5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

RCB vs RR: எலிமினேட்டரில் வெல்லப்போவது யார்… RR Vs RCB இன்று பலப்பரீட்சை..!

IPL 2024: இன்றைய எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி, ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்சிபி அணியின் 16 வருட ஐபிஎல் கனவு நிறைவேறுமா? அல்லது சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி இப்போட்டியில் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

RCB vs RR: எலிமினேட்டரில் வெல்லப்போவது யார்… RR Vs RCB இன்று பலப்பரீட்சை..!
ஆர்.சி.பி, ஆர்.ஆர்
intern
Tamil TV9 | Updated On: 22 May 2024 16:28 PM

இன்றைய எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி, ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்சிபி அணியின் 16 வருட ஐபிஎல் கனவு நிறைவேறுமா? அல்லது சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி இப்போட்டியில் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

நடப்பு ஐபிஎல் 17 வது சீசன் கடந்த கடந்த மார்ச் 22ம் தேதி சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது. 2024 ஐபிஎல் தொடரில் ப்ளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதரபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு உலக கோப்பை, ஆசிய கோப்பை, டெஸ்ட் கிரிக்கெட், ஒரு நாள் போட்டி, டி20 போட்டி, சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டிகளை காட்டிலும், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு எப்போதும் வரவேற்பு அதிகளவில் உள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் 10 அணிகள் பங்கேற்ற நிலையில் லீக் தொடரின் முடிவில் 4 அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்றுள்ளனர். மேலும், தங்களது அணி என்பதை தாண்டி, ரசிகர்களும், திறமையான வீரர்களுக்கும், அணிக்கும் தங்களது ஆதரவை வழங்கி வருகின்றனர். இதில், மும்பை, சென்னை அணியின் ரசிகர்களுக்கு உலகபோர் அளவிற்கு சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வந்ததை நாம் பார்த்திருப்போம். அதேப்போல், ஆர்சிபி ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் ஐபிஎல் சீசன் தொடங்கும் போது, ஏ சாலா கம் நம்தே என்ற வசனத்தை இணையத்தில் ட்ரெண்ட் செய்துக்கொண்டிருப்பர். அந்த வகையில், இந்த சீசன் தொடக்கம் முதலே ஆர்சிபி தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது. பின்னர் தொடர் வெற்றிகளால், இன்று ப்ளே ஆப் சுற்றுக்கு சென்றுள்ளது.

Also Read: IPL 2024: SRH-ஐ வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறியது KKR..!

மறுபுறம் தொடக்கம் முதலே நன்றாக விளையாடி வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சற்று சரிவை நோக்கி பயணித்தது. கடைசி போட்டிகளில் தோல்வி, மழைக்குறுக்கீடு போன்ற எண்ணற்ற பிரச்சினைகளால் எலிமினேட்டர் சுற்றில் களம் காண்கிறது. ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இந்த தொடரில் செய்த சாதனைகள் அவரை உலக கோப்பை தொடருக்கு அழைத்து சென்றுள்ளது. இன்றைய போட்டியில் நிச்சயம் இரு அணிகளும் கட்டாயம் வென்றே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் களம் காண்கிறது. மேலும், இன்றைய போட்டியில் தோல்வி பெறும் அணிக்கு அடுத்த வாய்ப்பு கிடையாது என்பதால், இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. மேலும், நேற்று நடைபெற்ற கொல்கத்தா மற்றும் சன்ரைசஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில், சன்ரைசர்ஸ் தோல்வியடைந்த நிலையில், இன்று வெற்றி பெறும் அணியுடன் குவாலிஃபையர் 2 போட்டியில் களம் காண்கிறது.

Also Read: Tamilnadu Weather Alert: அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிச்சை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

மிகவும் பரப்பரப்பாக நடைபெற்றுவந்த ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ப்ளே ஆஃப் சுற்றில் வெற்றி பெற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு நேரிடையாக சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News