5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Rohit Sharma: டி20 கிரிக்கெட் வரலாற்றில் ரோகித் சர்மா படைத்துள்ள சாதனைகள்..!

இந்தியா டி20 உலகக் கோப்பையை 2 முறை கைப்பற்றிய நிலையில், 2007 ஆம் ஆண்டு அணியில் அங்கம் வகிக்கும் வீரராகவும், 2024 ஆம் ஆண்டு அணியை வழிநடத்தும் கேப்டனாகவும் இருந்துள்ளார். 2 முறை கோப்பையை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் ஷர்மா பெற்றார்.

intern
Tamil TV9 | Updated On: 01 Jul 2024 14:45 PM
கடந்த ஒரு மாதமாக அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வந்த 2024 டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்று வரலாற்று சாதனைப்படைத்தது

1 / 11
உலக கோப்பையுடன் ரோகித் சர்மா

உலக கோப்பையுடன் ரோகித் சர்மா

2 / 11
தென் ஆப்பிரிக்காவுடன் நடைபெற்ற இறுதிப்போட்டியில், 7 ரன்கள் வித்தியாசத்தில் கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் புகழ்  கடந்த இரண்டு நாட்களாக பட்டிதொட்டி எங்கும் பரவிவருகிறது.

3 / 11
இந்தியாவிற்கு ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன்களின் வரிசையில், டி20 உலகக்கோப்பையை வென்றுகொடுத்த பட்டியலில் ரோகித் சர்மாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

4 / 11
இந்தியா டி20 உலகக் கோப்பையை 2 முறை கைப்பற்றிய நிலையில், 2007 ஆம் ஆண்டு அணியில் அங்கம் வகிக்கும் வீரராகவும், 2024 ஆம் ஆண்டு அணியை வழிநடத்தும் கேப்டனாகவும் இருந்துள்ளார்.  2 முறை கோப்பையை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் ஷர்மா பெற்றார்.

இந்தியா டி20 உலகக் கோப்பையை 2 முறை கைப்பற்றிய நிலையில், 2007 ஆம் ஆண்டு அணியில் அங்கம் வகிக்கும் வீரராகவும், 2024 ஆம் ஆண்டு அணியை வழிநடத்தும் கேப்டனாகவும் இருந்துள்ளார். 2 முறை கோப்பையை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் ஷர்மா பெற்றார்.

5 / 11
டி20 உலக கோப்பை அறிமுகப்படுத்த 2007ஆம் ஆண்டு எம்.எஸ்.தோனி தலைமையிலான டி20 உலகக்கோப்பையை வென்றது. அந்தப்போட்டியில், இறுதிப்போட்டியில் ரோகித் சர்மா தன் பங்கிற்கு 16 பந்துகளில் 30 ரன்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

6 / 11
டி20 போட்டிகளில் சிறந்த கேப்டனாக விளங்கிய ரோகித் ஷர்மா இந்திய அணிக்கு 50 வெற்றிகளைப் பதிவு செய்த முதல் கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார்.

7 / 11
ரோகித் சர்மா இதுவரை 159 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், டி20 கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

8 / 11
டி20 கிரிக்கெட்டில் இதுவரை 5 சதங்கள் அடித்துள்ள ரோகித் சர்மா, அதிக அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். டி20 கிரிக்கெட்டில் இதுவரை 32 அரைசதங்கள் அடித்துள்ளார். டி20 போட்டிகளில் 205 சிக்சர்களும், 383 பவுண்டரிகளும் அடித்த வீரர்களின் பட்டியலில் 3- வது இடத்தில் உள்ளார்.

9 / 11
ரோகித் சர்மா இதுவரை 4231 ரன்களைக் குவித்துள்ள நிலையில், அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ளார்.

10 / 11
டி20 கிரிக்கெட் தொடரில் 61 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் ஷர்மா செயல்பட்ட நிலையில், அதில் 50 போட்டிகளில்  இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.

11 / 11
Latest Stories