பி.வி.சிந்துக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. வைரலாகும் போட்டோ!

PV Sindu Engaged : இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கும் - வெங்கட தத்தா சாயிக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இவர்களது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பி.வி.சிந்துவுக்கும் - வெங்கட தத்தா சாயிக்கும் வரும் 22ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

பி.வி.சிந்துக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. வைரலாகும் போட்டோ!

பி.வி.சிந்து நிச்சயதார்த்தம்

Updated On: 

14 Dec 2024 22:24 PM

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.  பி.வி.சிந்துவுக்கும் – வெங்கட தத்தா சாயிக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இவர்களது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர்கள் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதுகுறித்து புகைப்படத்துடன் பி.வி.சிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், “அன்பு உங்களை அழைக்கும்போது அவற்றை பின்பற்றுங்கள். ஏனென்றால் அன்பு தன்னை தவிர வேறு எதையும் கொடுக்காது” என்ற கேப்ஷனுடன் பதிவிட்டிருக்கிறார். இவர்களுக்கு திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

டிசம்பர் 22ஆம் தேதி திருமணம்

பி.வி.சிந்துவிற்கு வெங்கட தத்தா சாயுடன் வரும் டிசம்பர் 22ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. டிசம்பர் 22 அன்று உதய்பூரில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற உள்ளது. டிசம்பர் 24-ம் தேதி ஹைதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும். சிந்துவின் தந்தை கூறுகையில், “இரண்டு குடும்பங்களும் ஒருவரையொருவர் நன்றாக அறிந்திருக்கிறோம். ஒரு மாதத்திற்கு முன்பு தான் திருமணம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

ஜனவரியில் பி.வி.சிந்து பயிற்சி தொடங்குகிறார். இதனால், டிசம்பர் மாதத்திலேயே திருமணம் நடக்க முடிவு எடுக்கப்பட்டது. அதனால்தான் டிசம்பர் 22-ம் தேதி திருமணத்தை நடத்த இரு குடும்பத்தினரும் முடிவு செய்தனர். டிசம்பர் 24-ம் தேதி ஹைதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும். அடுத்த சீசன் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதால் விரைவில் பயிற்சியைத் தொடங்குவார்” என்றார்.

Also Read : ஆஸி., உடனான 3வது டெஸ்ட்.. டாஸ் வென்ற இந்தியா.. வில்லனாக வரும் கனமழை!

சிந்துவின் கணவர் யார்?

போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான வெங்கடா தத்தா சாய் உள்ளார். அவரது தந்தை ஜி.டி வெங்கடேஸ்வர ராவ் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார். மேலும், இந்திய வருவாய் சேவையின் (IRS) அதிகாரியாகவும் இருந்துள்ளார். 2018ஆம் ஆண்டும் பிபிஏ பட்டம் பெற்றார்.

இதைத் தொடர்ந்து, பெங்களூரில் உள்ள சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தரவு அறிவியல் மற்றும் இயந்திர கற்றலில் முதுகலைப் பட்டம் பெற்றார். மேலும், வெங்கட் தத்தா சாய் JSW மற்றும் Solar Apple Asset Management இல் பணிபுரிந்துள்ளார்.

கடந்த 2019 டிசம்பர் மாதம் முதல் வெங்கட், osidex டெக்னாலஜிஸில் தனது பொறுப்புகளை ஏற்று சிறப்பாக பணியாற்றி வருகிறார். இது மட்டுமின்றி, HDFC மற்றும் ICICI போன்ற பல பெரிய வங்கிகளுக்கான சேவை, கடன் செயலாக்கம் மற்றும் கிரெடிட் ஸ்கோரைப் பொருத்துதல் உள்ளிட்டவைகளை மேற்கொள்கிறார்.

Also Read : ஹைப்ரிட் மாடலுக்கு ஓகே சொன்ன பிசிபி.. முடிவுக்கு வந்த இழுபறி.. பஞ்சாயத்தை முடித்த ஐசிசி!

இந்தியாவில் முக்கியமான வீராங்கனைகளில் ஒருவராக பி.வி.சிந்து உள்ளார். இவர் 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் மற்றும் 2020ஆம் ஆண்டு டோக்கியா ஒலிம்பிக் பட்டங்களை வென்றுள்ளார். நடந்து முடிந்த ஒலிம்பிக்கில் வெறுங்கையுடன் முதல்முறையாக வீடு திரும்பினார்.


இதைத் தவிர, 2019ஆம் ஆண்டு உலக சாம்பியஷிப் போட்டியில் பி.வி.சிந்து தங்க பதக்கம் வென்றார். 2022ஆம் ஆண்டு காமன் வெல்த் போட்டியில் தங்க பதக்கம் வென்றார். 2018ஆம் ஆண்டில் ஆசிய போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றிருக்கிறார். அண்மையில் இவர் ஹைதராபாத்தில் தனது பேட்மிண்டன் அகாடமிக்கும் அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் பருப்பு சாப்பிட வேண்டும் - உங்களுக்கு தெரியுமா?
பெண்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் சில முக்கிய பழக்கங்கள்!
கிறிஸ்துமஸ் கொண்டாட சிறந்த இடங்கள்!
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தர வேண்டிய அறிவுரைகள்!