Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்த இரு நாடுகள் பங்கேற்க தடை! ஏன் தெரியுமா?
Olympics 2024: கடந்த 2020ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் மொத்தமாக 7 பதக்கங்களை வென்றிருந்தனர். இதுவே ஒரு ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற அதிகபட்சமாக பதக்கங்கள் ஆகும். கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் வென்ற ஒரே வீரர் நீரஜ் சோப்ரா மட்டுமே.
பாரிஸ் ஒலிம்பிக்: 2024ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் வருகின்ற ஜூலை 26ம் தேதி முதல் பிரமாண்டமாக தொடங்குகிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த விளையாட்டுப் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் இந்தியாவை சேர்ந்த 120 விளையாட்டு வீரர்களும் அடங்குவர். வருகின்ற ஜூலை 26ம் தேதி தொடக்க விழாவுடன் தொடங்கும் இந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் காரணமாக இந்த ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்கும் அனைத்து நாடுகளின் ரசிகர்களின் பார்வையும் தற்போது ஒலிம்பிக் போட்டி மீது பதிந்துள்ளது. இப்படி இருக்க, இந்த விளையாட்டுப் போட்டியில் 2 முக்கிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்க தேசிய ஒலிம்பிக் கமிட்டி அனுமதி அளிக்கவில்லை. இந்தநிலையில், எதற்காக 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு நாடுகள் பங்கேற்க தடையில்லை. அதற்கு என்ன காரணம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ALSO READ: Muharram Holiday: பள்ளி, கல்லூரி, வங்கி இன்று லீவ்.. மொஹரம் பண்டிகையொட்டி பொது விடுமுறை!
இரண்டு நாடுகளுக்கு தடை:
வெளியான தகவலின்படி, இம்முறை 206 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பாரிஸ் ஒலிம்பிக் 2024 இல் பங்கேற்கின்றனர். ஆனால் இம்முறை ரஷ்யா மற்றும் பெலாரஸ் அணிகளை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் வழங்கவில்லை. 36 ரஷ்ய விளையாட்டு வீரர்கள் மற்றும் 22 பெலாரசியர்கள் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு நாடுகளுக்கும் தடை ஏன்?
உக்ரைனில் நடந்து வரும் போர் காரணமாக, இரு நாடுகளும் ஒலிம்பிக்கில் குழு நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால் தனிநபர் பிரிவில் உள்ள வீரர்கள் ஒலிம்பிக்கில் நடுநிலையாக பங்கேற்கலாம். அதாவது, அவர்கள் தங்கள் கொடிகள், கீதங்கள் மற்றும் சின்னங்கள் இல்லாமல் தனிப்பட்ட நடுநிலை விளையாட்டு வீரர்களாக போட்டியிடுவார்கள். ஆனால் இந்த இரு நாட்டு வீரர்கள் பதக்கங்களை ஒருவேளை வென்றாலும் அந்தந்த நாட்டு தேசியக் கொடியை அவர்கள் ஏந்தவோ அல்லது மேலே பறக்கவிடவோ முடியாது. உக்ரைனில் நடந்து வரும் போருக்கு ஆதரவாக இருநாடுகளும் செயல்படுவதால் ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய இருநாடுகளும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து 120 விளையாட்டு வீரர்கள் பங்கேற்பு:
பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் பங்கேற்க இந்தியாவை சேர்ந்த 120 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கிறார்கள். அதிகபட்சமாக இம்முறை ஒலிம்பிக்கில் 329 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் பெரும்பாலான தடகள நிகழ்வுகள் ஸ்டேட் டி பிரான்ஸில் (பாரிஸின் புறநகரில் உள்ள ஒலிம்பிக் மைதானம்) நடைபெறுகின்றன.
ஒலிம்பிக் போட்டிகளை தொடர்ந்து பாராலிம்பிக் போட்டிகள் வருகின்ற ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் தொடங்குகிறது.
கடந்த 2020ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் மொத்தமாக 7 பதக்கங்களை வென்றிருந்தனர். இதுவே ஒரு ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற அதிகபட்சமாக பதக்கங்கள் ஆகும். கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் வென்ற ஒரே வீரர் நீரஜ் சோப்ரா மட்டுமே. கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றார். அதனை தொடர்ந்து, பளு தூக்குதல் போட்டியில் மீராபாய் சானு உள்ளிட்ட 2 வீராங்கனைகள் வெள்ளி பதக்கங்களும், 4 பேர் வெண்கலப் பதக்கமும் வென்றனர். ஒட்டுமொத்த ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா இதுவரை மொத்தமாக 35 பதக்கங்களை வென்றுள்ளது.