Olympics 2024 Highlights Day 7: ஒலிம்பிக் 7ம் நாளில் இந்தியா எப்படி..? மீண்டும் இறுதிப்போட்டியில் மனு.. பதக்கத்தை தவறவிட்ட வில்வித்தை ஜோடி!

Olympic Games: ஒலிம்பிக் போட்டியில் 2 முறை வெண்கலம் வென்ற மனு பாக்கர், 25 மீட்டர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் நுழைந்து ஹாட்ரிக் பதக்கத்தை வெல்ல காத்திருக்கிறார். அதேசமயம் பேட்மிண்டனில் லக்‌ஷயா சென் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இதன்மூலம் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இது தவிர, ஒலிம்பிக்கில் 52 ஆண்டுகளுக்கு பிறகு பலம் மிக்க ஆஸ்திரேலியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாதனை படைத்தது.

Olympics 2024 Highlights Day 7: ஒலிம்பிக் 7ம் நாளில் இந்தியா எப்படி..? மீண்டும் இறுதிப்போட்டியில் மனு.. பதக்கத்தை தவறவிட்ட வில்வித்தை ஜோடி!

கோப்பு புகைப்படம்

Published: 

03 Aug 2024 10:23 AM

பாரிஸ் ஒலிம்பிக் 2024: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் ஏழாவது நாளான நேற்றும் இந்தியாவிற்கு சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. இந்த ஒலிம்பிக் போட்டியில் 2 முறை வெண்கலம் வென்ற மனு பாக்கர், 25 மீட்டர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் நுழைந்து ஹாட்ரிக் பதக்கத்தை வெல்ல காத்திருக்கிறார். அதேசமயம் பேட்மிண்டனில் லக்‌ஷயா சென் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இதன்மூலம் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இது தவிர, ஒலிம்பிக்கில் 52 ஆண்டுகளுக்கு பிறகு பலம் மிக்க ஆஸ்திரேலியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாதனை படைத்தது. இந்தநிலையில் ஒலிம்பிக்கின் 7ம் நாளான நேற்று என்னென்ன நடந்தது என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ALSO READ: Olympics 2024: குத்துச்சண்டையில் பெண்ணுடன் ஆண் போட்டியா..? 46 வினாடிகளில் முடிந்த போட்டி..! ஒலிம்பிக்கில் கிளம்பிய சர்ச்சை..

மனு பாக்கர் மீண்டும் கலக்கல்:

பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், 2ம் இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்குள் தகுதி பெற்றார். இந்த போட்டியில் ஹங்கேரியின் மேஜர் வெரோனிகா முதலிடத்தில் உள்ளார். மனு பாக்கர் இதன்மூலம் தான் பங்கேற்ற மூன்றாவது தொடரிலும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். முன்னதாக, மனு பாக்கர் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியிலும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு போட்டியிலும் சரப்ஜோத் சிங்குடன் இறுதிப் போட்டிக்கு நுழைந்தார். இந்த இறுதிப் போட்டியிலும் வெண்கலப் பதக்கம் வென்றார். மனு 25 மீட்டர் பிஸ்டல் போட்டியின் இறுதிப் போட்டியில் இன்று மதியம் 1 மணிக்கு விளையாடுகிறார். அதே நேரத்தில், இதே போட்டியில் மற்றொரு இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இஷா சிங் 581 ரன்களுடன் 18வது இடத்தை பிடித்தார்.

52 ஆண்டுகளுக்கு பிறகு..

பாரிஸ் ஒலிம்பிக்கில் நேற்று பலம் மிக்க ஆஸ்திரேலிய அணியை இந்திய ஹாக்கி அணி எதிர்கொண்டது. இந்த போட்டியில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. ஒலிம்பிக் வரலாற்றில் 52 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை இந்தியா தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் 1972ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றது. அடுத்ததாக இந்திய ஹாக்கி அணி காலிறுதியில் குரூப் ஏ இலிருந்து மூன்றாவது இடத்தை பிடிக்கும் அணியை எதிர்கொள்ளும்.

வெண்கல பதக்கத்தை தவறவிட்ட வில்வித்தை ஜோடி:

கலப்பு இரட்டையர் வில்வித்தை ஜோதியான தீரஜ் பொம்மதேவரா மற்றும் அங்கிதா பகத் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டனர். நேற்று அமெரிக்காவை எதிர்கொண்டு இந்திய ஜோடி 2-6 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.

ஜூடோவில் தோல்வி:

இந்திய ஜூடோ வீராங்கனை துலிகா மான், 78 கிலோவுக்கு மேல் பெண்களுக்கான முதல் சுற்றில் லண்டன் ஒலிம்பிக் சாம்பியனான கியூபாவின் ஐடெலிஸ் ஒர்டிஸிடம் நேற்று தோல்வியடைந்து வெளியேறினார். 2022 காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற டெல்லியைச் சேர்ந்த 22 வயதான துலிகா, கியூபா வீராங்கனைக்கு எதிராக 0-10 ஐப்போன் தோல்வியை சந்தித்தார்.

இந்திய பாய்மரப் படகு வீரர் பால்ராஜ் பன்வார்:

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் ஆடவர் ஒற்றையர் ஸ்கல்ஸ் போட்டியில் வெள்ளியன்று இறுதி டி பிரிவில் 23வது இடத்துடன் தனது பிரச்சாரத்தை முடித்தார் இந்திய பாய்மரப் படகு வீரர் பால்ராஜ் பன்வார்.

கோல்ஃப்:

கோல்ஃப் விளையாட்டில் இந்திய கோல்ப் வீரர் ஷுபங்கர் ஷர்மா 25வது இடத்தையும், மற்றொரு இந்திய வீரரான ககன்ஜித் புல்லர் 52வது இடத்தையும் பிடித்தனர்.

பெண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப் பந்தயம்:

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் தடகளப் போட்டியில், பெண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முறையே 20வது மற்றும் 14வது இடத்தைப் பிடித்ததன் மூலம் இந்தியாவின் அங்கிதா மற்றும் பருல் சௌத்ரி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை.

பேட்மிண்டன்:

க்‌ஷ்யா சென் பாட்மிண்டனில் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளார். லக்ஷ்யா சென் 19-21, 21-15, 21-12 என்ற செட் கணக்கில் தைவானின் சூ டின்னை வீழ்த்தினார்.

ALSO READ: Paris Olympics: வாள்வீச்சில் 7 மாத கர்ப்பிணி… பாரிஸ் ஒலிம்பிக்கில் சுவாரஸ்யம்..!

குண்டு எறிதல்:

தஜிந்தர்பால் சிங் தூர் 18.05மீ எறிந்து ஆடவருக்கான குண்டு எறிதல் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறத் தவறினார். ஏ பிரிவில், தஜிந்தர்பால் 15வது இடத்தை பிடித்தார்.

ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?