் வென்றது..?

நீரஜ் சோப்ரா- ஈட்டி எறிதல் :

கடந்த டோக்கியோ 2020ல் இந்தியாவிற்காக தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்த நீரஜ் சோப்ரா, தற்போது நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்று கொடுத்தார். இந்த ஒலிம்பிக்கில் இவர் தங்கப்பதக்கம் வெல்வார் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று, இந்தியாவுக்கு 5வது பதக்கத்தை பெற்று கொடுத்தார்.

10 மீட்டர் ஏர் பிஸ்டல் – மனு பாக்கர்:

பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஒற்றையர் பிரிவில் இந்தியா தனது முதல் பதக்கம் (வெண்கலம்) பெற்றது. இந்த பதக்கத்தை இந்தியாவுக்காக வென்று கொடுத்தவர் மனு பாக்கர்.

10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி- மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங்:

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கத்தை 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணியில் இடம் பிடித்திருந்த மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் வெண்கலம் பதக்கத்தை வென்று கொடுத்தனர். 25 மீட்டர் பெண்கள் பிஸ்டல் போட்டியில் மனு நான்காவது இடத்தைப் பிடித்து ஏமாற்றம் அளித்தார். இதில், மனு பாக்கர் வெற்றி பெற்றிருந்தால் மனு பாக்கர் தனது மூன்றாவது பதக்கத்தை வென்றிருப்பார்.

ஸ்வப்னில் குசலே- 50மீ ரைபிள் 3பி

துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம் (வெண்கலம்) கிடைத்தது. 50 மீட்டர் ரைபிள் 3பி போட்டியில் ஸ்வப்னில் குசலே மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை வென்று கொடுத்தார். இதன்மூலம், இந்த போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ஸ்வப்னில் குசலே படைத்தார்.

இந்திய ஹாக்கி அணி – வெண்கலம்:

அரையிறுதியில் தோல்வியை சந்தித்த இந்திய ஹாக்கி அணி, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஹாக்கி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. இதன்மூலம், மூன்றாவது இடத்தை பிடித்த இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்று, இந்தியாவிற்கு 4வது பதக்கத்தை பெற்று தந்தது.

அமன் செஹ்ராவத்:

ஆண்களுக்கான 57 கிலோ எடை பிரிவு மல்யுத்தப் போட்டியில் 21 வயதே ஆன இந்திய வீரர் அமன் செஹ்ராவத் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம், இந்தியாவிற்கு ஆறாவது பதக்கம் கிடைத்தது.

ALSO READ: Aman Sehrawat: வெண்கலம் வெல்ல அமன் செய்த போராட்டம்.. வெறும் 10 மணி நேரத்தில் 4.5 கிலோ எடை குறைப்பு!

இந்தியாவிற்கு 7வது பதக்கம் கிடைக்குமா..?

50 கிலோ பெண்கள் மல்யுத்த போட்டியில் பங்கேற்ற வினேஷ் போகத், தனது எடை பிரிவை விட 100 கிராம் அதிக எடை கொண்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கம் வேண்டி என வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் வினேஷ் போகத் வெற்றி பெற்று வெள்ளி பதக்கம் வென்றால், இந்தியாவிற்கு 7வது பதக்கம் கிடைக்கும். வினேஷ் போகத்துக்கு பதக்கம் கிடைக்குமா இல்லையா என்பதுதான் இந்திய ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

Latest News