PV Sindhu Marriage: மணமகளாகப்போகும் பி.வி.சிந்து.. விரைவில் திருமணம்.. மாப்பிள்ளை யார்?

PV Sindhu: இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான பேட்மிண்டன் நட்சத்திரங்களில் பி.சி.சிந்து மிக முக்கியமானவர். கடந்த சில வருடங்களாக இவருக்கு பேட்மிண்டனில் மோசமான காலமாக அமைந்தது. அதாவது, நீண்ட காலமாக பி.வி.சிந்துவால் ஒலிம்பிக் உள்பட எந்த ஒரு பெரிய வெற்றியையும் அடைய முடியவில்லை.

PV Sindhu Marriage: மணமகளாகப்போகும் பி.வி.சிந்து.. விரைவில் திருமணம்.. மாப்பிள்ளை யார்?

பி.வி.சிந்து (Image: pvsindhu/insta and PTI)

Published: 

03 Dec 2024 11:20 AM

இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீராங்கனையும், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான பி.வி. சிந்து விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பி.வி. சிந்துவின் திருமணம் வருகின்ற டிசம்பர் 22ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெறவுள்ளது. இந்த தகவலை சிந்துவின் தந்தை நேற்று பி.வி. சிந்துவின் திருமணம் குறித்த நல்ல செய்தியை அவரது ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டார்.

ALSO READ: WTC Final: எளிதாக இறுதிப்போட்டிக்குள் நுழையப்போகும் இந்தியா.. பயத்தில் பலமிக்க ஆஸ்திரேலியா..!

மாப்பிள்ளை யார்..?

பி.வி.சிந்துவின் வருங்கால கணவர் வெங்கட் தத்தா சாய் ஒரு மூத்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் போஸிடெக்ஸ் டெக்னாலஜிஸின் நிர்வாக இயக்குநராக உள்ளார். கடந்த டிசம்பர் 1ம் தேதி சையத் மோடி சர்வதேச போட்டியில் பி.வி.சிந்து வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து, இந்த மகிழ்ச்சியான செய்தியும் வெளிவந்தது. திருமணம் குறித்த தகவலை வெளியிட்ட பி.வி.சிந்துவின் தந்தை கூறுகையில், “ இரு வீட்டாருக்கும் நீண்ட நாட்களாக தெரியும். திருமணத்தை ஒரு மாதத்திற்கு முன்பே முடிவு செய்ததாகவும், சிந்துவின் பிஸியான கால அட்டவணையை கருத்தில் கொண்டு டிசம்பர் 22 ஆம் தேதி தேதி நிர்ணயிக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

மேலும், டிசம்பர் 20-ம் தேதி முதல் திருமண சடங்குகள் தொடங்கும் என்றும், டிசம்பர் 22-ம் தேதி சிந்துவும், வெங்கடாவும் சகல சம்பிரதாயங்களுடன் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் அவர் கூறினார். இதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் டிசம்பர் 24ஆம் தேதி வரவேற்பு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பிறகு, பிவி சிந்து தனது பயிற்சிக்காக களத்திற்கு திரும்புவார்.

யார் இந்த வெங்கட் தத்தா சாய்..?

பி.வி.சிந்துவை திருமணம் செய்யப்போகும் மாப்பிள்ளையின் பெயர் வெங்கட் தத்தா சாய் போஸிடெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். அவரது தந்தை ஜி.டி. வெங்கடேஸ்வர ராவ் இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். மேலும், இவர் இந்திய வருவாய் சேவையில் (ஐஆர்எஸ்) அதிகாரியாக இருந்துள்ளார். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், கடந்த மாதம் பி.வி.சிந்து இந்த நிறுவனத்தின் புதிய லோகோவை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வெங்கட் தத்தா சாய் JSW மற்றும் Solar Apple Asset Management இல் பணிபுரிந்துள்ளார். கடந்த 2019 டிசம்பர் மாதம் முதல் வெங்கட், osidex டெக்னாலஜிஸில் தனது பொறுப்புகளை ஏற்று சிறப்பாக பணியாற்றி வருகிறார். இது மட்டுமின்றி, HDFC மற்றும் ICICI போன்ற பல பெரிய வங்கிகளுக்கான சேவை, கடன் செயலாக்கம் மற்றும் கிரெடிட் ஸ்கோரைப் பொருத்துதல் உள்ளிட்டவைகளை மேற்கொள்கிறார்.

ALSO READ: Rohit Sharma: ரித்திகா இன்ஸ்டா மூலம் ரசிகர்களுக்கு ட்ரீட்! ரோஹித் மகனின் பெயர் இதுதானா..?

பேக் டூ பார்ம்:

இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான பேட்மிண்டன் நட்சத்திரங்களில் பி.சி.சிந்து மிக முக்கியமானவர். கடந்த சில வருடங்களாக இவருக்கு பேட்மிண்டனில் மோசமான காலமாக அமைந்தது. அதாவது, நீண்ட காலமாக பி.வி.சிந்துவால் ஒலிம்பிக் உள்பட எந்த ஒரு பெரிய வெற்றியையும் அடைய முடியவில்லை. இரண்டு ஒலிம்பிக்கில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற சிந்து, நடந்து முடிந்த ஒலிம்பிக்கில் வெறுங்கையுடன் முதல்முறையாக வீடு திரும்பினார். இதைத் தவிர எந்த பெரிய போட்டியிலும் அவரால் பட்டம் வெல்ல முடியவில்லை.

இவை அனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் விதமாக பி.வி.சிந்து கடந்த டிசம்பர் 1ம் தேதி மதிப்புமிக்க சையத் மோடி போட்டியில் வெற்றி பெற்று அசத்தினார். இது இது மட்டுமின்றி, சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் தனது பேட்மிண்டன் அகாடமிக்கும் அடிக்கல் நாட்டினார்.

உடலுக்கு சுறுசுறுப்பு தரும் 7 சூப்பர் உணவுகள் - லிஸ்ட் இதோ!
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இவற்றை பின்பற்றுங்கள்!
புஷ்பா 2 படத்திற்காக வித்யாசமான புரமோஷன் செய்த ராஷ்மிகா
கீர்த்தியை பெண் கேட்ட பிரபல நடிகரின் குடும்பம்.. யார் தெரியுமா?