RR vs SRH: 36 ரன்கள் வித்தியாசத்தில் RR-ஐ வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது SRH..!
சன்ரைசர்ஸ் ஐதரபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல் அணிகள் மோதிய குவாலிஃபையர் 2-வது போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி, சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது.
நடப்பு 2024 ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள், ப்ளே ஆஃப் சுற்றுகள் முடிவடைந்து, இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற ஐபிஎல் தொடரில் 4 அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு சென்ற நிலையில், குவாலிஃபையர் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில், கொல்கத்தா அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதிபெற்றது. அடுத்து நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில், ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில், ஆர்சிபி அணியை வீழ்த்தி குவாலிஃபையர் 2-க்கு ராஜஸ்தான் அணி தகுதி பெற்றது. இந்நிலையில், குவாலிஃபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் மோதின . இந்தபோட்டியில் வெற்றிபெற்ற சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி வெற்றிபெற்றது. மே 26 ஆம் தேதி சென்னை சேப்பாக்கில் அமைந்துள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் மோதுகின்றனர்.
Also Read: கிஷான் விகாஷ் பத்ரா: ரூ.1,000 போட்டால் ரூ.2 ஆயிரம் ரிட்டன்.. முழு விவரம்
சென்னையில் உள்ல சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 175 ரன்களை சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா 12 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ராகுல் 37 ரன்களில் அவுட் ஆனார். ஏய்டன் மார்க்ராம் வந்த வேகத்தில் 1 ரன்னில் அவுட் ஆனார். மறுபுறம் பொறுப்பாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆரம்பத்தில் 4 விக்கெட்டுகளை இழந்து ஐதராபாத் 99 ரன்களை மட்டுமே சேர்த்தது. நிதிஷ் ரெட்டி 5 ரன்களிலும், ஹென்ரி கிளாசன் 50 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது 18 ரன்கள், ஜெய்தேவ் உனத்கட் 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் பேட் கம்மின்ஸ் 5 ரன்கள் எடுத்த நிலையில், , 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் 175 ரன்களைச் சேர்த்தது.
Also Read: Tasmac: புது வகையான பீர்கள் அறிமுகம்.. டாஸ்மாக் கடைகளில் அதிகரித்த பீர் விற்பனை…!
176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் ஆரம்பம் முதலே தருமாறியது. பேட்டிங் வரிசையில் எப்போதும் அதிரடியாக விளையாடி வந்த ராஜஸ் அணி வீரர்கள் ஆரம்பம் முதலே ரன்களை சேர்க்க முடியாமல் தடுமாறினர். டாம் 10 ரன்களும், ஜெய்ஸ்வால், 42 ரன்களும், ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் 10 ரன்களும், ரியான் பராக் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் டக் அவுட் ஆனார். ஹெட்மயர் 4 ரன்களிலும், பவல் 6 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். துருவ் ஜுரல் மட்டும் தனி ஆளாக களத்தில் நின்ரு 35 பந்துகளில் 56 ரன்கள் குவித்தார். இறுதியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே ராஜஸ்தான் ராயல்ஸ் சேர்த்தது. இதனால், 36 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மே 26 ஆம் தேதி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றனர்.