Paris Olympics: வாள்வீச்சில் 7 மாத கர்ப்பிணி… பாரிஸ் ஒலிம்பிக்கில் சுவாரஸ்யம்..!
உலகமே பரப்பரபாக எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கும், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு நாடுகளை வீரர்களும், வீராங்கனைகளும் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இதில் நேற்று நடந்த போட்டி ஒன்றில் சுவாரஸ்சியமான நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது. எகிப்தை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை நடா ஹபீஸ் 7 மாத கர்ப்பிணியாக பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளதை இன்ஸ்டகிராமில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
எகிப்தை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை நடா ஹஃபீஸ் 7 மாத கர்ப்பிணியாக பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை 28ம் தேதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கும் எகிப்திய நாட்டை சேர்ந்த ஃபென்சர் நடா ஹஃபீஸ் 16வது சுற்றில் விளையாடியதை பெருமையுடன் இன்ஸ்டகிராமில் அறிவித்துள்ளார். 26 வயதான ஹபீஸ், அமெரிக்காவின் எலிசபெத் டார்டகோவ்ஸ்கிக்கு எதிரான பெண்களுக்கான தனிநபர் வாள்வீச்சு போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் 15-13 என வெற்றி பெற்றார். பின்னர் 16வது சுற்றில் தென் கொரியாவின் ஜியோன் ஹயோங்கை எதிர்கொண்ட நிலையில் தோல்வியுடன் வெளியேறினார்.
பின்னர் இதுகுறித்து அவர் நடா ஹஃபீஸ் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் கூறியுள்ளதாவது, மேடையில் இரண்டு வீரர்களாக உங்களுக்குத் தோன்றுகிறது. ஆனால், உண்மையில் மூன்று பேர் இருக்கிறோம். இந்த புகைப்படத்தில் நான், என் போட்டியாளர், இன்னும் இந்த உலகிற்கு வராத என் சிறிய குழந்தை உள்ளது. என் குழந்தையும் நானும் சவால்களில் நியாயமான பங்கைக் கொண்டிருந்தோம். அது உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் இருக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் இது போன்று கர்ப்ப காலத்தில் ரோலர்கோஸ்டர் போன்று இருப்பது கடினமானது. என்னுடைய வாழ்க்கையையும் என்னுடைய விளையாட்டிலும் நான் சரியாக கவனித்து விளையாடுகின்றேன். இது மிகவும் கடினமான விளையாட்டு தான். ஆனால் வாழ்க்கை மற்றும் விளையாட்டுகளின் சமநிலையை பராமரிக்க போராடுவது கடினமானது. இருப்பினும் அது மதிப்புக்குரியது என்று தெரிவித்துள்ளார். 16-வது சுற்றில் எனது இடத்தைப் பெற்றதற்காக பெருமை என்னை நிரப்புகிறது என்பதைச் சொல்லவே இந்தப் பதிவை எழுதுகிறேன். என் கணவரின் நம்பிக்கையைப் பகிர்ந்து கொண்டதில் நான் அதிர்ஷ்டசாலி மற்றும் மேலும், எனது குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் இவ்வளவு தூரம் வர முடியாது என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Wayanad Landslide : 100-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை.. மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்!
பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மெதுவாக நடப்பது தொடங்கி, ஒவ்வொரு நொடிப்பொழுதையும் மிகவும் பாதுகாப்பாக கையாள்வர். ஆனால், நடா ஹஃபீஸ் தனது கர்ப்பத்தின் ஏழாவது மாதத்தில் பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டிருப்பது பலரை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர், தனது உடையில், மின்சாரம் கடத்தும் ஜாக்கெட், மெஷ் வயர் மாஸ்க் போன்ற பாதுகாப்பு கவசங்களுடன் வாள்வீச்சு போட்டியில் பங்கேற்றார். நடா ஹஃபீஸ் இதற்கு முன்னர் 2016 ரியோ ஒலிம்பிக் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கிலும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.