Rohit Sharma: டி20 கிரிக்கெட் வரலாற்றில் ரோகித் சர்மா படைத்துள்ள சாதனைகள்..! - Tamil News | Rohit Sharma's achievements in the history of T20 cricket..! | TV9 Tamil

Rohit Sharma: டி20 கிரிக்கெட் வரலாற்றில் ரோகித் சர்மா படைத்துள்ள சாதனைகள்..!

Updated On: 

01 Jul 2024 14:45 PM

இந்தியா டி20 உலகக் கோப்பையை 2 முறை கைப்பற்றிய நிலையில், 2007 ஆம் ஆண்டு அணியில் அங்கம் வகிக்கும் வீரராகவும், 2024 ஆம் ஆண்டு அணியை வழிநடத்தும் கேப்டனாகவும் இருந்துள்ளார். 2 முறை கோப்பையை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் ஷர்மா பெற்றார்.

1 / 11கடந்த

கடந்த ஒரு மாதமாக அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வந்த 2024 டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்று வரலாற்று சாதனைப்படைத்தது

2 / 11

உலக கோப்பையுடன் ரோகித் சர்மா

3 / 11

தென் ஆப்பிரிக்காவுடன் நடைபெற்ற இறுதிப்போட்டியில், 7 ரன்கள் வித்தியாசத்தில் கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் புகழ் கடந்த இரண்டு நாட்களாக பட்டிதொட்டி எங்கும் பரவிவருகிறது.

4 / 11

இந்தியாவிற்கு ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன்களின் வரிசையில், டி20 உலகக்கோப்பையை வென்றுகொடுத்த பட்டியலில் ரோகித் சர்மாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

5 / 11

இந்தியா டி20 உலகக் கோப்பையை 2 முறை கைப்பற்றிய நிலையில், 2007 ஆம் ஆண்டு அணியில் அங்கம் வகிக்கும் வீரராகவும், 2024 ஆம் ஆண்டு அணியை வழிநடத்தும் கேப்டனாகவும் இருந்துள்ளார். 2 முறை கோப்பையை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் ஷர்மா பெற்றார்.

6 / 11

டி20 உலக கோப்பை அறிமுகப்படுத்த 2007ஆம் ஆண்டு எம்.எஸ்.தோனி தலைமையிலான டி20 உலகக்கோப்பையை வென்றது. அந்தப்போட்டியில், இறுதிப்போட்டியில் ரோகித் சர்மா தன் பங்கிற்கு 16 பந்துகளில் 30 ரன்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

7 / 11

டி20 போட்டிகளில் சிறந்த கேப்டனாக விளங்கிய ரோகித் ஷர்மா இந்திய அணிக்கு 50 வெற்றிகளைப் பதிவு செய்த முதல் கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார்.

8 / 11

ரோகித் சர்மா இதுவரை 159 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், டி20 கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

9 / 11

டி20 கிரிக்கெட்டில் இதுவரை 5 சதங்கள் அடித்துள்ள ரோகித் சர்மா, அதிக அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். டி20 கிரிக்கெட்டில் இதுவரை 32 அரைசதங்கள் அடித்துள்ளார். டி20 போட்டிகளில் 205 சிக்சர்களும், 383 பவுண்டரிகளும் அடித்த வீரர்களின் பட்டியலில் 3- வது இடத்தில் உள்ளார்.

10 / 11

ரோகித் சர்மா இதுவரை 4231 ரன்களைக் குவித்துள்ள நிலையில், அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ளார்.

11 / 11

டி20 கிரிக்கெட் தொடரில் 61 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் ஷர்மா செயல்பட்ட நிலையில், அதில் 50 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!