RCB Vs CSK: தோனியை அவமதித்த ஆர்சிபி வீரர்கள்.. நடந்தது என்ன?

Dhoni: ஆர்சிபி மற்றும் சென்னை அணிகள் மோதிய போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. வெற்றிக்கு பிறகு ஆர்சிபி வீரர்களுக்கு கைகுலுக்காமல் ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு சென்றுவிட்டார் என்று விமர்சங்கள் எழுந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று வைராலாகி வருகிறது.

RCB Vs CSK:  தோனியை அவமதித்த ஆர்சிபி வீரர்கள்.. நடந்தது என்ன?

ஆர்சிபி, சிஎஸ்கே

Updated On: 

20 May 2024 08:23 AM

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி தோற்கடித்து ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றது. மழையினால் போட்டி பாதிக்கும் என்று கூறப்பட்ட நிலையில், சிஎஸ்கே அணியை வீழ்த்தி தங்களது சொந்த மைதானத்தில் மீண்டும் வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் 4வது அணி மற்றும் கடைசி அணி என்ற பெருமையையும் பெற்றது. 10 அணிகள் பங்கேற்ற 17-வது ஐபிஎல் சீசனின் 68-வது லீக் போட்டியில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் பலப்பரீட்சை செய்தன. இந்த போட்டியில் ஆர்சிபி அணி 27 ரன்களில் சென்னை அணியை வீழ்த்தி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றது. சென்னை சேப்ப்பாக் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் சென்னை மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. அந்த போட்டியில் ஆர்சிபி சென்னை அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆர்சிபி அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது

Also Read: Rohit: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்ட வீடியோ… தனது தனியுரிமையை பாதிக்கிறது என ரோகித் சர்மா வேதனை

இந்நிலையில் போட்டி முடிந்த பின் தோனி, பெங்களூர் அணி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்துவிட்டு ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு சென்றார். மைதானத்திலிருந்த மற்ற சிஎஸ்கே வீரர்கள் ஆர்சிபி வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்துகளை தெரிவித்தனர். தோனி தோல்வியின் விரக்தியில் ஆர்சிபி வீரர்களை தவிர்த்தார் என்று விமர்சனங்கள் எழுந்தன. தோனியின் மீது பல்வேறு அடுக்கடுக்கான விமர்சனங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரலானது. கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, முன்னாள் வீரர்களும் தோனியின் மீது குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

ஆனால், உண்மை என்னவென்றால் ஆர்சிபி வீரர்கள் வெற்றிபெற்ற பின்னர், தங்களது வெற்றியின் களிப்பில் இருந்து மீளாமல் ஆரவாரத்தில் ஈடுபட்டுள்ளனர். போட்டி முடிந்ததும் சிஎஸ்கே வீரர்கள் நீண்ட நேரமாக ஆர்சிபியின் வீரர்களுக்காக காத்திருந்தனர். ஆனால், ஆர்சிபி வீரர்கள் வராத காரணத்தால், வெகுநேரம் காத்திருந்த தோனி மைதானத்தில் இருந்து ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு சென்றார். இதுதொடர்பான வீடியோவில் தோனி அனைத்து வீரர்களுக்கும் முன்னர் காத்திருப்பது தெரியவந்தது. மேலும் தோனியின் உடல்நிலை குறித்து ஆராய வேண்டிய சூழலில், இது போன்ற விமர்சங்களை தவிர்க்கலாம் என்று தோனியின் ரசிகர்கள் கூறி வருகின்றனர். காலில் காயம் என்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். தோனி மைதானத்தில் காத்திருப்பது தொடர்பான வீடியோக்களையும் பதிவிட்டு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

 

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!