Rishabh Pant Birthday Special: ஹீரோ ஆஃப் காபா..! எமனுடன் போரிட்டு கிரிக்கெட்டில் வாள் வீசிய ரிஷப் பண்ட்..!
Rishabh Pant Birthday: இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து தொடர்ந்து அணியில் நீடிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவாகும். அந்தவகையில், அறிமுகமான சில வருடங்களிலேயே இந்திய கிரிக்கெட்டில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டவர் பண்ட். கடந்த 2021ம் ஆண்டு காபாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அற்புதமான இன்னிங்ஸை விளையாடி பண்ட் இந்தியாவை வெற்றிக்கு அழைத்து சென்றதை இன்றுவரை யாராலும் மறக்க முடியாது.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இன்று தனது 27வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து தொடர்ந்து அணியில் நீடிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவாகும். அந்தவகையில், அறிமுகமான சில வருடங்களிலேயே இந்திய கிரிக்கெட்டில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டவர் பண்ட். கடந்த 2021ம் ஆண்டு காபாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அற்புதமான இன்னிங்ஸை விளையாடி பண்ட் இந்தியாவை வெற்றிக்கு அழைத்து சென்றதை இன்றுவரை யாராலும் மறக்க முடியாது. ரிஷப் பண்ட்டின் பிறந்தநாளில் அவரது வாழ்க்கை தொடர்பான சில சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்வோம்.
ரிஷப் பண்ட் பிறந்த இடம்:
ரிஷப் பண்ட் 04 அக்டோபர் 1997ம் ஆண்டு உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ருகாடியில் பிறந்தார். தனது 12 வயதில் கிரிக்கெட் விளையாட தொடங்கிய ரிஷப் பண்ட், அதன்பிறகு அம்மாவுடன் உத்தரகண்டில் இருந்து டெல்லிக்காக பயிற்சிக்கு வந்தார். டெல்லி வந்த ரிஷப் பண்ட் சோனெட் கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்தார். முதன்முறையாக டெல்லி வந்தபோது, ரிஷப் பண்ட் தனது தாயுடன் தங்க இடம் இல்லாமல் குருத்வாராவில் உள்ள் சாலையில் இரவை கழித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, ரிஷப் பண்ட் தனது ஆரம்ப கல்வி மற்றும் கிரிக்கெட்டை டெல்லியிலேயே கற்று, விரைவில் அண்டர் – 19 இந்திய அணியில் இடம் பிடித்தார்.
முதல் தர போட்டியில் கலக்கிய ரிஷப் பண்ட்:
2016ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக பண்ட் சதம் அடித்த நாளில், இந்தியன் பிரீமியர் லீக்கில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் வாங்கப்பட்டார். அப்போது, 1.9 கோடி கொடுத்து ரிஷப் பண்டை டெல்லி அணி வாங்கியது. இருப்பினும், ஐபிஎல் அறிமுக சீசனில் ரிஷப் பண்டால் சிறப்பாக விளையாட முடியவில்லை. மீண்டும் கடினமாக விளையாடி 22 அக்டோபர் 2015ம் ஆண்டு ரஞ்சி டிராபியின் முதல் தர போட்டியில் ரிஷப் பண்ட் அறிமுகமானார். பின்னர், 2015 – 16ல் விஜய் ஹசாரே டிராபியில் லிஸ்ட் ஏ அணியில் அறிமுகமானார். தொடர்ந்து, 2016 – 17 ரஞ்சி டிராபியில் மகாராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் ஒரு இன்னிங்ஸில் 308 ரன்கள் குவித்தார். இதன்மூலம், முதல் தர போட்டியில் முச்சதம் அடித்த மூன்றாவது இளம் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்:
2017ம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவுக்காக அறிமுகமாகும் வாய்ப்பை பெற்றார் ரிஷப் பண்ட். இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அறிமுகமான ரிஷப் பண்ட், அந்த போட்டியில் 3 பந்துகளை சந்தித்து 5 ரன்களில் அவுட்டானார். அதற்கு பிறகு, விஸ்வரூபம் எடுத்த ரிஷப் பண்ட் தொடர்ந்து நல்ல இன்னிங்ஸை விளையாடி, இன்று பண்ட் இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான் டெஸ்ட் தொடரில் கூட ரிஷப் பண்ட் அபார சதம் அடித்திருந்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட் சதம்:
2019ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ரிஷப் பண்ட். ஆஸ்திரேலிய மண்ணான சிட்னியில் நடந்த நான்காவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் பண்ட் 159 ரன்கள் குவித்தார். ஆனால், இந்த போட்டி டிராவில் முடிந்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 28 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். இதையடுத்து, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சாதனையை பின்னுக்கு தள்ளினார் ரிஷப் பண்ட்.
ஹீரோ ஆஃப் காபா:
– T20 WC winner
– Test hundred in AUS & in SA
– Test & ODI hundred in ENG
– The hero of Gabba
– Fastest fifty by an Indian in Tests
– Joint most hundreds by an Indian WK in TestsHappy birthday Rishabh Pant – one of the best players in this generation 🇮🇳 pic.twitter.com/CmQ5UwUofN
— Johns. (@CricCrazyJohns) October 4, 2024
காபாவின் ஹீரோ என்று அழைக்கப்படுபவர் ரிஷப் பண்ட். கடந்த 2020-21 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரின் ஒரு போட்டி காபாவில் நடைபெற்றது. இந்த போட்டியில், பண்ட் ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் எடுத்து, இந்திய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற உதவி செய்தார். இதையடுத்து, 33 ஆண்டுகளுக்கு பிறகு காபாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது. இந்த தொடரை இந்திய அனி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
விபத்து:
கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 30ம்தேதி பயங்கரமான கார் விபத்தில் ரிஷப் பண்ட் சிக்கினார். படுகாயமடைந்த ரிஷப் பண்ட், நூலிழையில் உயிர் தப்பினார். 2 வருடங்கள் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து மீண்டும் களத்திற்கு வந்தபோது, ரிஷப் பண்டை பார்த்த அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.