Rafael Nadal Retirement: 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம்.. 209 வாரங்கள் நம்பர் 1.. டென்னிஸில் ஓய்வு பெற்றார் நடால்!
Davis Cup 2024: கடந்த 2004ம் ஆண்டு ரஃபேல் நடால் முதல்முறையாக டேவிஸ் கோப்பை ஒற்றையர் பிரிவில் களமிறங்கி தோற்றார். முன்னதாக, நடால் ஏற்கனவே தனது ஓய்வை அறிவித்து டேவிஸ் கோப்பை தனது கடைசி போட்டியாக இருக்கும் என்று அறிவித்தார். இந்தநிலையில். நடால் நேற்று டேவிஸ் கோப்பை போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான ஒற்றையர் போட்டியில் விளையாடினார்.
ஸ்பெயின் டென்னிஸ் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் டென்னிஸ் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றார். நடால் கடந்த 20 ஆண்டுகளாக தனது டென்னிஸ் வாழ்க்கையில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார். அதில், 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் பிரெஞ்ச் ஓபனில் இருந்து வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் யுஎஸ் ஓபன் என தலா 2 முறையும், விம்பிள்டனை 4 முறையும் வென்றுள்ளார். இது மட்டுமின்றி, ரஃபேல் நடால் தனது கேரியரில் 4 டேவிஸ் கோப்பைகளையும் வென்றுள்ளார். டேவிஸ் கோப்பை 2024ல் தனது கடைசி போட்டியில் விளையாடிய ரஃபேல் நடால் கண்கள் ஈரமாகின. அவன் குடும்பத்தாரின் கண்கள் ஈரமாகின.
ALSO READ: Argentina Team: விரைவில் கேரளாவில் விளையாட வரும் அர்ஜென்டினா.. களமிறங்குவாரா மெஸ்ஸி..?
தோல்வியுடன் அறிமுகம், தோல்வியுடன் ஓய்வு:
கடந்த 2004ம் ஆண்டு ரஃபேல் நடால் முதல்முறையாக டேவிஸ் கோப்பை ஒற்றையர் பிரிவில் களமிறங்கி தோற்றார். முன்னதாக, நடால் ஏற்கனவே தனது ஓய்வை அறிவித்து டேவிஸ் கோப்பை தனது கடைசி போட்டியாக இருக்கும் என்று அறிவித்தார். இந்தநிலையில். நடால் நேற்று டேவிஸ் கோப்பை போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான ஒற்றையர் போட்டியில் விளையாடினார். ஆனால், இந்த போட்டியில் நெதர்லாந்து வீரர் போடிக் வான் டி ஜெண்ட்சுல்ப்பிடம் தோல்வியை சந்தித்தார். இதையடுத்து, டேவிஸ் கோப்பை காலிறுதியில் ஸ்பெயின் 2-1 என்ற கணக்கில் நெதர்லாந்திடம் தோல்வியடைந்து வெளியேரியது. இதன் காரணமாக, 38 வயதான நடாலும் டென்னிஸ் வாழ்க்கையில் இருந்து விடைபெற்றார். கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி நடாலின் நண்பரான ரோஜர் பெடரர் டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
There are no words to thank you enough for what you’ve done to the sport.
Gracias, Rafa ❤️@RafaelNadal | #RafaSiempre
— ATP Tour (@atptour) November 19, 2024
நடாலின் சர்வதேச டென்னிஸ் வாழ்க்கை சாதனைகள்:
ரஃபேல் நடால் தனது டென்னிஸ் வாழ்க்கையில் இதுவரை 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இதன்மூலம்ன், செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சிற்கு பிறகு அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டஙக்ளை வென்ற ஒரே டென்னிஸ் வீரர் இவர்தான்.
அதிக ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஆண் வீரர்கள்:
- நோவக் ஜோகோவிச்- 24
- ரஃபேல் நடால்- 22
- ரோஜர் பெடரர் – 20
- பீட் சாம்ப்ராஸ் – 14
- ராய் எமர்சன் – 12
ஒற்றையர் பிரிவில் 82.6 சதவீத போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை ரஃபேல் நடால் சாதனை படைத்துள்ளார். நடால் இதுவரை ஒற்றையர் பிரிவில் 1080 போட்டிகளில் வெற்றிபெற்று, வெறும் 228 போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்தார். இதில், 92 ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் நீண்ட காலம் முதலிடத்தில் இருந்தார். அதாவது, தொடர்ந்து 209 வாரங்கள் உலகின் நம்பர் 1 இடத்தில் இருந்தார். 63 ஒற்றையர் பட்டங்களை களிமண் மைதானத்தில் மட்டுமே வென்றுள்ளார். ரஃபேல் நடால் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கத்தையும், 2016 ரியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார். மேலும், 5 முறை ATP ஆண்டின் சிறந்த வீரராகவும், உலக நம்பர் ஒன்னில் 5 முறையும் இருந்துள்ளார்.
And that’s how we’ll always remember you, Rafa#DavisCup #Rafa #GraciasRafa pic.twitter.com/XWEGT35anq
— Davis Cup (@DavisCup) November 19, 2024
ALSO READ: IND vs AUS: இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் எப்போது? இலவசமாக எங்கு பார்க்கலாம்?
நெதர்லாந்து வீரர் போடிக்கிடம் தோற்ற பிறகு பேசிய நடால் தனது இது ஒரு உணர்ச்சிகரமான நாள் என்று பேசினார். அப்போது அவர், “ஒரு தொழில்முறை டென்னிஸ் வீரராக இது எனது கடைசி போட்டியாக இருக்கும் என்று எனக்கு தெரியும். அதற்கு முன்னாடி தோன்றிய தருணங்கள் உணர்ச்சிகரமானவை. பொதுவாக, அவற்றை கையாள்வது கொஞ்சம் கடினமாக இருந்தது. போட்டியில் என்னால் முடிந்ததை சிறப்பாக செய்தேன். முடிவு எதுவாக இருந்தாலு, நான் சிறந்த அணுகுமுறையை வைத்திருக்க முயற்சித்தேன். ஆனால், இன்று என்னை விட எனக்கு எதிரே களமிறங்கிய வீரர் சிறந்தவராக இருந்தார்.” என்று தெரிவித்தார்.