Paris Olympics Day 8: ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மோசமாக அமைந்த 8ம் நாள்.. பாய்மரம் முதல் குத்துச்சண்டை வரை சறுக்கிய சோகம்!
Paris Olympics: மெக்சிகோ குத்துச்சண்ரை வீரரிடம் இந்திய வீரர் நிஷாந்த் தேவ் படுதோல்வியை அடைந்தார். முதல் இரண்டு போட்டிகளிலும் முன்னிலை வகித்த போதிலும், இந்திய குத்துச்சண்டை வீரர் நிஷாந்த் தேவ், பாரீஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 71 கிலோ எடைப்பிரிவில் மெக்சிகோவின் மார்கோவிடம் தோல்வியடைந்து காலிறுதியில் வெளியேறினார். இந்தநிலையில் எட்டாம் நாளான நேற்று இந்திய வீரர்களின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதை இங்கே பார்க்கலாம்.
பாரிஸ் ஒலிம்பிக் 2024: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் எட்டாவது நாளான நேற்று இந்தியாவிற்கு சிறப்பு வாய்ந்ததாக அமையவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தீபிகா குமாரி மற்றும் பஜன் கவுர் ஏமாற்றத்தை கொடுத்தனர். 25 மீட்டர் பிஸ்டல் போட்டியில் ஹாட்ரிக் பதக்கத்தை தவறவிட்டார். நேற்று இந்தியாவுக்கு அதிகளவிலான போட்டிகள் இல்லை என்றாலும், அதிர்ஷ்டம் பெரியதாக இல்லை. மெக்சிகோ குத்துச்சண்ரை வீரரிடம் இந்திய வீரர் நிஷாந்த் தேவ் படுதோல்வியை அடைந்தார். முதல் இரண்டு போட்டிகளிலும் முன்னிலை வகித்த போதிலும், இந்திய குத்துச்சண்டை வீரர் நிஷாந்த் தேவ், பாரீஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 71 கிலோ எடைப்பிரிவில் மெக்சிகோவின் மார்கோவிடம் தோல்வியடைந்து காலிறுதியில் வெளியேறினார். இந்தநிலையில் எட்டாம் நாளான நேற்று இந்திய வீரர்களின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதை இங்கே பார்க்கலாம்.
ஹாட்ரிக் பதக்கத்தை தவறவிட்ட மனு பாக்கர்:
இந்தியாவின் நட்சத்திர துப்பாக்கி சுடுதல் வீரர் மனு பாக்கர், ஹாட்ரிக் பதக்கத்தை தவறவிட்டார். ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற இந்தியாவின் முதல் தடகள வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்தார். இதன்மூலம், பதக்க பட்டியலில் இருந்து வெளியேறினார்.
இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மகேஸ்வரி சவுகான், பெண்கள் ஸ்கீட் போட்டியின் தகுதிக்கான முதல் நாளில் எட்டாவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் போட்டியில் தொடர்ந்து நீடித்து வருகிறார். இதில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை ரேசா தில்லான், 29 துப்பாக்கி சுடும் வீராங்கனைகளில் 25வது இடத்தில் உள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் ஆடவர் ஸ்கீட் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அனந்த்ஜித் சிங் நருகா, தகுதிச் சுற்றின் இரண்டாவது நாளில் ஏமாற்றம் அளித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறத் தவறினார்.
தீபிகா குமாரி தோல்வி:
கடந்த எட்டு போட்டிகளில் முன்னிலை வகித்தாலும், தீபிகா தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. முதல் செட்டை 28-26 என தீபிகா கைப்பற்றிய நிலையில், 2வது செட்டில் கொரியாவின் சு யோன் 28-25 என தீபிகாவை தோற்கடித்தார். இதன் பிறகு, மூன்றாவது செட்டை 29-28 என்ற கணக்கில் தீபிகா வெல்ல, நான்காவது செட்டில் மீண்டும் சு யோன் 29-27 என செட்டை கைப்பற்றி 4-4 என சமன் செய்தார். யார் வெற்றியாளர் என்பதை தீர்மானிக்கும் சுற்றில் சு யோன் 29-27 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 6-4 என்ற கணக்கில் தீபிகாவை தோற்கடித்தார். இதன் மூலம் தீபிகாவின் பயணம் காலிறுதியில் முடிந்தது.
பாய்மரம்:
ஒலிம்பிக் போட்டிகளின் பாய்மரப் பாய்ச்சல் போட்டியில் இந்தியாவின் நேத்ரா குமணன், பெண்களுக்கான பாய்மரப் படகு டிஜி போட்டியில் 24 வது இடத்திற்கு தள்ளப்பட்டார். ஆடவர் பிரிவில் விஷ்ணு சரவணன், 23வது இடத்தை பிடித்தார்.
ALSO READ: Rohit Sharma: சச்சினின் சிறப்பு பட்டியலில் இணைந்த ரோஹித்.. வார்னரை பின்னுக்கு தள்ளி அசத்தல்..!
குத்துச்சண்டை வீரர் நிஷாந்த்:
ஆண்களுக்கான 71 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை கால் இறுதியில் நிஷாந்த், மார்கோ அலோன்சோ வெர்டே அல்வாரெஸிடம் (மெக்சிகோ) தோல்வியடைந்தார். இந்த போட்டியில் நிஷாந்த் வெற்றி பெற்றிருந்தால், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு நான்காவது பதக்கம் நிச்சயம் கிடைத்திருக்கும்.