Who is Manu Bhaker: பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் பதக்கம்.. அசத்திய இந்திய வீராங்கனை மனு பாக்கர்.. யார் இவர் ..?

Paris Olympics 2024: முன்னதாக 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் அபிவன் பிந்த்ரா இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றார். இதன் பிறகு 2012 ஒலிம்பிக்கில் ககன் நரங் மற்றும் விஜய் குமார் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். இதையடுத்து, ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற நான்காவது வீரர் என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றுள்ளார். அதே நேரத்தில், துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

Who is Manu Bhaker: பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் பதக்கம்.. அசத்திய இந்திய வீராங்கனை மனு பாக்கர்.. யார் இவர் ..?

மனு பாக்கர் (Image: PTI)

Published: 

28 Jul 2024 17:05 PM

மனு பாக்கர்: பாரிஸ் ஒலிம்பிக் 2024 இல் இந்தியாவிற்காக பதக்கம் வென்ற முதல் தடகள வீராங்கனை மனு பாக்கர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் மனு பாக்கர். இரண்டாவது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்ற தென் கொரியாவின் கிம் யெஜியை விட 0.1 புள்ளிகள் மட்டுமே பின்தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2020ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற மனு பாகர், தனது துப்பாக்கி பழுதான் காரணத்தினால், பதக்கம் வெல்ல முடியவில்லை. இந்தமுறை அனைத்து தடைகளையும் உடைத்து பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

Also read: Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தை தூக்கிய சீனா.. முதல் பதக்கம் வென்ற நாடு இதுவா..?

முதல் இந்திய பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனை:

முன்னதாக 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் அபிவன் பிந்த்ரா இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றார். இதன் பிறகு 2012 ஒலிம்பிக்கில் ககன் நரங் மற்றும் விஜய் குமார் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். இதையடுத்து, ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற நான்காவது வீரர் என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றுள்ளார். அதே நேரத்தில், துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

யார் இந்த மனு பாக்கர் ..?

துப்பாக்கி சுடுவதில் தனது அசாதாரண திறமையால் சர்வதேச அளவில் தனக்கென தனி இடம்பிடித்தவர் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர். இவர் கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி ஹரியானாவின் ஜஜ்ஜரையில் பிறந்தார். மனு பாகர் கடந்த 2017ம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமாகி, 2018ம் ஆண்டு பியூனஸ் அயர்ஸில் நடந்த யூத் ஒலிம்பிக் விளையாட்டில் கலந்துகொண்டு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார். இதன் மூலம் யூத் ஒலிம்பிக்கில் இந்த சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் என்ற பெருமையை மனு பாக்கர் படைத்தார். அதனை தொடர்ந்து சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய உலகக் கோப்பையில் தனிநபர் மற்றும் கலப்பு அணி போட்டிகள் இரண்டிலும் தங்கப் பதக்கங்கள் உட்பட பல பதக்கங்களை வென்று கெத்து காட்டினார்.

16 வயதில் முதல் தங்கப் பதக்கம்:

குவாடலஜாராவில் நடந்த 2018 ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பையில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் வென்றதன் மூலம் மனு பாக்கர் தனது 16 வயதில் முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். அதனை தொடர்ந்து, 2018ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் கோல்ட் கோஸ்டில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்துகொண்டு தங்கப் பதக்கத்தை தனதாக்கினார். மேலும், இந்திய வீரர் அபிஷேக் வர்மாவுடன் இணைந்து, 2018 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

Also read: Shreyasi Singh: பாரிஸ் ஒலிம்பிக்கில் பீகார் எம்எல்ஏ ஸ்ரேயாசி சிங்.. என்னது! இவரும் போட்டியாளரா..?

தங்கப்பதக்கத்திற்கு தடை போட்ட டோக்கியோ ஒலிம்பிக்:

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற 19 வயதான மனு பாக்கர், தனது முதல் தொடரில் 100க்கு 98 எடுத்து, இரண்டாம் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து, இரண்டாவது தொடரில் மனு பாக்கர் களமிறங்கியபோது, அவரது கைத்துப்பாக்கி பழுதானது. அதன்பிறகு, மனு பாகருக்கு கைத்துப்பாக்கி முழுவதும் மாற்றிக்கொள்ள அனுமதி கொடுத்தபோதும், முன்பகுதியை மட்டுமே மாற்றிக்கொண்டு களமிறங்கினார். மீண்டும் துப்பாக்கி வேலை செய்யாததால், நேரம் கடந்தது. இதனால் மனு பாக்கர் 12வது இடத்துக்கு சரிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாமல் போனார்.

மனு பாக்கரின் திறமைக்கு மதிப்பளிக்கும் விதமாக கடந்த 2020ம் ஆண்டு, மத்திய அரசால் இவருக்கு அர்ஜூனா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!