5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Watch Video: தடுக்கப்பட்ட பந்து.. தடம் மாறி ஸ்டம்பில் டச்.. அவுட்டாகி அப்செட் ஆன ரோஹித்!

Rohit Sharma: இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவித்து 356 ரன்கள் முன்னிலை வகித்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பான தொடக்கத்தை வழங்கினர்.

Watch Video: தடுக்கப்பட்ட பந்து.. தடம் மாறி ஸ்டம்பில் டச்.. அவுட்டாகி அப்செட் ஆன ரோஹித்!
ரோஹித் சர்மா (Image: PTI and twitter)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 18 Oct 2024 17:28 PM

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து அரைசதம் கடந்தார். இது அவரது டெஸ்ட் வாழ்க்கையில் 18வது அரைசதமாக அமைந்தது. தொடர்ந்து, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டபோது, வித்தியாசமான முறையில் அவுட்டாகி ரோஹித் சர்மா வெளியேறினார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

ALSO READ: IND vs NZ: ரிஷப் பண்ட் இடத்தில் துருவ் ஜூரல் பேட்டிங்..? ஐசிசி விதி கூறுவது என்ன..?

அட்டகாசமான தொடக்கம்:

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவித்து 356 ரன்கள் முன்னிலை வகித்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பான தொடக்கத்தை வழங்கினர். டெஸ்ட் கிரிக்கெட்டில் சில காலமாக அதிரடியாக பேட்டிங் செய்து வரும் ரோஹித் சர்மா, இன்றும் அதே பாணியை கையில் எடுத்தார். இதனால், முதல் விக்கெட்டுக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா ஜோடி 72 ரன்கள் குவித்தது. 52 பந்துகளில் 6 பவுண்டரிகள் உதவியுடன் 32 ரன்கள் எடுத்திருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் பந்தில் அவுட்டானார்.

அரைசதம் அடித்து அவுட்:

இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸின் 22வது ஓவரை நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் வீசினார். அந்த பந்தை எதிர்கொண்ட ரோஹித் சர்மா தடுத்து நிறுத்தினார். அப்போது, தடுத்து நிறுத்தப்பட்ட அந்த பந்தானது பேட்டின் அடிப்பகுதியில் மோதி பின்னோக்கி சென்று ஸ்டம்ப்ஸில் பட்டது. ரோஹித் சர்மா பந்தை ஸ்டம்ப்ஸ் செல்வதை பார்ப்பதற்குள், இந்த நிகழ்வு நடந்து முடிந்தது. இதனால், ஆத்திரமடைந்த ரோஹித் சர்மா செய்வதறியாது கத்தினார். சிறிது நேரம் அதே இடத்தில் நின்று என்ன நடந்தது என்றே புரியாமல் ஏமாற்றத்துடன் வெளியேற்றினார். இது நியூசிலாந்து வீரர்களுக்கு எதிர்பாராத இனிப்பை வழங்கியதுபோல் நிச்சயம் இருந்திருக்கும். தற்போது இந்த வீடியோ இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. இந்த இன்னிங்ஸில் 63 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் சர்மா, 6 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உதவியுடன் 52 ரன்கள் குவித்திருந்தார்.


நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் நடந்தது என்ன..?

முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை 46 ரன்களுக்குள் சுருட்டிய நியூசிலாந்து அணி 400 ரன்களுக்கு மேல் குவித்தது. நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் ரச்சின் ரவீந்திரா 157 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உதவியுடன் 134 ரன்கள் குவித்தார். இன்றைய நாளில் டேரில் மிட்செல் (18), டாம் ப்ளன்டெல் (5), கிளென் பிலிப்ஸ் (14), மேட் ஹென்றி (8) ஆகியோர் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. இவர்களுக்கு பிறகு களமிறங்கிய டிம் சவுதி, ரச்சின் ரவீந்திராவுடன் இணைந்து எட்டாவது விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்தனர்.

ALSO READ: IPL 2025: ரிஷப் பண்ட் வேண்டாம்! புதிய கேப்டனை தேடும் டெல்லி கேபிடல்ஸ்.. என்ன காரணம்..?

டிம் சவுதி 73 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்தடுத்து நியூசிலாந்தின் விக்கெட்டை வீழ்த்தியது இந்தியா. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். இதுதவிர, ஜஸ்பிரித் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Latest News