5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Robin Singh Birthday: இந்திய கிரிக்கெட் அணியில் கலக்கிய வெளிநாட்டவர்.. யார் இந்த ராபின் சிங்..?

Robin Singh: ராபின் சிங் தனது முன்னாள் நாடான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கினார். ஆனால், அந்த தொடரில் அவருக்கு இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்தது. இதற்கு பிறகு, இந்திய அணியின் அடுத்த வாய்ப்புக்காக 7 ஆண்டுகள் காத்திருந்தார். 1996 இல் டைட்டன் கோப்பையில் இந்திய அணிக்காக மீண்டும் களமிறங்கிய ராபின் சிங், 2001ம் ஆண்டு வரை தவிர்க்க முடியாத வீரராக இருந்து வந்தார்.

Robin Singh Birthday: இந்திய கிரிக்கெட் அணியில் கலக்கிய வெளிநாட்டவர்.. யார் இந்த ராபின் சிங்..?
ராபின் சிங் (Photo Credit: Owen Humphreys/PA Images via Getty Image)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 14 Sep 2024 09:54 AM

90 காலக்கட்டத்தில் கிரிக்கெட்டில் ராபின் சிங் என்ற பெயரை யாராலும் மறக்க முடியாது. பீல்டிங்கை பொறுத்தவரை சிறந்த வீரர் யார் என்று கேட்டால் தென்னாப்பிரிக்காவில் ஜான்டி ரோட்ஸ் பெயரையும், இந்தியாவில் ராபின் சிங் பெயரையும் சொல்வார்கள். அந்த அளவிற்கு இந்திய அணிக்காக பாய்ந்து பாய்ந்து பந்தை பிடித்து எதிரணி அடிக்கும் ரன்களை தடுப்பார். ரஞ்சி டிராபியில் தமிழ்நாடு அணிக்காகவும், கடின உழைப்பால் இந்திய அணியில் இடம் பிடித்த ராபின் சிங், தமிழரும் கிடையாது. இந்தியரும் கிடையாது என்றால் உங்களால் நம்ப முடியுமா..? ஆனால் அதுதான் உண்மை. இந்திய அணிக்காகவும், தமிழ்நாடு அணிக்காகவும் விளையாடியுள்ள ராபின் சிங், வெஸ்ட் இண்டீஸில் உள்ள டிரினிடாட்டில் பிறந்தவர். அப்புறம் எப்படி தமிழ்நாடு வந்தார்..? இந்திய அணியின் இடம் பிடித்தார் என்ற முழு வரலாறையும் இங்கு தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Surya Kumar Yadav Birthday: 31 வயதில் அறிமுகம்.. டி20யில் புயல் வேகம்.. சூர்யகுமார் யாதவின் கிரிக்கெட் பயணம்!

யார் இந்த ராபின் சிங்..?

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடியுள்ள ராபின் சிங் இன்று தனது 61வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதே நாளில் 1963ம் ஆண்டு ராபின் சிங் வெஸ்ட் இண்டீஸில் உள்ள டிரினிடாட் மற்றும் டொபாகோவின் பிரின்ஸ் டவுனில் பிறந்தார். ராபின் சிங்கின் உண்மையான பெயர் ரவீந்திர ராம்நாராயணன் சிங். இவரது தந்தையின் பெயர் ராம்நாராயண் மற்றும் தாயார் பெயர் சாவித்திரி சிங்.

1982- 83 காலகட்டத்தில் டிரினிடாட் யூத் கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கி வழிநடத்தினார் ராபின் சிங். அப்போது டிரினிடாட்டின் சீனியர் அணியில் இடம் பிடித்திருந்தார். அந்த நேரத்தில் ஹைதராபாத் புளூ என்ற அணி டிரினிடாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. அதில் ராபின் சிங்கின் ஆல்ரவுண்ட் ஆட்டத்தை பார்த்து மிரண்டுபோன ஹைதராபாத் ப்ளூஸின் இப்ராஹிம், ராபின் சிங்கின் தந்தையிடம் ராபினுக்கு இந்தியாவில் நல்ல எதிர்காலம் உள்ளது என்று கூறி, சென்னைக்கு வர சொன்னார். இதன் காரணமாக ராபின் சிங் குடும்பம், கடந்த 1984ம் ஆண்டு டிரினிடாட்டில் இருந்து இந்தியாவிற்கு முடிபெயர்ந்தது.

தமிழ்நாடு அணியில் இணைந்தது எப்படி..?

19 வயதில் சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை கல்வி படித்த ராபின் சிங், பல கிரிக்கெட் கிளப்களில் இணைந்து இந்தியாவில் கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். கிளப் கிரிக்கெட்டில் இவரது ஆட்டம் சிறப்பாக இருந்ததன் காரணமாக ரஞ்சிக் கோப்பைக்கான தமிழ்நாடு அணியில் ராபின் தேர்வு செய்யப்பட்டார். அங்கிருந்து ராபின் சிங்கின் கிரிக்கெட் ஆட்டம் தலை தூக்க, இந்திய குடியுரிமை பெற்று 1989ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியிலும் தேர்வு செய்யப்பட்டார்.

7 ஆண்டுகள் காத்திருப்பு:

ராபின் சிங் தனது முன்னாள் நாடான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கினார். ஆனால், அந்த தொடரில் அவருக்கு இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்தது. இதற்கு பிறகு, இந்திய அணியின் அடுத்த வாய்ப்புக்காக 7 ஆண்டுகள் காத்திருந்தார். 1996 இல் டைட்டன் கோப்பையில் இந்திய அணிக்காக மீண்டும் களமிறங்கிய ராபின் சிங், 2001ம் ஆண்டு வரை தவிர்க்க முடியாத வீரராக இருந்து வந்தார். மிடில் ஆர்டர் முதல் கீழ் வரிசை வரை எந்த இடத்திலும் பேட்டிங் செய்து அசத்துவார். ராபின் சிங் அன்றைய காலத்தில் திறமையான இந்திய வீரராக ஜொலித்தார்.

தமிழ்நாடு சாம்பியன்:

1988 ஆம் ஆண்டில், ராபின் சிங்கின் சிறப்பான ஆட்டத்தால் தமிழ்நாடு அணி இரண்டாவது முறையாக ரஞ்சி கோப்பையை வென்றது. இதன்பின், இரண்டாவது ரஞ்சி பட்டத்தை வெல்ல தமிழ்நாடு 33 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. தமிழகம் இதுவரை இரண்டு முறை மட்டுமே ரஞ்சி கோப்பையை வென்றுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:

ராபின் இந்தியாவுக்காக 136 ஒருநாள் போட்டிகளிலும் ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டியில் 1 சதம், 9 அரை சதங்கள் என மொத்தம் 2336 ரன்கள் குவித்ததோடு, 69 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். ஒரே ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் அவரால் 27 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

வெஸ்ட் இண்டீஸில் பிறந்து இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதுவரை ராபின் மட்டுமே இதைச் செய்த ஒரே வீரர். 1997-98ல் கொழும்பில் அவர் எடுத்த 100 ரன்கள்தான் அவரது அதிகபட்ச ஸ்கோர்.

ALSO READ: IND vs BAN: தோனியை விட அதிக ரன்கள்.. இந்திய அணிக்கு அச்சுறுத்தல் தரப்போகும் முஷ்பிகுர் ரஹீம்!

2004ம் ஆண்டு ஜனவரி மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற ராபின் சிங், இந்தியாவின் ஜூனியர் மற்றும் ஏ அணிகளுக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இதன் பிறகு தேசிய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் பயிற்சியாளராக இருந்தார். சுமார் இரண்டு வருடங்கள் இந்தப் பதவியில் இருந்த அவர், 2009 ம் ஆண்டு இந்த பதவியை விட்டு விலகினார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக பணியாற்றிய இவர், ராபின் சிங் ஸ்போர்ட்ஸ் அகாடமியை வழிநடத்தி வருகிறார்.

Latest News