5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Paris Olympics 2024: ஒலிம்பிக்கில் அதிக தங்கம் வென்ற நாடு இதுதான்..! இந்த லிஸ்ட்டில் இந்தியா எத்தனையாவது இடம்..?

Olympic History: 2024 ஒலிம்பிக் போட்டிகள் நாளை முதல் பாரிஸ் நகரத்தில் பிரமாண்டமாக தொடங்க இருக்கிறது. இந்தநிலையில் ஒலிம்பிக் வரலாற்றில் அதிக தங்கப் பதக்கங்களை வென்ற நாடு எது தெரியுமா? மேலும், அதிக பதக்கங்களை வென்ற நாடு என்ற சாதனையை எந்த நாடு கொண்டுள்ளது? என்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.

Paris Olympics 2024: ஒலிம்பிக்கில் அதிக தங்கம் வென்ற நாடு இதுதான்..! இந்த லிஸ்ட்டில் இந்தியா எத்தனையாவது இடம்..?
கோப்பு புகைப்படம்
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 26 Jul 2024 12:47 PM

பாரிஸ் ஒலிம்பிக்: 2024 ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26ம் தேதி (நாளை) முதல் பாரிஸ் நகரத்தில் பிரமாண்டமாக தொடங்க இருக்கிறது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றன. நாளையே ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இருந்தாலும், இன்று முதல் வில்வித்தை உள்ளிட்ட போட்டிகள் ஆரம்பமாகின்றன. 2024 ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணியைப் பொறுத்தவரை, ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக மொத்தம் 117 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த அணியில் 70 ஆண் வீரர்கள் 70 பேரும் மற்றும் 47 பெண் வீராங்கனைகள் 47 பேரும் பங்கேற்கின்றன. இந்தநிலையில் ஒலிம்பிக் வரலாற்றில் அதிக தங்கப் பதக்கங்களை வென்ற நாடு எது தெரியுமா? மேலும், அதிக பதக்கங்களை வென்ற நாடு என்ற சாதனையை எந்த நாடு கொண்டுள்ளது? என்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.

Also read: Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்கின் பாதுகாப்பில் இரண்டு இந்திய நாய்கள்.. வரலாற்றில் இதுவே முதல் முறை!

அமெரிக்கா முதலிடம்:

ஒலிம்பிக் வரலாற்றில் அதிக பதக்கங்களை வென்ற நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் பதக்கம் வெல்வதில் அமெரிக்காவை நெருங்க எந்த நாடுகள் பக்கத்தில் இல்லை. ஒலிம்பிக் போட்டிகளில் அதிகபட்சமாக 1065 தங்கப் பதக்கங்களை வென்று அமெரிக்கா சாதனை படைத்துள்ளது. 1 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களை வென்ற ஒரே நாடு அமெரிக்கா. இது தவிர, அமெரிக்கா 835 வெள்ளி மற்றும் 738 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா மொத்தம் 2638 பதக்கங்களை வென்று, முதலிடத்தில் உள்ளது.

இரண்டாவது இடத்தில் எந்த நாடு உள்ளது..?

ஒலிம்பிக் வரலாற்றில் அதிக பதக்கங்கள் வென்ற நாடுகளில் பட்டியலில் ரஷ்யா இரண்டாவது இடத்தில் உள்ளது. ரஷ்யா ஒலிம்பிக் வரலாற்றில் 395 தங்கப் பதக்கங்கள் உட்பட 1010 பதக்கங்களை வென்றுள்ளது. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து மூன்றாவது இடத்தில் உள்ளது. இதுவரை இங்கிலாந்து ஒலிம்பிக் போட்டிகலில் 285 தங்கப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஒலிம்பிக்கில் 285 தங்க பதக்கங்கள் உள்பட இங்கிலாந்து மொத்தமாக 918 பதக்கங்களை வென்றுள்ளது.

இந்த நாடுகளுக்கு அடுத்தபடியாக சீனா, 262 தங்கப் பதக்கங்களை வென்று நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து பிரான்ஸ் ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் பிரான்ஸ் வீரர்கள் 223 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

ஒலிம்பிக்கில் அதிக வெள்ளிப் பதக்கங்களை வென்ற நாடு எது?

இந்த பட்டியலிலும் அமெரிக்காவே முதலிடத்தில் உள்ளது. ஒலிம்பிக்கில் அமெரிக்கா இதுவரை 830 வெள்ளிப்பதக்கங்களை வென்றுள்ளது. இந்த பட்டியலில் ரஷ்யா 319 வெள்ளி பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து 318 வெள்ளி பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

Also read: Paris Olympics 2024: ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தில் தங்கம் உள்ளதா? இதை அதிகமுறை வென்றவர் யார்..?

இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது..?

ஒட்டுமொத்த ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா இதுவரை 10 தங்கம், 9 வெள்ளி மற்றும் 16 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. மொத்தம் இதுவரை 35 பதக்கங்களை வென்று அதிக பதக்கங்கள் வென்ற நாடுகளில் பட்டியலில் 56வது இடத்தில் உள்ளது.

Latest News