5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

T20 World Cup: சாம்பியன் டிராபி தொடரில் கேப்டனாக ரோகித் ஷர்மா தொடர்வார்- பிசிசிஐ செயலாளர்

சாம்பியன்ஸ் டிராபி தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் இந்திய அணியை ரோகித் சர்மா வழிநடத்துவார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக ரோகித் செயல்படுவார் என்பதை அவர் உறுதி செய்துள்ளார். உலக கோப்பையை வென்ற உடன் டி20 கேப்டனாக இருந்த ரோகித் ஷர்மா அந்த போட்டியுடன் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

T20 World Cup: சாம்பியன் டிராபி தொடரில் கேப்டனாக ரோகித் ஷர்மா தொடர்வார்- பிசிசிஐ செயலாளர்
ஜெய் ஷா
intern
Tamil TV9 | Updated On: 08 Jul 2024 09:53 AM

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி  ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் ரோகித் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. கோப்பையை வென்ற  இந்திய அணிக்கு பரிசுத்தொகை வழங்கி  பாராட்டு விழாவும்  மும்பையில் நடத்தப்பட்டது. இந்த தொடருடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் அறிவித்தார். அவருக்கு மாற்றாக இந்திய டி20 அணியின் முழுநேர கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார் என தகவல் வெளியானது.  இதனை தொடர்ந்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா “டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளோம். சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தான் நமது அடுத்த இலக்கு. இந்த இரண்டு தொடர்களிலும் கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்பதை உறுதியாக நான் நம்புவதாக கூறினார்.

Also Read: T20 உலக கோப்பை வெற்றி கொண்டாட்டத்தில் கவனம் ஈர்த்த இளைஞர்.. என்ன செய்தார் தெரியுமா?

கடந்த ஓராண்டு காலத்தில் ரோகித் தலைமையிலான இந்திய அணி மூன்று ஐசிசி தொடர்களின் இறுதியில் விளையாடி உள்ளது. இதில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை நம்மால் வெல்ல முடியவில்லை. ஆனால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ராஜ்கோட்டில் நான் சொன்னது போல டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளோம் என்றும்,  இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் விரைவில் பொறுப்பேற்க உள்ளார். 2023-25-க்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி இப்போது முதல் இடத்தில் உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி பங்கேற்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், பிசிசிஐ செயலாளர்  ஜெய் ஷா, சாம்பியன் டிராபி மற்றும் உஅல டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ரோகித் கேப்டனாக தொடர்வார் என்று தெரிவித்துள்ளார்.

Also Read:  T20 உலக கோப்பையுடன் நாடு திரும்பிய வீரர்கள்

இந்திய அணியின் பயிற்சியாளர் விரைவில் பொறுப்பேற்க உள்ளதாக கூறிய பிசிசிஐ செயலாளர் யார் என்பது குறித்த எந்த தகவலையும் வெளியிடவில்லை. இருப்பினும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

Latest News