5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

BCCI vs PCB: இந்திய அணி வந்தா மட்டும் போதும்.. ஸ்பெஷல் சலுகையை தரும் பாகிஸ்தான்..!

ICC Champions Trophy: கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் நாட்டிற்கு செல்ல மறுத்துவிட்டது. இதன் காரணமாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இலங்கையுடன் இணைந்து ஆசிய கோப்பையை ஹைப்ரிட் மாடலின் கீழ் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதேபோல், வருகின்ற சாம்பியன்ஸ் டிராபியிலும் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி மறுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BCCI vs PCB: இந்திய அணி வந்தா மட்டும் போதும்.. ஸ்பெஷல் சலுகையை தரும் பாகிஸ்தான்..!
பாபர் அசாம் – ரோஹித் சர்மா
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 20 Oct 2024 11:00 AM

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தானில் நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது. இந்த ஐசிசி போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்த முறை பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ளதால், அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்திய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்யுமா இல்லையா என்பதுதான் இப்போது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. மத்திய அரசு மற்றும் பிசிசிஐ பாகிஸ்தான் செல்ல இந்திய கிரிக்கெட் அணிக்கு அனுமதி கொடுத்தால் பயணிக்க அதிக வாய்ப்பு உள்ளது. அரசியல் உறவுகள் காரணமாக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்வதற்கான இறுதி முடிவை இந்திய அரசு மட்டுமே எடுக்கும்.

இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லவில்லை என்றால், 2023 ஆசியக் கோப்பை நடத்தியது போல, ஹைபிரிட் முறையில் போட்டி நடத்தப்படலாம். ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முழுவதுமாக பாகிஸ்தான் நாட்டில் சாம்பியன்ஸ் டிராபியை நடத்தவே விரும்புகிறது. இதன்மூலம், பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் தனது நிலைப்பாட்டில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பின்வாங்காது என்று தெரிகிறது.

ALSO READ:Watch Video: ரிஷப் பண்ட் இங்க பாருங்க.. பிட்சுக்கு நடுவே தாவி தாவி குதித்த சர்பராஸ்!

ஆசிய கோப்பையில் நடந்தது என்ன..?

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் நாட்டிற்கு செல்ல மறுத்துவிட்டது. இதன் காரணமாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இலங்கையுடன் இணைந்து ஆசிய கோப்பையை ஹைப்ரிட் மாடலின் கீழ் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதேபோல், வருகின்ற சாம்பியன்ஸ் டிராபியிலும் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி மறுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, இந்திய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்யாவிட்டால், சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய கிரிக்கெட் அணிகள் விளையாடும் அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது இலங்கைக்கு மாற்றப்படலாம்.

அழைப்பு விடுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்:

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு இந்திய அணி வரவேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களுக்காக பாகிஸ்தானில் தங்குவதற்கு இந்திய அணிக்கு விருப்பம் இல்லையெனில், ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் இந்திய அணி தலைநகர் டெல்லி அல்லது சண்டிகருக்கு திரும்ப ஏற்பாடு செய்ய இருப்பதாகவும் பிசிசிஐக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை:

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அட்டவணையை தயாரித்து ஐசிசி மற்றும் மற்ற உறுப்பு நாடுகளின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இந்த அட்டவணை ஒப்புதலுக்கு பிறகே வெளியிடப்பட இருந்த நிலையில், அதற்கு முன்பே ஹெட்யூல் வைரலானது. வெளியான அட்டவணையின்படி, சாம்பியன் டிராபி வருகின்ற 2025ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி கராச்சியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிகளுடன் தொடங்குகிறது. மேலும், இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம் பெற்றுள்ளதாகவும், இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி லாகூரில் அடுத்த ஆண்டு மார்ச் 1ம் தேதி நடைபெறவுள்ளது. அதேபோல், இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் லாகூரில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ALSO READ: Vitamin E Benefits: உடலுக்கு வைட்டமின் ஈ ஏன் முக்கியமானது? இவ்வளவு நன்மைகளை தருமா?

ஆனால், 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் மிக குறைவுதான். இந்திய அணி கடைசியாக கடந்த 2008ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அதை தொடர்ந்து, மகேந்திர சிங் தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் ஆசிய கோப்பையில் விளையாடியது. இதில், இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்திய அணி, இலங்கையிடம் 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்தியாவும், பாகிஸ்தானும் ஐசிசி நடத்தும் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறது. 2008ம் ஆண்டு நடந்த மும்பை தீவிரவாத தாக்குதலில் சுமார் 150க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு பிறகு, இருதரப்பு கிரிக்கெட்டுக்காக இந்திய அணி, பாகிஸ்தானுக்கு செல்லவில்லை.

ஆனால், பாகிஸ்தான் அணி கடந்த 2013ம் ஆண்டும், கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைக்காகவும் இந்தியா வந்திருந்தது.

Latest News