Shreyasi Singh: பாரிஸ் ஒலிம்பிக்கில் பீகார் எம்எல்ஏ ஸ்ரேயாசி சிங்.. என்னது! இவரும் போட்டியாளரா..?
Paris Olympics 2024: கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் 7 பதக்கங்களை வென்ற இந்தியா, இந்த முறை அதிக பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பதற்காக 117 வீரர்கள், வீராங்கனைகளுடன் களமிறங்கியுள்ளது. இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் பீகாரை சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரும், ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதற்காக களமிறங்கியுள்ளார். அவர்தான் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையும், பீகார் எம்.எல்.ஏ-வுமான ஸ்ரேயாசி சிங்.
ஸ்ரேயாசி சிங்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நகரில் நேற்று முதல் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 16ம் தேதியான நேற்று தொடங்கிய விளையாட்டு போட்டிகள் வருகின்ற ஆகஸ்ட் 11ம் தேதி வரை நிறைவடைகிறது. . ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்வதற்காக இந்தியாவுடன் பல்வேறு நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் 7 பதக்கங்களை வென்ற இந்தியா, இந்த முறை அதிக பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பதற்காக 117 வீரர்கள், வீராங்கனைகளுடன் களமிறங்கியுள்ளது. இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் பீகாரை சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரும், ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதற்காக களமிறங்கியுள்ளார். அவர்தான் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையும், பீகார் எம்.எல்.ஏ-வுமான ஸ்ரேயாசி சிங்.
விளையாட்டு டூ அரசியல்:
பீகாரில் உள்ள பாஜக எம்.எல்.ஏ ஸ்ரேயாசி சிங், இந்த முறை பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று பாரிஸ் சென்றுள்ளார். துப்பாக்கி சுடும் பிரிவில் ஸ்ரேயாசி சிங், வருகின்ற 30 மற்றும் 31ம் தேதியில் பங்கேற்க உள்ளார். இதன்மூலம் அரசியலில் இருக்கும் போதே, ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீராங்கனை என்ற சாதனையை ஸ்ரேயாசி சிங் படைத்துள்ளார். மேலும், பீகாரில் இருந்து ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் தடகள வீராங்கனை இவர் ஆவார்.
காமன்வெல்த் போட்டியில் தங்கம்:
ஸ்ரேயாசி சிங்கின் சொந்த ஊர் பீகாரில் உள்ள கிடாவுர். டெல்லியில் உள்ள ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் கலைப் பிரிவில் பட்டம் பெற்றார். பின்னர். ஃபரிதாபாத்தில் உள்ள மனவரச்சனா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்தார். 2020ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்ரேயாசி சிங், சிட்டிங் எம்எல்ஏ விஜய் பிரகாஷை எதிர்த்து 41 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அரசியல் வருவதற்கு முன்பு, இவர் முழுவதும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்று விளையாடி வந்தார். ஸ்ரேயாசி சிங் முன்னாள் மத்திய அமைச்சர் திக்விஜய் சிங் மற்றும் முன்னாள் எம்பி பட்டுல் குமாரி ஆகியோரின் மகள் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருபுறம் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக சிறந்து விளங்கிய ஸ்ரேயாசி சிங், மறுபுறம் பீகார் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு தற்போது எம்எல்ஏவாகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற கிளாஸ் கோ காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஸ்ரேயாசி சிங், அதனை தொடர்ந்து, கடந்த 2018ம் ஆண்டு கோல்டு கோஸ்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தனது திறமையை வெளிப்படுத்தினார். 2014 ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடும் டபுள் ட்ராப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தினார். இதையடுத்து கடந்த 2018 ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றதற்காக, ஸ்ரேயாசி சிங்குக்கு அர்ஜுனா விருதும் வழங்கப்பட்டது.
Also read: Paris Olympic 2024: கோலாகலமாக தொடங்கிய பாரிஸ் ஒலிம்பிக்.. இன்றைய போட்டி விவரங்கள்..