5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

RCB vs CSK: இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார்? ஆர்சிபி சிஎஸ்கே பலம், பலவீனம் ஒரு பார்வை

IPl 2024:  ஐபிஎல் தொடரின் பரபரப்பான போட்டியாக இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் போட்டி உள்ளது. இந்த போட்டியில் மழையின் குறுக்கீடு இல்லாமல் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்று ஆர்சிபி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

RCB vs CSK: இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார்? ஆர்சிபி சிஎஸ்கே பலம், பலவீனம் ஒரு பார்வை
ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு
intern
Tamil TV9 | Updated On: 27 Sep 2024 10:25 AM

மார்ச் 22 ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் தொடரின் தொடக்க லீக் ஆட்டத்தில் சென்னையிலுள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. அடுத்த போட்டியில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து முதல் வெற்றியை பெற்றது. அந்த போட்டிக்கு பிறகு தொடர் தோல்விகளையே ஆர்சிபி அணி பெற்று வந்தது. எப்போதும் ஆர்சிபி அணிக்கு தோல்விதான் நிரந்தரம் என்று மீம்ஸ் கிரியேட்டர்கள் சமூக வலைதளங்களில் ஆர்சிபி அணியை கிண்டல் செய்து பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டனர். மிகப்பெரிய வெளிநாட்டு வீரர்களை உள்ளடக்கிய ஆர்சிபி அணி சில நேரங்களில் பேட்டிங், பவுலிங், பீல்டிங்க் என அனைத்திலும் சொதப்பி வருகிறது. இதையெல்லாம் அலசி ஆராய்ந்து, எங்கெல்லாம் ஆர்சிபி தோற்றது, அதிலிருந்து மீண்டு வருவதற்கான அனைதும் ஆலோசிக்கப்பட்டு இன்றைய போட்டியில் பெங்களூரு அணி களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: IPL 2024: ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் அணி எது? பரபரப்பான லீக் போட்டியில் RCB -CSK இன்று பலப்பரீட்சை..!

தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ஆர்சிபி அணி, ஒரு கட்டத்தில் தங்களது ஆட்டத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து, அடுத்தடுத்து நடைபெற்ற போட்டிகளில் வெற்றியைபெற்றது. கடைசியாக ஆர்சிபி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, இன்னும் ஒரு வெற்றியை பதிவு செய்தால் ப்ளே ஆப் வாய்ப்பையும் உறுதி செய்துவிடும். கடந்த 16 வருடமாக ஐபிஎல் கோப்பையை வென்றே ஆகவேண்டு என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ஆர்சிபி அணிக்கு இந்த போட்டி முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக உள்ளது.

ஆர்சிபி அணியின் கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான பாப் டூப்ளசி மற்றும் விராட் கோலி இருவரும் தங்களது அணிக்காக பொறுப்புடன் விளையாடி வந்தனர். ஒவ்வொரு முறையும் ஆர்சிபி அணி தோல்வியை தழுவும் போது, மிகச்சிறிய ரன் வித்தியாசத்தில் தான் இருந்துள்ளது. இமாலய இலக்கை கூட ஆர்சிபி வீரர்கள் நெருங்கியிருந்தனர். அவர்களின் போதாத நேரம் அந்த போட்டிகளில் வெற்றிபெற முடியவில்லை என்று ரசிகர்கள் கூறிவந்தனர். பெங்களூரு அணியின் ஐபிஎல் கோப்பை கனவு இம்முறையும் இல்லை என்று கூறி வந்த நிலையில், பீனிக்ஸ் பறவை போல அடுத்து நடைபெற்ற போட்டிகளில் தொடர் வெற்றிகளை பதிவு செய்தது. சிஎஸ்கே அணியை வீழ்த்தி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் இம்முறை எப்படியும் ஆர்சிபி ஐபிஎல் கோப்பையை வென்று விடும் என்று ஆர்சிபி ரசிகர்கள் கனவு கோட்டையை கட்டி வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஆர்சிபி ரசிகர்கள் இன்றை போட்டியில் நிச்சயம் வென்றுவிடும் என்று கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Also Read: Virat kohli: ஓய்வுக்கு பிறகு என்னை பார்க்க முடியாது – விராட் கோலி

18 ஆம் தேதியான இன்று ஆர்சிபி அணி குறைந்தபட்சம் சென்னை அணியை 18 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற வேண்டும். இல்லையெனில், சேசிங்கின் போது 18.1 ஓவர்களில் அதாவது 11 பந்துகள் மீதமிருக்கும் நிலையில், வெற்றி பெற்றால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்று கூறப்படுகிறது. இதுவரையிலும் 18 ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டிகளில் விராட் தொடர்ந்து அதிக ரன்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் எங்கும் 18, எதிலும் 18 என்று ஆர்சிபி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Latest News