5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

RCB Coach: ஆர்சிபியில் மீண்டும் இடம்பெற்றார் தினேஷ் கார்த்திக்..!

Dinesh Karthik: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான தினேஷ் கார்த்திக் ஆர்சிபி அணியின் கிரிக்கெட் ஆலோசகராகவும் மற்றும் பேட்டிங் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட வேண்டும் என்பது தன்னுடைய கனவு என்று கூறிய நிலையில், வரும் காலத்தில் சென்னை அணியிலும் தினேஷ் கார்த்திக்கு பொறுப்புகள் வழங்கப்படும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

RCB Coach:  ஆர்சிபியில் மீண்டும் இடம்பெற்றார் தினேஷ் கார்த்திக்..!
தினேஷ் கார்த்தி
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 02 Jul 2024 13:21 PM

கடந்த ஐபிஎல் தொடருடன் ஆர்சிபி அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த தினேஷ் கார்த்திக் வரும் 2025 ஐபிஎல் தொடரில் அவர் ஆர்சிபி அணிக்காக பணியாற்ற இருக்கிறார். ஆர்சிபி அணியிலிருந்து ஓய்வு பெற்று ஒரு மாதம் கூட முழுமையாக நிறைவுறாத நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அவரை பேட்டிங் பயிற்சியாளராகவும், அணியின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டிருப்பது ஆர்சிபி நிர்வாகம் தினேஷ் கார்த்திக் மீதுள்ள நம்பிக்கையை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் கூறுகையில்,”கிரிக்கெட் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை துவங்குவதில் மகிழ்ச்சி. பெங்களூரு அணிக்கு பேட்டிங் பயிற்சி அளிக்க ஆர்வமாக உள்ளேன். பதட்டமான கட்டத்தில் சிறப்பாக செயல்படும் வித்தையை கற்றுக் கொடுக்க இருக்கிறேன். எனது அனுபவம், அணியின் வளர்ச்சிக்கு கைகொடுக்கும், என்று தெரிவித்துள்ளார்.

Also Read: Hardik Pandiya: இது கனவல்ல.. நிஜம் தான்.. நாம் உலக கோப்பையை வென்றுவிட்டோம் -ஹர்திக் பாண்டியா உருக்கம்

ஐபிஎல் போட்டிகள் ஆரம்பித்த காலத்தில் இருந்தே தினேஷ் கார்திக் விளையாடி வருகிறார். 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற மெகா ஆக்‌ஷனில் தினேஷ் கார்த்திக் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். 2008 ஆம் ஆண்டு முதன்முதலாக டெல்லி டேர்வெல்ஸ் அணிக்காக விளையாடிய தினேஷ்கார்த்தி, 2011 ஆம் ஆண்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்காக விளையாடியுள்ளார். தொடர்ந்தும் 2013, 2014 ஆம் ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காகவும் தனது பங்களிப்பை தினேஷ் கார்த்தி வழங்கியுள்ளார்.

2018 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் கொல்கத்தா அணியின் கேப்டனாகவும் அந்த அணியை வழிநடத்தியுள்ளார். இப்படி மற்ற அணிகளில் விளையாடி இருந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட வேண்டும் என்பது தன்னுடைய கனவு என்று பல்வேறு நிகழ்வுகளில் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். தற்போது ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள தினேஷ் கார்த்திக்கிற்கு அது கனவாகவே மாறிவிட்டது.

Also Read: IBPS Clerk Vacancy: பொதுத்துறை வங்கிகளில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்..

கடந்த 17 ஆண்டுகளாக போராடும் பெங்களூரு அணியால், கோப்பை வெல்ல முடியவில்லை. புதிய அவதாரம் எடுக்கும் கார்த்திக்கின் வரவு, கோலி கூட்டணிக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரட்டும். “எங்கள் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திகை மீண்டும் அணிக்கு அழைக்கிறோம். ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் தினேஷ் கார்த்திக் இருப்பார். கிரிக்கெட்டில் இருந்து இவரை பிரிக்கலாம். ஆனால், இவரிடம் இருந்து கிரிக்கெட்டை பிரிக்க முடியாது. அவர் எங்கள் அணியின் 12 வது படை வீரராக இருப்பார்” என கூறியுள்ளது.

தமிழக வீரரான இவர் கிரிக்கெட் வரலாற்றில் தனக்கெனெ தனி முத்திரை பதித்து பல சாதனைகளை புரிந்துள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர், இந்திய அணியில் பல போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய அணியில் தோனி விக்கெட் கீப்பராகவும், கேப்டனாகவும் அணியை தொடர்ந்து வழிநடத்தி வந்ததால், இவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்துவந்தது. ஆனாலும், அதையெல்லாம் கருத்தில், ஐபிஎல் போட்டிகள் மற்றும் கிரிக்கெட் கமெண்டேட்டராக வலம் வந்தார். இவரை பலருக்கும் கிரிக்கெட் வீரராக தெரிவதை காட்டிலும், மைக் பிடித்து கிரிக்கெட் பேசுவராகவே அறியப்பட்டார்.