5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

RCB vs RR: ஆர்சிபியின் ஐபிஎல் கோப்பை கனவு மீண்டும் தகர்ந்தது…. எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் வெற்றி..!

IPL 2024: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி குவாலிபையர் 2 போட்டிக்கு தகுதிபெற்றது. நேற்று நடைபெற்ற போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது ராஜஸ்தான். எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் வென்றதன் மூலம் சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

RCB vs RR: ஆர்சிபியின் ஐபிஎல் கோப்பை கனவு மீண்டும் தகர்ந்தது…. எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் வெற்றி..!
ராஜஸ்தான்
intern
Tamil TV9 | Updated On: 23 May 2024 09:14 AM

கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த நடப்பு 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதரபாத், ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றன. இதில் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தி குவாலிபையர் 2 போட்டிக்கு தகுதிபெற்றது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தினால் இறுதி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதும் வாய்ப்பை பெறுகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத் அமைந்துள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.

Also Read: Tamilnadu Weather Alert: வலுவடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!

முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான விராட் கோலியும், பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளெஸிஸும் களமிறங்கினர். அதிரடியாக பேட்டிங் செய்வார் என்று எதிர்பார்த்த கேப்டன் கோலி சாஹல் பந்தில், 33 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் டூ பிளெஸிஸ் போல்ட் பந்து வீச்சில் 17 ரன்கள் எடுத்தபோது ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேமரூன் கிரீன் 3ஆவது வீரராக களமிறங்கி 27 ரன்களில் அஸ்வினின் சுழலில் சிக்கினார். ரஜட் படிடர் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் 11 ரன்களிலும், கரண் சர்மா 5 ரன்களிலும், மஹிபால் 32 ரன்களிலும் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி 172 ரன்களைச் சேர்த்தது. ஆவேஷ்கான் 3 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி ராஜஸ்தான் வெற்றிக்கு துணைபுரிந்தனர். 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகச்சிறிய இலக்கை எதிர்நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் நிதானமாகவும் ஆடத்தொடங்கினர்.

ஆரம்பத்தில் நிதானமாக தொடங்கினாலும், பின்னர் ஆட்டத்தில் அனல் பறந்தது என்றே சொல்லலாம். ஜெய்ஸ்வால் 45 ரன்களும், டாம் ஹோல்டர்-கேட்மோர் 20 ரன்களும் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், சர்மாவின் பந்தில் 17 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ரியான் பராக் 36 ரன்கள், ஜூரெல் 8 ரன்கள், 26 ரன்கள் என்று வெற்றிக்கான ரன்களை குவித்தனர். அடுத்து களமிறங்கிய ரோவ்மன் பவுல் 16 ரன்களும் எடுத்த நிலையில் 19 ஓவரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி 174 ரன்கள் குவித்து ஆர்சிபி அணியை வீழ்த்தியது.

Also Read: Police viral video: டிக்கெட் எடுக்க மறுத்த காவலர் மீது நடவடிக்கை.. போக்குவரத்து துறை உத்தரவு..!

வரும் 24-ம் தேதி சென்னை சேப்பாக்கில் அமைந்துள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் குவாலிபையர் சுற்று 2-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ராஜஸ்தான் அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வென்றால் இறுதி போட்டியில் கொல்கத்தா அணியுடன் மோதும் வாய்ப்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்சிபி அணி எலிமினேட்டர் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் அதன் ஐபிஎல் கனவு மீண்டும் ஒருமுறை தகர்ந்தது. 16 வருடங்களாக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவுடன் கத்திருந்த ஆர்சிபி அணிக்கு இம்முறையும் கனவாகவே முடிந்தது.

Latest News