Paris Paralympics 2024: பாராலிம்பிக்கில் 29 பதக்கங்கள்.. டோக்கியோ பதக்க சாதனையை முறியடித்து அசத்தல்!
Medal Winners: டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்தியா அதிகபட்சமாக 19 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது. இதை பாரிஸ் பாராலிம்பிக்கில் இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் முறியடித்தனர். கடந்த 2 பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா மொத்தம் 48 பதக்கங்களை வென்றுள்ளது. முந்தைய பாராலிம்பிக்கின் 11 பதிப்புகளில் இந்தியா மொத்தமாகவே 12 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தது. இதன்மூலம், கடந்த இரண்டு பதிப்புகளில் இருந்து நிறைய பதக்கங்களும், மாற்றங்களை நாம் காணலாம்.
பாரிஸ் பாராலிம்பிக்: பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மொத்தம் 29 பதக்கங்களை வென்றுள்ளனர். இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் உள்ளிட்ட 29 பதக்கங்களை வென்று அதிக பதங்கள் வென்று சாதனை படைத்தது. மொத்தம் 29 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் 170 நாடுகளில் 18வது இடத்தில் உள்ளது. பாராலிம்பிக் வரலாற்றில் இதுவே இந்தியாவின் சிறந்த பாராலிம்பிக் ஆகும். முன்னதாக, டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்தியா அதிகபட்சமாக 19 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது. இதை பாரிஸ் பாராலிம்பிக்கில் இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் முறியடித்தனர். கடந்த 2 பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா மொத்தம் 48 பதக்கங்களை வென்றுள்ளது. முந்தைய பாராலிம்பிக்கின் 11 பதிப்புகளில் இந்தியா மொத்தமாகவே 12 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தது. இதன்மூலம், கடந்த இரண்டு பதிப்புகளில் இருந்து நிறைய பதக்கங்களும், மாற்றங்களை நாம் காணலாம்.
ALSO READ: IND vs BAN: 634 நாட்களுக்கு பிறகு டெஸ்ட் அணியில் பண்ட்.. வங்கதேச தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா, சீனா, கிரேட் பிரிட்டன், அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் ஆதிக்கம் செலுத்தியது. அதன்படி, பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்களை வென்ற நாடாக சீனா மாறியுள்ளது. பாரிஸ் பாராலிம்பிக்கில் சீனா 94 தங்கம், 75 வெள்ளி, 50 வெண்கலம் என மொத்தம் 219 பதக்கங்களை வென்றுள்ளது. அதேபோல், நமது அண்டை நாடான பாகிஸ்தான் ஒரு வெண்கல பதக்கத்தை வென்று பதக்க பட்டியலில் 79வது இடத்தை பிடித்தது.
பாரிஸ் பாராலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கமும், கடைசி பதக்கமும்..
பாரிஸ் பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம், அதையும் தங்க பதக்கமாக வென்று கொடுத்தவர் அவனி லெகாரா. பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிளில் தங்க பதக்கம் வென்றார். இது இவரது ஒட்டுமொத்த மூன்றாவது பாராலிம்பிக் பதக்கமாகும். இதன் மூலம் பாராலிம்பிக் போட்டியில் மூன்று பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். இதே போட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனையான மோனா அகர்வால் வெண்கல பதக்கம் வென்றார்.
ALSO READ: Paralympics: பாராலிம்பிக்கில் மிரட்டிய 7 மாத கர்ப்பிணி.. வெண்கல பதக்கம் வென்று வரலாறு படைப்பு!
ஆண்களுக்கான ஈட்டி எப் 41 போட்டியில் இந்தியாவின் 29வது மற்றும் கடைசி பதக்கத்தை நவ்தீப் சிங் தங்க பதக்கமாக வென்றார். இந்த போட்டியில் நவ்தீப் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தாலும், முதலிடத்தில் இருந்த ஈரானின் சதேக் பைட் சயா தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, நவ்தீப்பின் வெள்ளி தங்கமாக மாற்றப்பட்டது.
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எப் 64 போட்டியில் சுமித் ஆன்டில் தங்கம் வென்றார். தொடர்ந்து இரண்டு தங்கம் வென்ற முதல் இந்திய ஆண் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
பதக்கம் வென்ற இந்தியர்கள் பட்டியல்:
தங்கம்
- அவனி லெகாரா – பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் எஸ்.எச்.1 (துப்பாக்கி சுடுதல்)
- நிதேஷ் குமார் – ஆடவர் ஒற்றையர் எஸ்.எல்.3 (பேட்மிண்டன்)
- சுமித் ஆன்டில் – ஆடவர் ஈட்டி எறிதல் எஃப்64 (தடகளம்)
- ஹர்விந்தர் சிங், ஆடவர் தனிநபர் ரீகர்வ் (வில்வித்தை)
- பிரவீன் குமார் T64 உயரம் தாண்டுதல் (தடகளம்)
- நவ்தீப் சிங் F41 ஈட்டி எறிதல் பிரிவு
வெள்ளி
- மணீஷ் நர்வால் – ஆடவர் 10மீ ஏர் பிஸ்டல் எஸ்எச்1 (துப்பாக்கி சுடுதல்)
- நிஷாத் குமார் – ஆடவர் உயரம் தாண்டுதல் டி47 (தடகளம்)
- யோகேஷ் கதுனியா -ஆடவர் வட்டு எறிதல் எப்56 (தடகளம்)
- துளசிமதி முருகேசன் – பெண்கள் ஒற்றையர் எஸ்யூ5 (பேட்மிண்டன்)
- சுஹாஸ் சிங் – ஆண்கள் ஈட்டி எறிதல் F46 (தடகளம்)
- ஷரத் குமார் – ஆண்கள் உயரம் தாண்டுதல் T63 (தடகளம்)
- சச்சின் கிலாடி – ஆண்கள் குண்டு எறிதல் F46 (தடகளம்)
- பிரணவ் சுர்மா – ஆண்கள் கிளப் த்ரோ 51 (தடகளம்)
வெண்கலம்:
- மோனா அகர்வால் – பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் எஸ்எச்1 (துப்பாக்கி சுடுதல்)
- ப்ரீத்தி பால் – பெண்கள் 100மீ டி35 (தடகளம்)
- ப்ரீத்தி பால் – பெண்கள் 200மீ டி35 (தடகளம்)
- ரூபினா பிரான்சிஸ் – பெண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் எஸ்எச்
- மனிஷா ராம்ஹூட்ஸ் – 1 SU5 (பேட்மிண்டன்)
- ராகேஷ் குமார்/ஷீத்தல் தேவி – கலப்பு அணி கூட்டு ஓபன் (வில்வித்தை)
- தீப்தி ஜீவன்ஜி – பெண்கள் 400 மீட்டர் T20 (தடகளம்)
- சுந்தர் சிங் குர்ஜார்- ஆண்கள் ஈட்டி F46 (தடகளம்)
- ஹோகடோ செமா – ஆண்கள் ஷாட் 7 (தடகளம்)
- சிம்ரன் சிங் – பெண்கள் 200 மீ டி12 (தடகளம்)
- கபில் பர்மர் – ஜூடோ ஆண்கள் – 60 கிலோ (ஜூடோ)
- நித்யா ஸ்ரீ சிவன் – மகளிர் ஒற்றையர் எஸ்எச் 6 (பேட்மிண்டன்)
- மாரியப்பன் தங்கவேலு – ஆடவர் உயரம் தாண்டுதல் டி63 (தடகளம்)