Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்கின் பாதுகாப்பில் இரண்டு இந்திய நாய்கள்.. வரலாற்றில் இதுவே முதல் முறை!
Olympic Games: பெல்ஜிய ஷெப்பர்ட் மலினோயிஸ் கே-9 வெஸ்ட் மற்றும் டான்பி ஆகியவை பாரிஸ் ஒலிம்பிக்கின் பாதுகாப்புக்காக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக சிஆர்பிஎஃப் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. சிஆர்பிஎஃப்-ன் நாய் வளர்ப்பு மற்றும் பயிற்சி பள்ளியில் நடத்தப்பட்ட பல கடுமையான சோதனைகளை கடந்து வெஸ்ட் மற்றும் டான்பி இதற்காக தேர்வு செய்யப்பட்டன.
ஒலிம்பிக் 2024: பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டிகள் வருகின்ற ஜூலை 26ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த பிரமாண்ட போட்டியில் பங்கேற்பதற்காக உலக அளவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். ஒலிம்பிக் விளையாட்டுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்துவதற்காக உலகம் முழுவதிலுமிருந்து 10 உயரடுக்கு நாய்க் குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் 2 மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) நாய் K-9 குழுக்களும் பங்கேற்றுள்ளது. இந்தியாவை சேர்ந்த இந்த இரண்டு நாய்களும் சர்வதேச திட்டத்தில் பணியாற்றுவது இதுவே முதல் முறை. அதன் விவரங்களை இங்கே பார்க்கலாம்.
Also read: Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்த இரு நாடுகள் பங்கேற்க தடை! ஏன் தெரியுமா?
இதுவே முதல் முறை:
பாரிஸ் ஒலிம்பிக்கின் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பெரும் சவாலாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) உயரடுக்கு நாய்ப் படையான K-9 இன் இரண்டு நாய்கள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸை அடைந்துள்ளது. இந்த இரண்டு பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்த நாய்களும் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெவ்வேறு மைதானங்களின் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட இருக்கின்றன. கடந்த ஜூலை 10ம் தேதி பாரிஸுக்குப் புறப்பட்ட இந்த நாய்க் குழு, அதே நாளில் அங்கு சென்றடைந்தது.
நாய்களின் பெயர்கள் என்ன..?
இந்தியாவைச் சேர்ந்த இந்த நாய்களின் பெயர்கள் வாஸ்ட் மற்றும் டான்பி ஆகும். இந்த நாய்களின் வயது முறையே 5 மற்றும் 3 ஆண்டுகள். இந்த இரண்டு நாய்களும் பெல்ஜியன் ஷெப்பர்ட் மாலினோயிஸ் இனத்தைச் சேர்ந்தவை. இந்த சர்வதேச திட்டத்திற்கு செல்வதற்கு முன், இரண்டு நாய்களுக்கும் 10 வாரங்கள் கடுமையான பயிற்சி அளிக்கப்பட்டது. அதேபோல், இந்த நாய்களை கவனிக்கும் வீரர்களுக்கும் பயிற்சியும், பிரெஞ்சு மொழி அறிவும் கொடுக்கப்பட்டது.
கடுமையான சோதனைக்குப் பிறகு, இந்தியாவின் இந்த எலைட் நாய் பிரிவு பாரிஸ் ஒலிம்பிக்கின் பாதுகாப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. மொத்தம் 10 K-9 குழுக்கள் ஒலிம்பிக்கில் பாதுகாப்பைக் கையாளும். அவற்றில் இந்தியாவைச் சேர்ந்த பாதுகாப்பு படையில் உள்ள இரண்டு நாய்கள் பங்கேற்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. K-9 குழுக்கள் வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருட்களைக் கண்டறியும் அற்புதமான திறனைக் கொண்டுள்ளன. இதன் காரணமாக இவை பாரிஸ் ஒலிம்பிக்கின் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் என்று நம்பப்படுகிறது.
Also read: Paris Olympics 2024: ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தில் தங்கம் உள்ளதா? இதை அதிகமுறை வென்றவர் யார்..?
முன்னதாக, ஒலிம்பிக் போட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பிரான்ஸ் இந்திய அரசாங்கத்திடம் உதவி கோரியதாகவும், அதன் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெல்ஜிய ஷெப்பர்ட் மலினோயிஸ் கே-9 வெஸ்ட் மற்றும் டான்பி ஆகியவை பாரிஸ் ஒலிம்பிக்கின் பாதுகாப்புக்காக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக சிஆர்பிஎஃப் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. சிஆர்பிஎஃப்-ன் நாய் வளர்ப்பு மற்றும் பயிற்சி பள்ளியில் நடத்தப்பட்ட பல கடுமையான சோதனைகளை கடந்து வெஸ்ட் மற்றும் டான்பி இதற்காக தேர்வு செய்யப்பட்டன. முன்னதாக, இந்த K9 நாய்கள் இந்தியாவில் நடைபெற்ற G20 உச்சிமாநாட்டின் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்டு, உலகம் முழுவதிலுமிருந்து வந்த விருந்தினர்களிடம் பாராட்டுகளை பெற்றன.
பாரிஸ் ஒலிம்பிக்கில் எத்தனை இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு..?
2024 ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணியைப் பொறுத்தவரை, இம்முறை இந்தியாவில் இருந்து மொத்தம் 117 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த அணியில் 70 ஆண் மற்றும் 47 பெண் விளையாட்டு வீரர்கள் உள்ளனர். இதில், 117 விளையாட்டு வீரர்களுடன் 140 துணை ஊழியர்கள் பாரிஸ் செல்லவுள்ளனர். தடகளப் போட்டியில் அதிகபட்சமாக 29 வீரர்களும், துப்பாக்கி சுடுதலில் 21 வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.