5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IPL 2025: ரோஹித்துக்கு அடிபோடும் பஞ்சாப் கிங்ஸ்.. மும்பை அணியின் முடிவு என்ன..?

Rohit Sharma: ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. 2020ம் ஆண்டுக்கு பிறகு ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை. இதன் காரணமாக, கடந்த ஐபிஎல் 2024ம் ஆண்டு ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் கேப்டனாக அறிவித்தது. அப்போதிலிருந்து, ஒட்டுமொத்த அணியிலும் ஒற்றுமையின்றி இருந்ததாக கூறப்படுகிறது.

IPL 2025: ரோஹித்துக்கு அடிபோடும் பஞ்சாப் கிங்ஸ்.. மும்பை அணியின் முடிவு என்ன..?
ரோஹித் சர்மா – ஷிகர் தவான்
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 12 Nov 2024 16:03 PM

ரோஹித் சர்மா: 2025 இந்தியன் பிரீமியர் லீக் மெகா ஏலத்தை காண மொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலக போகிறார் என்ற பேச்சு அதிகமாகி வருகிறது. ஒரு வேளை மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோஹித் சர்மா வெளியேறினால், எந்த அணியில் இணைவார் என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது. ஏற்கனவே, ரோஹித் சர்மாவை வாங்க டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் தலா 50 கோடி ரூபாய் ஒதுக்கியதாக சமீபத்தில் கூறப்பட்டது. கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ரோஹித் சர்மாவை தங்கள் அணிக்கு அழைத்ததாகவும் கூறப்பட்டது. இந்தநிலையில், நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ரோஹித் சர்மாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக ஒரு செய்தி தீயாய் பரவி வருகிறது.

ALSO READ: Viral Video: கிரிக்கெட் போதும்! பேட்மிண்டனில் பட்டையை கிளப்பிய தோனி.. வைரலாகும் வீடியோ!

ப்ரீத்தி ஜிந்தா அணிக்கு செல்வாரா ரோஹித் சர்மா..?

நடிகை ப்ரீத்தி ஜிந்தா உரிமையாளராக இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி, கடந்த 10 சீசன்களாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் தவித்து வருகிறது. மேலும், இதுவரை ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஒருமுறை கூட பட்டம் வென்றது கிடையாது. எப்படியாவது சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற நோக்கில், பல ஆண்டுகளாக பல கேப்டன்கள், பல வீரர்களை மாற்றி, பெயரை மாற்றி, ஜெர்சியை மாற்றி என அனைத்தையும் முயற்சி செய்தது. இருப்பினும், அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியாது. கடந்த 2 சீசன்களாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஷிகர் தவான், காயம் காரணமாக பெரும்பாலான போட்டிகள் விளையாட வில்லை. இந்தாண்டு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ஷிகர் தவான்.

இதன்காரணமாக, தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஒரு தலைமை தேவை படுகிறது. மறுபுறன், ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸை விட்டு வெளியேறி வேறு சில அணியில் சேரலாம் என்று ஊகங்கள் கிளம்புகிறது.

ரோஹித் சர்மாவை எடுக்க ப்ரீத்தி ஜிந்தாவுக்கு என்ன சிக்கல்..?

  • ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ரோஹித் சர்மா களமிறங்கினால், ப்ரீத்தி ஜிந்தா கண்டிப்பாக அவரை வாங்க விரும்புவார்.
  • பஞ்சாப் அணியில் ரோஹித் சர்மா இணைய வேண்டும் என்றால், முதலில் ரோஹித் ஏலத்தில் வர வேண்டும் என்பது முதல் நிபந்தனை.
  • ரோஹித் சர்மாவை ஏலத்தில் எடுக்க பஞ்சாப் கிங்ஸ் போதுமான பணம் இருக்க வேண்டும் என்பது இரண்டாவது நிபந்தனை.
  • ரோஹித் சர்மாவை வாங்க பஞ்சாப் கிங்ஸ் உரிமையாளரிடம் அவ்வளவு பணம் இருக்குமா இல்லையா என்பதைப் பொறுத்தே அமையும்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் எழுந்த கேப்டன் சர்ச்சை:

ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. 2020ம் ஆண்டுக்கு பிறகு ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை. இதன் காரணமாக, கடந்த ஐபிஎல் 2024ம் ஆண்டு ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் கேப்டனாக அறிவித்தது. அப்போதிலிருந்து, ஒட்டுமொத்த அணியிலும் ஒற்றுமையின்றி இருந்ததாக கூறப்படுகிறது. அதேபோல், ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இடையே அவ்வப்போது விவாதங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

ALSO READ: IPL 2025: பயிற்சியாளராக யுவராஜ் சிங்! ஒப்பந்தம் போட்ட டெல்லி..? வெளியான தகவல்!

மும்பை இந்தியன்ஸ் அணி இந்தாண்டு ரோஹித் சர்மாவை தக்கவைக்காது என்று கூறப்படுகிறது. மேலும், கடந்தாண்டு ரோஹித் ஷர்மாவின் வீடியோவும் வைரலானது, அதில் அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சேர்வது பற்றி பேசுவதாகக் கூறப்பட்டது. இருப்பினும், கோரிக்கைகள் எதுவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ரோஹித் சர்மா விஷயத்தில் மும்பை அணி என்ன முடிவு எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Latest News